திருமறை பகுதி: மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28

மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28 வசனங்களின்படி பார்க்கும்போது ஒத்தமை, சமநோக்கு நற்செய்திகளிலும் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாற்கு 12: 38-40 லூக்கா 11:37-52 20:45-47 ஆகிய பகுதிகளை நாம் ஆழமாக அலசி ஆராயும் போது அவற்றில் இவ்வாறான பதில்கள் எழுகின்றதை நாங்கள் பார்க்கலாம்.

மறைநூல் அறிஞரும் பரியசேரும்

முதலாவதாக மறைநூல் அறிஞர் பரிசேயர் ஆகியோரின் செயற்பாடுகளும் இங்கே இறை திட்டத்திற்கு எதிரான விடயங்களையும் அவர்கள் மக்களை சுரண்டி கையாழ்வதையும் பார்க்கலாம். இயேசுவின் காலத்தில் எருசலம் சூழமைவுகளில் திருப்பணியை அவர் ஆற்றுகின்ற பொழுது இறை திட்டத்தை நிறைவேற்ற முடியாத பரிசேய மறைநூல் அறிஞர்களின் சட்ட திட்டங்களையும் கொள்கைகளையும் உடைத்து பணியாற்றும் போது பலவிதமான பிரச்சனைகள் எழுகின்றதனை நாம் அவதானிக்கலாம். இங்கு மறைநூல் அறிஞர்கள் யார்? பரிசேயர்கள் யார்? என்று பார்க்கும்போது யூத மக்களில் மிகச்சிறந்தவர்களாகவும் மிக செல்வந்தர்களாகவும் வேறு பிரிக்கப்பட்ட சில குழுக்களாக இவர்கள் காணப்பட்டார்கள். இவர்கள் செனகரிம் சங்கத்தின் உறுப்பினர்களாகவும் (எருசலேம் அதிஉச்ச நீதிமன்றம்) மறைநூல் தோரா விளக்குபவர்களாகவும்; இவர்கள் மிஸ்னா சட்டத்தை நிறைவேற்றுபவர்களாகவும் மோசேயின் கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிப்பவர்களாகவும், அரச கடமைகளையும் மத கடமைகளையும் நிறைவேற்றுள்ளவர்களாகவும், மிஸ்னாவை நிறைவேற்றும் போது மக்களுக்கு பாரியசுமைகள் சுமத்தபட்டதனையும் அதாவது பளுவான சுமைகளை கட்டி அவர்களின் தோல்களில் வைத்திருந்தார்கள் மறைநூல் வாசகபட்டைகளை அகலமாக்கியிருந்தார்கள் கடவுள் காரியம் என்று சொல்லி கடவுள் காரியத்தில் கடவுளையும் இறையாட்சி மையமான காரியங்களான உயிர்த்தெழுதல் மரணத்திற்கு பின்னரான நித்திய வாழ்வு என்பன ஒன்றும் அவர்களிடத்தில் இருக்கவில்லை அவர்கள் கடவுளுக்கும் மக்களுக்குமான உறவுகளில் தடைகளை ஏற்படுத்தி இருந்தார்கள் வரிகள் காணிக்கைகள் என்று பல சுமைகளை அவர்கள் மீது சுமத்தி இருந்தார்கள். பணத்தை பணத்தை சேகரித்து செல்வத்தை பெருக்குவதிலும் சுகபோகமான வாழ்க்கையிலும் முழுமையாக ஈடுபட்டார்கள் இவர்கள் குருக்கள் பாரம்பரியங்கள் பின்னணி; செயற்பாடு உடையவர்களாகவும் மக்கள் மத்தியலும் பொது இடங்களிலும் ஆலயத்திலும் முதன்மையான இடங்களையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் ரபி போதகரே என்று அழைக்கப்படுவதையும் சொல்வதையும் விரும்புகிறார்கள்.

