சமநோக்கு நற்செய்திகளின்படி ஆண்டவர் இயேசு மக்கள்மீது கொண்ட
இரக்கத்தின் விளைவாக புதுமைகளை ஆற்றியதாக ஒத்தமை நற்செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், யோவான் நற்செய்தியில் புதுமைகள் அறிங்குறிகள் அல்லது அடையாளங்கள் என அழைக்கப்படுகின்றது. அங்கு

இயேசு இறையரசின் மையமாகவே அல்லது இறையரசை வெளிப்படுத்தும் அறிங்குறிகளாகவே இப்புதுமைகளைச் செய்வதாக யோவான் கூறுகின்றார்.


யோவான் 2:1-12ம் வசனம் வரையுள்ள பகுதியில், இயேசு இயற்கைக்கு எதிரான ஓர் புதுமையை ஆற்றுகின்றார். கானாவூரில் கலியாண வீட்டில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகின்றார். இங்கு கலியாண வீட்டில் இரசம் குறைவுபட்டப்போது,

இயேசு பணியாட்களை நோக்கி, “ஆறு கட்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறுகின்றார். இங்கு இக்கலியாணம் கானாவூரில் நடைபெறுவதாக
காண்பிக்கப்படுகின்றது. கானாவூர் என்பது ‘காம்’ என்ற நோவாவின் மகனுடைய பரம்பரையை சார்ந்தவர்கள் வாழும் பூமியாகும். எனவே, இப்பகுதி ஓர் சபிக்கப்பட்ட இடமாக கருதப்பட்டது. சபிக்கப்பட்ட இடத்திலேயே இப்புதுமை ஆற்றப்படுவதை நாம் பார்க்கின்றோம். நாசரேத் ஊரில் நன்மை ஏதும் உண்டாகுமா? என நாத்தான்வேல் கேட்ட கேள்விக்கு பதிலுரையே இங்கு குறிப்பிடப்படுகின்றது. அதாவது, சபிக்கப்பட்ட ஓர் பிரதேசத்தில் இயேசு புதுமையை ஆற்றி அந்நகரை மகிமைக்குட்படுத்துகின்றார்.


பொதுவாக, பாலஸ்தீன பிரதேசம் அதிக புழுதிகள் நிரம்பிய ஒரு பிரதேசமாக
இருந்தபடியால் மக்களின் கால்களைக் கழுவுவதற்கென கற்சாடிகள் காணப்பட்டன. நீர் நிரப்பப்பட்ட கற்சாடிகளில் கால்களைக் கழுவுவதற்கென அடிமைகள் காணப்பட்டன. எனவே, அடிமைகளால் செய்யப்பட்ட ஒரு பணி இங்கு கற்சாடிகள் பெறுமதியாக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
பழைய இரசம் குறைவுபட்டதாகவும் அது ருசியற்றதாகவும் காணப்பட்டது. புதிய இரசமோ அதிகளவு உருசையுள்ளயதாகவும் நிரம்பி வழியும் தன்மையுள்ளதாகவும் காணப்பட்டது. எனவேதான், மக்கள் அதனை விரும்பி குடித்தனர். இங்கு பழைய இரசம் என்பது நீதிச்சட்டத்தில் ஒப்பிடப்படுகின்றது. புதிய இரசம் என்பது, இறையருளுக்கு அல்லது இயேசுவால் கொண்டுவரப்படுகின்ற இறையரசுக்கு ஒப்பிடப்படுகின்றது. அவ் இறையரசு குறைவுபட்டது அல்ல. அது எப்பொழுதும் மகிழ்ச்சியானது. அதற்குள் பிரவேசிப்பவர்கள் உருசை மிக்கவர்கள். அது மக்கள்மீது
பாரங்களை சுமத்தும் அமைப்பல்ல போன்றவைகளைப் பற்றி ஆசிரியர் இங்கு
எடுத்துக் காண்பிக்கின்றார். இதனூடாக இறையரசின் மேன்மை இப்புதுமையினூடாக வெளிப்படுத்தப்படுகின்றது.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
இலங்கை