31 டிசம்பர் 2023

குடும்ப ஞாயிறு
குடும்பம் ஓர் கடவுளின் கொடையாகும்
Family as Gift of God
மாற்கு 3:31-35

• குடும்பம் ஓர் கடவுளின் கொடையாகும். கடவுள் தன்னுடைய இறைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக குடும்பங்களை தெரிவுசெய்கின்றார்.

• யோசுவா 24:1-20ல், யோசுவா இஸ்ராயேல் மக்களோடு உடன்படிக்கை செய்கிறார். “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்கிறார். அதாவது, குடும்பம் கடவுளை சேவிப்பதற்காக கடவுளால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் செலுத்த அழைக்கப்படுகின்றது.

• சங்கீதம் – திருப்பாடல் 128ல், குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்ற உண்மை கூறப்படுகிறது. குடும்பத்தில் காணப்படும் மனைவி, பிள்ளைகள் போன்றவர்கள் ஒலிவமரக்கன்றுகளைப் போலவும் திராட்சை தோட்டத்தைப் போலவும் இருக்கிறார்கள் என்பது இறைவனால் ஆசீர்வதிக்கப்படும் குடும்பங்கள் மற்றவர்களுக்கும் தங்களுக்கும் இனிப்பாக இருக்க அழைக்கப்படுகின்றார்கள்.

• பிலிப்பியர் 3:3-21ல், குடும்பங்களில் கூட்டுறவுக்காகவும் அதன் கட்டமைப்புக்காகவும் அவற்றின் நிரந்தர தன்மைக்காகவும் பவுல் அவர்களுக்காக மன்றாடுவதாகக் கூறுகின்றார். எனவே, குடும்பங்களில் மன்றாடல், பிரார்த்தனை அவசியமாகின்றது.

• மாற்கு 3:31-35 வரையுள்ள பகுதியில், எல்லைக் கடந்த குடும்ப உறவைப் பற்றி இயேசு பேசுகிறார். குடும்ப உறவுகள் வெறுமனே உறவுகளுக்குள்ளே கட்டுப்படுத்தப்படாமல் அதன் எல்லைத் தாண்டி புதியதோர் உறவை உருவாக்குதல் அவசியமாகும். எனவேதான், இறை விருப்பப்படி செய்பவர்கள் அனைவரும் எனக்குத் தாயும் சகோதரர்களாகவும் இருக்கிறார்கள் என்ற இயேசுவின் வார்த்தையை இதனொளியிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன்படி, குடும்பங்கள் இறையரசின் அங்கங்களாகக் காணப்படுகின்றன. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்