24 ஏப்ரல் 2022

யோவான் 20:11-18

• இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு வெறுமையான கல்லறை, அவர் அளித்த காட்சிகள் போன்றவைகள் ஆதாரங்களாக காணப்படுகின்றன. இயேசு மகதலேனா மரியாளுக்கு அளித்த காட்சியை இங்கு பார்க்கலாம்.

• முதலாம் உடன்படிக்கையில் தொடக்கநூல் / ஆதியாகமம் 22ல் பலவீனப்பட்டு சோர்வடைந்து காணப்பட்ட யாக்கோபுவை கடவுள் பலப்படுத்தி அவனை பெரிய இனமாக்குகின்றார். இவ்வாறே தாவீதை ஆற்றலுற செய்வதை நாம் திருப்பாடலில் படிக்கின்றோம்.

• திருத்தூதர்பணிகள் / அப்போஸ்தலர் 20:7-12ல் அங்கு கூடியிருந்தவர்கள் அப்பம் பிட்டனர். இந்நிகழ்வின் மூலம் அவர்கள் பலமடைந்து நற்செய்தியை தொடர்ந்து எடுத்து செல்வதற்கு உதவியாக அமைந்தது.

• யோவான் 20:11-18ல் இயேசு மகதலேனா மரியாளுக்கு அளித்த காட்சி கூறப்பட்டுள்ளது. பவுல் இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி கூறும்போது மகதலேனா மரியாளின் பெயரை திட்டமிட்டே நீக்கியிருக்கலாம்

(1 கொரிந்தியர் 15:1-9). எனினும், இயேசு கொடுத்த காட்சியால் மகதலேனா மரியாள் பலமடைந்து பெண் சீடராக உயிர்த்தெழுந்த செய்தியை முதலில் திருத்தூதுவர்களுக்கு எடுத்துச் சொன்னாள். மேலும், இவள் ஓர் நற்செய்தி நூலை எழுதியதாகவும் திருச்சபை வரலாறு எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. எனினும், ஆணாதிக்க சிந்தனையின் காரணமாக இவளின் நூல் புதிய ஏற்பாட்டிற்குள் இடம்பெறவில்லை.

ஆக்கம்: அற்புதம்