11வது யாழ் குருமுதல்வர்

( இலங்கை திருச்சபை – கொழும்பு மறைமாவட்டம்)


1796ஆம் ஆண்டு இலங்கையில் இங்கிலாந்து திருச்சபையானது தனது பணிகளை விஸ்தரித்து; 1818ஆம் ஆண்டு கல்கத்தா மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு குருமுதல்வர் பிராந்தியத்தினை அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி அன்று தொடங்கியது.
கொழும்பு குருமுதல்வர் பிராந்தியம் உருவாகி சுமார் 107 வருடங்களின் பின்பாக; பேராயர் கார்ணியர் மார்க் றுடொல்ப் கார்ப்பென்டர் அவர்களில் காலத்தில் 1925ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி யாழ் குருமுதல்வர் பிராந்தியம் உருவாக்கப்பட்டது.


இன்று வரையில் 10 குருமுதல்வர்கள் இந்த பணியில் இணைந்து தமது பணிகளை யாழ் மக்களின் நலன் கருதி செய்து வருகின்றார்கள். இதன் வரிசையில் 11வது குருமுதல்வராக அருட்பணி.S.D.P.செல்வன் தனது பணியை ஆரம்பிக்க உள்ளார்.

யார் இந்த S.D.P. செல்வன்

1994இல் இரண்டாம் தர இறையியல் இளமானிப் இறையியல் கல்வி நிறைவு

29 மே 1994 உதவி அருட்பணியாளராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

உதவி அருட்பணியாளராக இறைப்பணி
1994 – 1995 கொட்டகலை
1995 – 1996 டிக்கோயா

11 ஜூன் 1995 அருட்பணியாளராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
14 ஜூன் 1995 அருட்பணி குணவதனி (NSM)அவர்களோடு இல்லறவாழ்வில் இணைந்து கொண்டார்.

அருட்பணியாளராக இறைப்பணி
1995 – 1996 டிக்கோயா
1997 – 1998 திருகோணமலையில் (முகாமைக்குரு)
1999 – 2000 கிளிநொச்சி
2001 -2004 வவுனியா
2005 – 2006 தண்ணீருற்று முல்லைத்தீவு
2007 – 2008 பேராதனை பல்கலைக்கழக சிற்றாலயம் பொறுப்புக் குரு
2009 – 2010 மட்டக்களப்பிலும்
2013 – 2017 பளை மற்றும் உடுத்துறை
2018 – 2021 கோப்பாய்

இலங்கை இறையியல் கல்லூரியிலும் தனது பணிகளை செய்து வருகிறார்.

செல்வநாதன் மற்றும் கமலா ஆகியோருக்கு 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09திகதி அன்று கிளிநொச்சியில் உள்ள தருமபுரத்தில் செல்வநாதன் டேவிட் பரிமள செல்வன் (S.D.P. செல்வன் ) பிறந்தார்.
தனது 22வது வயதில் இலங்கை இறையியல் கல்லூரியில் இறையியல் கல்விற்காக இணைந்து 1994இல் இரண்டாம் தர இறையியல் இளமானிப் இறையியல் பட்டம் பெற்றார்.
1994ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி அதிவண.பேராயர் கெனத் பர்னான்டோ அவர்களினால் உதவி அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அருட்பணியாளர் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி அருட்பணி குணவதனி (NSM)அவர்களோடு இல்லறவாழ்வில் இணைந்து கொண்டார்.
1994 – 1995 ஆம் ஆண்டு கால பகுதியில் கொட்டகலையிலும் , 1995 – 1996ஆம் ஆண்டு கால பகுதியில் டிக்கோயாவிலும் உதவி அருட்பணியாளராக தனது பணிகளை செய்துள்ளார்.
1997 – 1998 ஆம் ஆண்டில் புனித நிக்கலஸ் ஆலயம் திருகோணமலையில் முகாமைக்குருவானவராகவும் தனது பணிகளை செய்துள்ளார்.
1999 – 2000 ஆம் ஆண்டில் கிளிநொச்சி,
2001 -2004 ஆம் ஆண்டுகளில் வவுனியா,
2005 – 2006 ஆம் ஆண்டுகளில் தண்ணீருற்று முல்லைத்தீவு,
2007 – 2008 ஆம் ஆண்டுகளில் பேராதனை பல்கலைக்கழக சிற்றாலய பொறுப்புக் குருவாகவும் இலங்கை இறையியல் கல்லூரியிலும் தனது பணிகளை செய்துள்ளார்.
2009 – 2010 ஆம் ஆண்டில் வாழைச்சேனையிலுள்ள மட்டக்களப்பிலும் தனது பணிகளை ஆற்றியுள்ளார்.
2013 – 2017 ஆம் ஆண்டுகளில் பளை மற்றும் உடுத்துறை ஆலயங்களிலும் சேவை செய்துள்ளார்.
2018 – 2021 வரையிலான கால பகுதியில் கோப்பாய் பகுதிகளில் தனது திருப்பணிகளை செய்து வருகின்றார்.

அருட்பணி.செல்வன் தனது பணிக் காலங்களில் வன்னி இறையியல், மனிதத்தின் உயிர்ப்பு இறையியல், வாழும் இயேசு சமூகம், இயேசு போன்ற அப்பாவி நேர்மையானவர்களின் கொலைகளை கண்டிக்கின்றோம் என்கின்ற பல இறையியல் புத்தகங்கள், பிரதிகள் , ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தெளிவு பத்திரிக்கையின் பிரதம ஆசிரியராகவும் தனது பணிகளை செய்து வருகின்றார்.

அருட்பணி.செல்வன் போன்ற விடுதலை இறையியலாளர் யாழ் குருமுதல்வர் பொறுப்பினை ஏற்று இறையாளுகைக்கு நேராக திருச்சபையை வழிநடத்துவது கடவுள் எமக்கு அருளிய மாபெரும் கொடை.
தடைகளை உடைத்து இன்னும் சிறப்பாக இறைப்பணிசெய்ய இறைவேண்டலுடன் இயேசு இயக்கத்தின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

இப்படியான பல்வேறுபட்ட திருப்பணிகளையும், இயேசு சமூக சிந்தனைகளையும், சிறந்த சமுக நலவதியுமான அருட்பணி.செல்வன் அவர்களை யாழ் குருமுதல்வராக தனது பணிகளை; புதிய நோக்குடன் செய்திட, புரட்சிகளை உருவாக்க, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கைவிடப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுத்து பணிகள் செய்திட வாழ்த்துகின்றோம்.

சபிலாஸ் நேசராஜா
சபிலாஸ் நேசராஜா

அருட்பணியாளர், இலங்கை திருச்சபை.