11 செப்டெம்பர் 2022

Remembering and Celebrating Women’s Ministry

லூக்கா 8:1-3

•            இன்றைய உலகில் பெண்களின் திருப்பணியைக் குறித்து அதிகளவில் பேசப்படுகின்றது. அவர்கள் ஆண்களிலும் பார்க்க அதிகளவு மேன்மையான திருப்பணிகளை சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சமய பின்னணிகளில் ஆற்றி வருகின்றனர். திருப்பணிக்கான அழைப்பு அனைவருக்கும் உரியது என பேதுரு பேசுகின்றார் (1 பேதுரு 2:9).

•            முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி நியாயாதிபதிகள் 4:4-16 இப்பகுதியில் நீதித்தலைவராகிய தெபோராவின் திருப்பணியைக் குறித்து பேசுகின்றது. குறிப்பாக, நீதித்தலைவர்கள் ஓர் குறிக்கப்பட்ட காலப்பகுதியில் தமது தலைமைத்துவத்தை வழங்கி அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டுக் கொண்டனர். கடவுளுடைய ஆவி அப்பணியை செய்யும்வரை அவர்களுடன் கூட இருக்கும். பணி நிறைவடைந்த பின்னர் ஆவி அவர்களை விட்டு வெளியேறி விடும். இங்கு, தெபோராவின் திருப்பணியினால், அவள் விசுவாசப்பட்டியலில் கூட இணைக்கப்பட்டிருக்கிறாள்.

•            யூத ஆணாதிக்கத்துக்கு விரோதமாக முதலாம் உடன்படிக்கையில் மாத்திரம் அல்லாது, ஆண்டவர் இயேசுவும் தனது வாழ்விலும் பணியிலும் பெண்களின் திருப்பணிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். உதாரணமாக, மகதலேனா மரியாள் உயிர்த்தெழுந்த நற்செய்தியை அறிவிக்கும் பணியை பொறுப்பெடுத்தாள் (யோவான் 20:1-16). மேலும், மார்த்தாள் விருந்தோம்பல் திருப்பணியையும், மரியாள் வார்த்தை திருப்பணியையும் தெரிவு செய்தனர் (லூக்கா 10:38-42). மேலும், ஆண்டவர் இயேசுவுக்கு தமது சொத்துக்கள் மூலம் திருப்பணியை ஆற்றிய யோவன்னா, சூசன்னா என்பவர்களைப் பற்றி லூக்கா மாத்திரம் கூறுகின்றார் (லூக்கா 8:1-3).

•            இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி பிலிப்பியர் 4:1-7 இப்பகுதியிலேயே இரு பெண்களுக்கிடையே நடைபெறும் பிரிவினைகளைப்பற்றி பவுல் பேசுகின்றார். இதுவோர் பிழையான மாதிரியாகும். திருப்பணிக்கு இடையூறு விளைவிக்கும் முன்மாதிரி ஆகும். எனவே, இம்மாதிரியை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், திருப்பாடல் 132ல் ஆசிரியர் இறைவனோடு அவர் செய்த பொருத்தனையை நிறைவேற்றும் வகையில் அதற்காக கடினமாக  உழைத்தார். இதைப்போன்றே அன்னாளும் தனது பொருத்தனையை நிறைவேற்றுவதைக் காண்கின்றோம். இதுவும் ஓர் திருப்பணிக்கான அடையாளமாகும்.