பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள்

திருத்தூதர் பணிகள் 2: 1-11

பழமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் இன்று மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு கடவுளின் மறுமொழி என்ன கடவுள் மொழியாதிக்கத்தினால் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்கிறாரா என்ற கேள்வி நம்மில் எழக்கூடும். மொழியியல் பன்மைத்துவத்தை கொண்டாடும் பெந்தெகொஸ்தே அனுபவத்தோடு இந்தக் கேள்விகளை உரசிப்பார்த்தோமென்றால் நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும்.

பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள்

திருத்தூதர் பணிகள் 2: 1-11

பெந்தேகோஸ்தே என்றால் 50 ஆவது நாள் என்று பொருள், கோதுமை அறுவடைக்காக நன்றிசெலுத்ததும் யூத திருவிழா, பாஸ்கா திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது. கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாய் மலை உடன்படிக்கையை நினைவு கூரும் நாளாகவும் இது கொண்டாடப்பட்டது. பன்னாடுகளில் பரவியிருந்த யூதர் அந்நாளில் எருசலேமில் கூடினர். இதன் மூலம் பேதுருவின் அருளுரை (2:14-36) பன்னாட்டுக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு உலகளாவிய நம்பிக்கை அறுவடையைத் தந்தது.
தீர்க்கதரிசனம் நிறைவேறுதல் (திருத்தூதர் பணிகள் 2:3) நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். தூய ஆவி எனும் நெருப்பில் இயேசு திருமுழுக்குக் கொடுப்பார் எனத் திருமுழுக்கு யோவான் உரைத்தது (லூக் 3:16) இங்கு நிறைவேறியது. இறைவாக்கினர் யோவேல் தூய ஆவி பொழிதல் குறித்துச் சொல்லியதும் (யோவே 2:28-19) நிறைவேறியது.

நெருப்பு போன்ற நாவுகள் என்றால் என்ன?
நாவுகள் பேச்சு வரத்தைச் சுட்டுகின்றன. இங்கு அவை நற்செய்தி அறிவித்தலைச் சுட்டுகின்றன. நெருப்பு கடவுளின் தூய்மைப்படுத்தும் செயலைச் சுட்டுவது. சீனாய் மலை நிகழ்வில் பழைய ஏற்பாட்டின் சட்டத்தைக் கடவுள் வானத்திலிருந்து நெருப்பு வரச் செய்து உறுதிப்படுத்தினார் (விப 19:16-18). பெந்தக்கோஸ்து விழாவில் நெருப்பை வரவழைத்து தூய ஆவியின் பணியை அவர் உறுதிப்படுத்துகிறார். சீனாய் மலை நிகழ்வில் நெருப்பு ஒரே இடத்தில் வந்தது; இங்குப் பல்வேறு மக்கள் மீது இறங்கி நம்பிக்கை கொள்ளும் யாவரிடமும் கடவுளின் உடனிருப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டியது.

பல மொழி வரம் திருச்சபையின் உலகளாவிய பணியைச் சுட்டிக்காட்டுகிறது

திப 2: 4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். இந்த அடையாளம் திருச்சபையின் உலகளாவிய பணியைச் சுட்டிக்காட்டுகிறது. இது மக்களின் கவனத்தைக் கவர்ந்தது முக்கியம். 9-11 இங்குப் பல நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இந்நாடுகளிலிருந்து வந்த யூதர் அடிமைத்தனத்தாலும் சமயத் துன்புறுத்தல்களாலும் சிதறுண்டவர்கள். பேதுருவின் அருளுரையைக் கேட்ட இவர்கள் பின்னர் தங்கள் நாடுகளுக்குச் செல்லத் தொடங்கியிருக்க வேண்டும்

தூய மத்தேயு 26: 69-73ல் இயேசு கைது செய்யபட்ட பின் நடந்தவற்றை நாம் படிக்கிறோம், அங்கு பேதுருவை பார்த்து ஒரு பணிப்பெண் ஒருவர், ‘நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே’ என்றார். பேதுரு அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். மீண்டும் வேறொரு பணிப்பெண்; அவரைக் கண்டு, ‘இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்’ என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ‘இம்மனிதனை எனக்குத் தெரியாது’ என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ‘உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது’ என்று கூறினார்கள்.

பேதுரு கலிலேயா பேச்சுவழக்கை உடையவர் ஆனால் எருசலேமில் வாழ்ந்த யூதர்கள் ரோம கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தனர் அங்கே ரோமர்களின் பேச்சுவழக்கு நடைமுறையில் இருந்தது, ராணுவமும் கடற்படையும் முகாமிட்ட இடம், கயபா விடும் எருசலேமில் இருந்தது, பேதுரு முற்றத்தில் அமர்ந்து இருக்கிறார், அங்கே ஆண்டவர் இயேசு காவலில் சித்தரவதை செய்யப்படுகிறார், கிண்டல் செய்யப்படுகிறார், துன்புறுத்தப்படுகிறார், அங்கே நடப்பவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பேதுரு, உயிர்பயத்தில் மறுதலிக்கிறார். எங்கு மறுதலித்தரோ , அதே எருசலேமில் கலிலேயா மொழி பிரசாங்கத்தால் 3000 பேரை திருச்சபையில் சேர்க்கிறார். அவரது இந்த மாற்றத்திற்குத் தூய ஆவியே காரணம். தூய ஆவி அவரை வல்லமையுள்ளதோர் அருளுரையாளராக மாற்றிவிட்டார். நாம் தவறுகள் செய்தாலும் கடவுள் நம்மை மன்னித்தால் புதுவாழ்வு பெற்று அவருக்குப் பணி செய்திட இயலும்.

திருத்தூதுவர் பணிகள் 2: 4 தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். இன்றைக்கு பல்வேறு மொழி பேசும் நாடுகளில் கிறிஸ்துவை சொந்த ரட்சகராக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் காரணம் என்ன பல மொழிகளில் நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது, இது பரிசுத்தாவியினால் திருச்சபைக்கு கொடுக்கப்பட்ட கொடை வரம், அதை நாம் சிதைத்து விடக்கூடாது.

இச்சம்பவத்தால் கடவுள் சொல்ல விரும்பும் செய்தி என்ன ?

  1. ஒரு மொழியாதிக்கத்தை எதிர்க்கும் கடவுள்
  2. பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள்

மேலாதிக்கத்தை அமுல்படுத்த எத்தனை செயலணி வந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கப்போவதில்லை, கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கூட ஆதிதிருச்சபையின் மக்களை வழிநடத்தியது போல கடவுள் தூயாவியானவரைக் கொண்டு எம்மை பாதுகாத்து ஆற்றல்படுத்துவார். ஆமென்.

<mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-quaternary-color">ஜெபசிங் சாமுவேல்,</mark>
ஜெபசிங் சாமுவேல்,

இயேசு இயக்கம்.