மேலறைப் பேச்சு 24

லெந்து காலத்தின் இருபத்தி நான்காம் நாள் தியானம்


திருமறைப் பகுதி: தூய யோவான் 15:26-27

கார்மேகம் சூழ்ந்தது போன்ற சோகத்தில் இயேசுவைக் கண்டோம். அவருடைய ஊழியத்திற்கும், போதனைக்கும் கிடைத்த பகைமை, துன்புறுத்தல், புறக்கணிப்பு, மறுதலிப்பு, இவைகளின் மத்தியில் தம்முடைய திருப்பணி உயிர் பெற நம்பிக்கையின் இரண்டு ஒளிக்கீற்றுகளை இயேசு காண்கிறார்.

ஒன்று, பிதா அனுப்பின சத்திய ஆவியானவரின் சான்று பிறிதொன்று ஆதிமுதல் இதுகாறும் அவருடனிருந்த சீடர்களின் சான்று. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களுக்குப்பின் கிறிஸ்தவ விசுவாசம் இப்படித்தானே தழைத்தோங்கியது. சீடர்களின் அனுபவ சட்சியும் பிதாவினிடமிருந்து வந்த சத்திய ஆவியின் சான்றும் இணைந்துதானே இவ்வுலகில் இயேசுவின் திருப்பணி தொடர்ந்து பெருகி வருகிறது. (கவனிக்கவும்: தேற்றரவாளர் பற்றிய மூன்றாவது கூற்று: “அவர் சான்று பகருபவர்”.


அன்பு தங்கை/தம்பி! நீ இயேசுவை அறிந்திருக்கிறாயல்லவா? நீ அவருக்காக சான்றுபகர அழைக்கப்படுகிறாய். நீ தான் அவர் நம்பிக்கை. தூய ஆவியானவர் உன்னோடிருந்து
உன்னுடைய சாட்சியை உறுதிபடுத்துவார்.

ஜெபம்:
இயேசுவே என் மீட்பரே, என் பெலனே, மகிழ்வோடு உமக்காக சான்று பகருவேன். நான் கண்டுகொண்ட சத்தியத்திற்கேற்ப நான் வாழ்ந்துகாட்ட தூய ஆவியினால் என்னை பெலப்படுத்தும்.

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், என் பேரில் நீ கொண்ட பற்றுறுதியைக் கண்டு வியக்கிறேன். எனக்காக சான்று பகரும் உன் ஆர்வத்தைக் கண்டு மகிழ்கிறேன். பிதாவினிடத்திலிருந்து வந்த தூய ஆவியாக நானே உன்னோடிருப்பேன். உன் பற்றுறுதிக்கேற்ப உன் வாழ்வை சீரமைக்க நாங்கள் உனக்கு துணைபுரிவோம்.

Devotion for the Twenty fourth day in Lent
Read John 15:26-27

We just met Jesus in the gloom of the dark clouds. However, here is a silver lining! In the midst of hatred, persecution, denial and disregard for his message and ministry, Jesus confirms two streaks of hope for the survival of his mission: the witness of the Spirit of Truth and the witness of the disciples who accompanied him all the time. That is how the faith of Christianity spread after the earthly life of Jesus Christ. The personal experience of the disciples and the witnessing Spirit of Truth from the Father together continued the ministry of Jesus. (Note: Third Paraclete saying: Holy Spirit-“ the spirit of Witnessing”).

Dear sister/brother! You have known Jesus. You are invited to bear witness. You are his hope. The Holy Spirit joins you in strengthening your witness.

Prayer:
Jesus, my redeemer and my strength, I am excited to be your witness. Strengthen me with the counselor so that I may lead a life which bears witness to the Truth I have known.

Jesus might say…..
My child, I am thrilled you believe in me. I like your passion to witness for me. I am with you in the person of the counselor I sent you from the Father. We shall help you mold your life to befit your faith.

James Srinivasan & Grace.

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்,
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்,

தென்னிந்தியா.