இயேசுவின் சீடத்துவ ஊழியம்

இயேசு தனது பணியாற்ற முற்படும்போது அவர் கிருத்துவ பணியினை சீர்திருத்தம் செய்து சீடத்துவ பணியினை ஆற்றும் போது அது பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களுக்கு எதிரானதாக அமைந்தது. காரணம் இயேசுவின் பணி அன்பு நீதி நேர்மை உண்மை அமைதி இரக்கம் சகோதரத்துவம் என்ற மனிதநேய பண்புகள் கொண்டதாக காணப்பட்டது காணப்பட்டது. எனவே தான் அவர் நோய்களை குணமாக்கி பேய்களை ஒட்டி மக்களின் சுதந்திர உயிர்த்தெழுதல் நித்திய நிலை வாழ்வுக்காக உழைத்தார். இதனால்தான் மறை நூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவை தொடக்கம் முதல் அவர் மரிக்கும் வரைக்கும் அவருடைய திருப்பணிக்கு எதிரானவர்களாகவும் துன்புறுத்தல்களை ஏற்படுத்துகின்ற வர்களாகவும் காணப்பட்டார்கள். இன்று நாம் நமது திருச்சபை திருப்பணிக்காக இணைந்து இலங்கை இறையியல் கல்லூரியில் கற்கை செயற்பாடுகளில் பிணைந்து ஈடுபடுகின்ற பொழுது நாங்கள் அழைக்கப்பட்ட அழைப்பினை முன்பதாக தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் குருத்துவ பாரம்பரியத்தில் தவறு இழைக்கப்பட்டு உள்ளதை இயேசு மூலமாக திருத்தம் செய்யப்பட்டு சீடத்துவம் என்னும் பணியை கொடுத்திருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்களும் பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களைப் போன்று ஆடைகளை அணிந்து சந்தைகளிலும் வீதிகளிலும் பொது இடங்களிலும் ஆலயத்திலும் முதன்மையான இடங்களை பிடிக்கின்றவர்களாகவும் அல்லாமல் இயேசு கிறிஸ்துவினுடைய எதிர்கால திட்டங்களையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கும் விருப்பம் கொண்டவர்களாகவே செயல்பட வேண்டும். எனவே இந்த குருத்துவ பாரம்பரியத்தில் ஏற்பட்ட தீமையான விடயங்களை கலைந்து இயேசு காண்பித்த நன்மையான சீடத்துவ பணியை மேற்கொண்டு அன்பு நீதி மரியாதை சமத்துவம் சகோதரத்துவம்; இந்த சமுதாயத்திலே உருவாக பன்முகப்படுத்தப்பட்ட பல்வகைத்துவத்துக்குள் பல் சமயத்துக்குள் பணியாற்றுகின்ற பொழுது தோழமையோடும் இறை நம்பிக்கையுடனும் மற்றவர்களுக்கு தீங்குகள் சுமைகள் ஏற்படுத்தாத வண்ணம் செயற்படுவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்

குறிப்பாக அங்கு காணிக்கை போட்ட விதவையின் சுமையினையும் காணிக்கையை இயேசு கண்டபொழுது அவர் பலுவான சுமைகள் மத்தியில் அந்த காணிக்கை செலுத்துவதை ஜெருசலேமாலயத்திலே வழிபாட்டுத்தளத்தை வியாபாரமாக மாற்றிய போது பலிபீடத்தினை புரட்டி தள்ளியதையும் இதிலே நாங்கள் பார்க்கலாம் இன்றைய சூழ்நிலையில் நாமும் வெளியான காரியங்களில் விழிப்புணர்வு அற்ற மடையர்களாகவும் விழிப்புணர்வு அற்ற வழிகாட்டிகளாகவும் கடவுளோடு தொடர்பு படும் அனைத்து வாயில்களையும் மூடி இருக்கிறோம் உள்ளார்ந்த மன தூய்மை இல்லை பரிசேய மறைநூல் அறிஞர்களை மனநிலையில் தான் உள்ளோம். மக்கள் தங்கள் வாழ்க்கையில் பொருளாதார சுமைகள் தங்களைத் தாங்களே நிர்வகிக்க முடியாத சுமைகள் மத்தியிலும் நாமும் நாட்டில் உள்ள வரிச்சுமைகளும் ஆலயங்களில் காணிக்கை தசமபாகம் கோட்டா என்று தோட்டத் தொழிலாளர்கள் மீனவர்கள் விவசாயிகள் என்று சுமைகளை தினிக்கின்றோம் இவ்வாறு சிறு தொழில்களை மேற்கொள்ளுகின்ற நிலைமைகள் அதிகமாக காணப்படுகிறது. நம்மால் ஒரு மாற்று சமுதாயத்தையும் முன்னோக்குகளையோ முன்வைக்க முடியாதநிலையுள்ளது.

உதாரணம் எனது வன்னி திருப்பணியில் இருக்கும் போது ஒரு கிராமத்தை அமைத்து மக்கள் மத்தியில் செழிப்பு உருவாக்கி இன்று அவர்கள் பசுமையோடு தங்கள் சொந்த காலில் நிற்கிறார்கள் இவ்வாறு பலவற்றை பார்க்கலாம். எனவே எங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு சீடத்துவ பணியில் முன்னோக்க நாங்கள் அழைக்கப்படுகிறோம். இன்று வீடுகள் ஆலயங்கள் நாட்டிலும் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுகிறது இவற்றை எதிர்கொண்டு இவற்றை நிராகரித்து நாங்கள் சீடத்துவத்தை முன் நிறுத்தி காண்பிக்க அழைக்கப்படுகிறோம். ஆமேன்.

சதானந்தன்,
சதானந்தன்,

இலங்கை இறையியல் கல்லூரியில்
முதலாமாண்டு பயிலும் மாணவர்,
இலங்கை.