முழக்கம் 07

திருச்சபையில் தங்களை உயர்ந்த சாதியினர், மேல் வகுப்பினர் என்று நினைத்துக் கொண்டுஇருப்பவர்கள், ஏழை, எளியமக்கள், தலித்துகள் ஏதேனும் ஒரு பொறுப்பினை எடுத்துச் செய்கிறபோது, தலித்துகளின் ஆளுமைத்திறனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையினாலும் சாதி திமிரினாலும்” பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை கூறுவார்கள்.

“இது எங்கள் சபை, எங்களுக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது, எங்களுக்கென்று ஸ்டாண்டர்ட் இருக்கு” என்று தாங்கள் இதுவரை செய்து வந்த ஒரு செயல் இன்னொருவர் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வன்மத்தை ஊர்முழுக்க கொட்டிதீர்ப்பதுண்டு..

Standard இல்லாத கிறிஸ்து

விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். லூக்கா 2: 7

இடையர்கள் என்போர் ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்" (தொடக்கநூல் 46: 34) சமூகத்தால் அருவறுக்கப்பட்ட இடையர்களுக்கு விண் தூதர்களால் செய்தி முதன்முறையாக அறிவிக்கப்பட்டது. 

"இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" லூக்கா 15:2 

கிறிஸ்து இயேசு நாற்றம் எடுக்கும் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார், அருவருப்பானவர்கள் என்று சமூகம் புறக்கணித்தவர்களால் வாழ்த்தப்பட்டார், பாவிகள் என்று பழித்துரைக்கப்பட்ட மக்களுடன் நெருங்கிப்பழகினர் என்பதை அறியாமல் சாதி, பதவி, பகட்டு வெறி பிடித்து இன்று கிறிஸ்துவுக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு மேற்காணும் திருச்சொற்கள் பாடம் கற்றுத்தரும்.

எம் தலைவர் லூக்கா 7: 33- 35இல் இயேசு கூறுகிறார் திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை; அவரை, “பேய் பிடித்தவன்” என்றீர்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, “இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.

எனவே ஆதிக்கவாதிகள் திருச்சபையிலும் சரி, சமூகத்திலும் சரி எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். தலித் ஆளுமைகள் இயேசுவை போல அஞ்சாமல் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இனி யாரேனும் காழ்ப்புணர்ச்சியில் Standard விமர்சனங்களை கூறினால் அவர்களை இனம்கண்டு மேற்கண்ட இறைசொற்களை கற்றுக்கொடுங்கள்.

#திருச்சபையில்சாதியைஒழிப்போம்

Author

Rev. W. Jebasingh Samuvel, Jesus Movement.

சாதிய மறுப்பு கிறிஸ்தவத்தின் நிபந்தனை
என்பதை உலகறிய செய்வோம் !!
சாதியம் கிறிஸ்துவுக்கு எதிரான கோட்பாடு
என்பதை உரக்க சொல்லுவோம் !!