திருச்சபை அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையுடன் கடவுளின் ஆட்சியை நோக்கிச் செயல்படுபவர்கள் பேறுபெற்றோர்; அவர்கள் கடவுளின் மக்கள். திருச்சபை இறையாட்சிக்காக உழைக்கும் ஒரு கருவி. இது அனைத்து மக்களுக்குமானது. வாழ்வை உறுதி செய்ய, தீமைகளை கடந்து, இறையாட்சிக்காக உழைப்பது அர்த்தத்தை தரும்.

Blessed are those who work towards the Reign of God with the conviction
that the Church is for all people. They are people of God. The tendency to understand everything as ‘divide’ including God must be questioned. It is necessary to look at God (Father – Son – Holy Spirit) in history and to live towards God’s Reign by emphasizing the humility (Psalm 8) and relationship.

திருமறையின் வெளிச்சத்தில்…

எலியாவின் நிலைப்பாடு: படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்துவருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர். ஊம் பலிபீடங்களை தகர்த்துவிட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரை பறிக்கத் தேடுகின்றனர் (10). கடவுளின் நிலைப்பாடு: ஆயினும் பாகாலுக்கு மண்டியிடாமலும் அவனை முத்திசெய்யாதவர்களுமான ஏழாயிரம் பேரை மட்டும் நான் இஸ்ரயேலில் விட்டு வைப்பேன்(18). தன்னைத் தாண்டியந ல்லதை அங்கீகரிக்க வேண்டும்.

1 அரசர்; 19:1 – 4, 8 –15.

Elijah’s stance: “I have been very zealous for the Lord, the God of hosts; for the Israelites have forsaken your covenant, thrown down your altars, and killed your prophets with the sword. I alone am left, and they are seeking my life, to take it away (10).” God’s stance: Yet I will leave seven thousand in Israel, all the knees that have not bowed to Baal, and every mouth that has not kissed him (18) There is a need recognize good beyond self. 1 Kings 19:1 – 4, 8 –15.

நம்பிக்கை இழக்காமல் கடவுளுடன் பயணிப்பது அவசியம் (திருப்பாடல் 42:5,11, 43:5). கிறிஸ்துவுக்குள் எந்த வேறுபாட்டுக்கும் இடமில்லை (கலாத்தியர் 3: 28 – 29). விடுதலை, வாழ்வு… இயேசுவின் முன்னெடுப்பு. அதனை முழுமையாக அங்கீகரிக்காதோர் இயேசுவை அந்த இடத்தை விட்டு செல்லும்படி கூறியமை வரலாறு. லூக்கா 8:26 –39. 

It is necessary to journey with God without losing hope  (Psalm 42: 5,11, 43: 5) There is no space for any difference in Christ (Galatians 3: 28 - 29)  Liberation, life … the initiation of Jesus. History has it that those who did not fully recognize it told Jesus to leave the place.
 Luke 8:26 –39. 

தாமே நல்லவர்கள், தாமே கடவுளோடு… என கூறிக்கொண்டு ஆதிக்கவாதத்தை பாவித்து இயேசு போன்ற நன்மைவாதிகளை அகற்றுவது இறையாட்சிக்கு பொருத்தமானதல்ல. இதனை திருச்சபை செய்தால் அது கடவுளுடைய ஆட்சிக்குள் இல்லை.

Rev. SDP Selvan.

It is not appropriate for God’s Reign, to remove person like Jesus who was a just by using hegemony to claim that they are good and that they are with God. If the church does this it is not under the Reign of God.

மன்றாட்டு: கடவுளே, சுயநலத்தை நிராகரித்து, நன்மைக்காக உறவுடன் வாழ அருள் தாரும். இறையாட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

Prayer: God, Grant us the grace to reject selfishness and to live for
 good with relationship, Through God's Reign. Amen.

அருட்பணி SDP.செல்வன்
அருட்பணி SDP.செல்வன்

யாழ் குரு முதல்வர்,
இலங்கை திருச்சபை.