28 ஆகஸ்ட் 2022


கடவுளும் எல்லா சமய மக்களும்

God and People of All Faiths
யோவான் 10:14-18

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி ஆமோஸ் 9:1-12ல் இறைவாக்கினராகிய ஆமோஸ் அனைத்துலக கடவுளின் விடுதலையாக்கும் பண்பைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கின்றார். இதுவரைக் காலமும் கடவுள் தங்களுக்கே சொந்தமானவர் எனக் கருதிய யூதர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், கடவுள் இஸ்ரவேல் மக்களை மாத்திரம் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்காமல் கப்பதோசியர், பெலிஸ்தியர் போன்றவர்களையும் மீட்டதாக ஆமோஸ் கூறுகின்றார் (ஆமோஸ் 9:7).

• இப்படிப்பட்ட சிந்தனையே ஆண்டவர் இயேசுவும் கொண்டிருந்ததாக நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம் (யோவான் 10:14-18). இத்தொழுவத்திற்கு வெளியே அநேக மந்தைகள் காணப்படுகின்றன. அவைகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதிலிருந்து இயேசுவின் அனைத்துலக தன்மையும் புலப்படுகின்றது. இதுவே, யோவான் நற்செய்தியின் நோக்கமாகும் (யோவான் 20:31).

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி ரோமர் 2:17-29ல் எல்லா மக்களையும் ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவர பவுல் முயற்சிக்கின்றார். ரோமர் 3:23ல் எல்லா மக்களும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானோம். இதற்கூடாக இங்கு எல்லா மக்களையும் ஒன்றாக்கும் போக்கு காணப்படுகின்றது.

• சங்கீதம் அல்லது திருப்பாடல் 66ஐ ஆசிரியர் அனைத்துலக மக்களே இறைவனை போற்றுங்கள் என அழைக்கின்றார். இதற்கூடாக இறைவனின் எங்கும் வியாபித்துள்ள தன்மையைக் காண்பிக்கின்றார். மேலும், இந்நிலை இன்றைய பல்சமய சூழலில் நற்செய்தியை அறிவிக்க மிகவும் ஏற்றதொன்றாகும். கடவுளை நாம் திருச்சபைக்குள் கட்டுப்படுத்தி வைக்காமல் ஆவியாராகிய கடவுளை அனைத்துலகத்திற்கும் உரியவர் என்பதை காண்பிக்க வேண்டும் (யோவான் 4:24).