15 ஆகஸ்ட் 2023

லூக்கா 6:20-26

• மனித வாழ்வில் அனைவருமே சுதந்திரத்தை எதிர்ப்பார்த்து விரும்புகின்றனர். பேச்சுச் சுதந்திரம், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் மற்றும் வாழ்விடச் சுதந்திரம் போன்றவைகளுக்காக இன்றும் மக்கள் ஏங்குகின்றனர். சுதந்திரத்துக்குள் ஓர் ஒடுக்குமுறையையும் எங்களால் கண்டுகொள்ள முடிகின்றது.

• விடுதலைப் பயணம் – யாத்திராகமம் 23:1-8 வரையுள்ள பகுதியில், இஸ்ராயேல் மக்கள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும் அவர்கள் மறுபடியும் தமக்கிடையே ஒடுக்குமுறைகளை உருவாக்கிக் கொண்டனர். அதாவது, ஒடுக்குமுறைகளை இஸ்ராயேலர்கள் தமது மக்களுக்கிடையேயும் வெளி தொடர்புகளோடும் ஏற்படுத்திக் கொண்டனர். எனவே, இங்கு ஆசிரியர் ஒடுக்குமுறை செய்பவர்களுடன் அல்லது ஒடுக்குபவர்களுடன் சுதந்திரத்தை பெற்ற மக்கள் தொடர்புகளை வைத்திருக்கக் கூடாது எனவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தல் அவசியம் எனவும் கூறுகின்றார்.

• திருப்பாடல் – சங்கீதம் 18ல், இறைவன் ஓர் விடுதலையாளன் என்றும், அவர் ஒடுக்குபவர்களின் கைகளில் இருந்து மக்களை விடுவிக்கிறார் எனவும் ஆசிரியர் காண்பிக்கின்றார்.

• கலாத்தியர் 5ம் அதிகாரத்தில், கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பற்றி ஆசிரியர் கூறுகிறார். அதாவது, இருளிலிருந்து ஒளிக்குள் வரவழைக்கப்பட்டிருக்கிற நாங்கள் மறுபடியும் இருளின் கிரியைகளை செய்து அடிமைத்தனத்துக்குள் பிரவேசிக்காமல் எம்மைக் காத்துக் கொள்ளுதல் அவசியம் என்கிறார்.

• லூக்கா 6:20ம் வசனத்திலிருந்து ஆசிரியர், இறையாட்சியின் கருத்தியல்களை எடுத்துக் கூறுகிறார். அதாவது, மனித ஆட்சியின் சுதந்திரங்களை அல்ல இறையாட்சி சற்று வேறுப்பட்டது. அது அழுகின்ற மற்றும் துயரப்படுகின்ற மக்கள் சார்பில் எப்பொழுதும் கருத்துக்களை முன்வைக்கின்றது. எனவே, மனித ஆட்சியைவிட கடவுளின் ஆட்சி எப்பொழுதும் நிலையானது. அதை அறிவிக்கவே இயேசு தான் வந்ததாக மாற்கு 1:14,15ல் பேசுகிறார். ஆமேன்.