தென்னிந்திய திருச்சபையின் மதுரை – ராமநாதபுரம் பேராயத்தின் புதிய பேராயராக அருட்பணி. டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார். பேராயர் திருநிலைப்படுத்தல் வழிபாடு 2022 ஜூலை 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மதுரை, தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் நடைபெற்றது.

அருட்பணி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் 1964 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி பிறந்தார், 2006 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி உதவி குருவாகவும், 2007 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி ஆயராகவும் அருட்பொழிவு செய்யப்பட்டார். விருதுநகரில் உள்ள வி.எச்.என்.எஸ்.என் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரையில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் (TTS) இறையியல் (B.Th) மற்றும் இளங்கலை தேவியியல் (B.D) படப்பிடிப்பை முடித்தார்.

இவர் சிறந்த ஆயர் அருட்பணி அனுபவம் கொண்டவர். மதுரை-ராமநாதபுரம் பேராயத்தின் திண்டுக்கல் கிழக்கு, பனையடியாபட்டி, சிவகாசி கிராமம், சாட்சியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தெ. இ. தி. மதுரை பேராலயம் போன்ற பல ஊழியதளங்களில் திறம்பட பணியாற்றினார். சபைகளை வலுப்படுத்துவதிலும், புதிய தேவாலயங்கள், திருச்சபை நிறுவனங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி செயல்பட்டவர்.
மதுரை – ராமநாதபுரம் பேராயத்தில் அருட்பணி. டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பேராயத்தின் குருத்துவ செயலாளராகப் பணியாற்றியவர். இவர் தெற்கு வட்டகை மன்றம், மத்திய வட்டகை மன்றத்தின் தலைவராக இருந்தார். தலித் மேம்பாட்டுத் துறையின் இயக்குநராகவும், மண்டபசாலையில் உள்ள அமைதி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

திருநெல்வேலி, கர்நாடகா வடக்கு, கர்நாடகா தெற்கு போன்ற பேராயங்களுக்கு பேராயர் தேர்தல் பார்வையாளராக தெ. இ. தி மாமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். பேராயர். ஜெயசிங், கல்வி மேம்பட்டு அருட்பணிகளில் திறம்பட ஈடுபட்டு, மதுரை – ராமநாதபுரம் பேராயத்தின் பனையடிப்பட்டி, சிப்பிப்பாறை, ஏழுஆயிரம்பனை, எலுமிஞ்சங்கைப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கோடம்பட்டி, கோபாலபுரம், கொகிலாபுரம், கோபாலாபுரம், ஆலம்பண்ணை தொடக்கப் பள்ளிகள் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பொறுப்பு வகித்துத் திறம்பட பணியாற்றினார்.

தெ. இ. தி மதுரை ராமநாதபுரம் பேராயத்தின் 7வது பேராயர் திருநிலைப்படுத்தல் வழிபாடு முதன்மை பேராயர்கள், ஏனைய தென்னிந்திய திருச்சபையின் பேராயர்கள், பொது செயலர் திரு. சி.பெர்னாண்டாஸ் இரத்தின ராஜா, மாண்புமிகு பொருளாளர் பேராசிரியர் பி. விமல் சுகுமார் ஆயர்கள், இறைமக்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

“வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது”

திருப்பாடல் 9: 18

“வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது” திருப்பாடல் 9: 18 என்ற கவியினை நினைவுபடுத்தி வறியவரும், எளியோரும் என்றும் சமூகநீதியின் கடவுளால் மறக்கப்படுவதில்லை என்ற சொற்களை பேராயர் தனது ஏற்புரையில் இறைமக்களுடன் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

வரலாற்று சிறப்புமிக்க தெ. இ. தி மதுரை ராமநாதபுரம் பேராயத்தின் 7வது பேராயர் திருநிலைப்படுத்தப்பட்டு வரலாற்றில் புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்துள்ள பேரருட்பணி. அறிவர். ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் அவர்களை இயேசு இயக்கத்தின் சார்பாக இன்னும் திறம்பட இறைப்பணியாற்ற அன்புடன் வாழ்த்துகிறோம்.

ஜெபசிங் சாமுவேல்,
ஜெபசிங் சாமுவேல்,

அருட்பணியாளர்.

வறுமையும் கிறிஸ்தவத்தின் மறுமொழியும்
Christian Response to Poverty # திருமறைப் பகுதிகள் ஆமோஸ் 8: 4 – 7யாக்கோபு …
அதிகார வர்க்கம் ஒடுக்குகின்ற போது…..
திருப்பாடல் 58 நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் …