0 T

29 ஜுலை 2022


மரியாள், மார்த்தாள், லாசரு – இயேசுவின் நண்பர்கள்
லூக்கா 10:38-42

• லூக்கா நற்செய்தியாளன் தனது நற்செய்தியில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுபோன்றே மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய இக்குடும்பத்தினர் இயேசுவுக்கு ஆறுதலாக காணப்பட்டனர். குறிப்பாக, இயேசுவினிடமிருந்து ஆறுதலைப் பெற வேண்டும் என எதிர்ப்பார்க்கும் உலகத்திலேயே இவர்கள் இயேசுவுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதொன்றாகும். எனவே, நாமும் இயேசுவிடமிருந்து ஆறுதலை பெறுவதோடு அவருக்கு எவ்வாறு ஆறுதலாக இருக்கமுடியும் என்பதை எண்ணிப் பார்ப்போம்.

• விருந்தோம்பல் மனித வாழ்வில் முக்கியத்துவமானதொன்றாகும். ஆண்டவர் இயேசுவுக்கு மார்த்தாள், மரியாள் ஆகியோர் விருந்தோம்பலூடாக ஊழியம் செய்தனர். லூக்கா 10:38-42 வரையுள்ள பகுதியில் இரண்டு வகையான திருப்பணி மாதிரிகளை நாம் காணலாம். குறிப்பாக, மார்த்தாள் விருந்தோம்பல் திருப்பணியை தெரிவு செய்தாள். மரியாள் வார்த்தை திருப்பணியை தெரிவு செய்தாள். இவர்கள் இருவருமே தமக்கு விருப்பமான திருப்பணிகளை தெரிவு செய்தனர். ஆனால், பின்னர் மார்த்தாள் பணியின் கடினத்தன்மையினால் தன் சகோதரியாகிய மரியாளையும் ஆண்டவர் இயேசுவையும் குற்றப்படுத்துகின்றாள். நாம் ஆண்டவருக்காக திருப்பணி செய்யும்போது, பணியில் கடினத்தன்மை காரணமாக நாம் ஆண்டவரையும் அடுத்தவரையும் குற்றப்படுத்துகிறோம். இது திருப்பணிக்கான சிறந்த மாதிரியாகும்.

• நற்செய்தி வாசகமாகிய யோவான் 11:1-27 வரையுள்ள பகுதியில் இயேசுவின் அன்புச் சீடனாகிய லாசரு மரித்தவேளையில் இயேசு சென்று அவனை உயிரோடு எழுப்பியதை நாம் பார்க்கின்றோம். இயேசு இவர்மீது கொண்ட அன்புக்கான பதிலீடு ஆகும். மேலும், ஆண்டவர் இயேசு நான்காம் நாள் அங்கு சென்றதற்கு ஓர் காரணமும் உண்டு. ஏனெனில், யூதர்களின் நம்பிக்கைபடி ஒருவர் இறந்துபோனால் அவருடைய ஆவி மூன்று நாளைக்குள் மறுபடியும் அவருக்குள் திரும்பி வரும் என நம்பினர். எனவேதான், இயேசு நான்காம் நாளில் இங்கு வருகின்றார். இயேசு லாசருவை உயிரோடு எழுப்பிய நிகழ்வு அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது.

ஆக்கம்: அற்புதம்