மனித குலத்தை அச்சுருத்தும் இயற்கை காரணிகளும் செயற்கை அனர்த்தங்களும் எமது வாழ்வின் ஒரு பகுதியாகும். இதனொலியில் கடந்த தசாப்பங்களாக பல்வேறு கொல்லை நோய்கள் மனித சமூகத்தை அச்சுருத்திக்கொண்டேயுள்ளன. குறிப்பாக டெங்கு, சிக்கன் குன்யா, பறவைக்காச்சல் பன்டிக்காச்சல் போன்றவற்றை உதாரணமாக கூறலாம் இவற்றைவிட முழு மனுக்குலத்தையும் அச்சுருத்தி பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வைரசை சிறுயோர் முதல் பெரியோர் வரை மறந்திட முடியாது.
இதன் உருவாக்கம் பரம்பல் பற்றி பல்வேறு கருத்துக்கள் எம்மிடையே காணப்படுகின்றது. ஒரு சிலர் இது சினாவின் ஆயுதக் கலஞ்சியத்திலிருந்து பரவியது என ஒரு சாராரும் இல்லை, அமெரிக்காவினால் உற்பத்தி செய்யப்பட்டு வினாவிற்கு அனுப்பப்பட்டது என மறு சாராரும் கருத்துக்களை பரப்பியுள்ளனர்.

கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இத்தகைய சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்கலாம். குறிப்பாக ஒரு சிலர் வரலாற்றிலே கடவுள் வாதைகளை அனுப்பி எகிப்தியர்களை துன்புருத்தியது போன்று கடவுளின் நியாயத்தீர்ப்பு உலகிலே இறங்கியுள்ளது என பறைசாற்றுகின்றனர். மேலும் ஒரு சிலர் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னர் இப்பேர்ப்பட்ட அழிவுகள் ஏற்படும் எனக் கூறி வேத வாக்கியங்களை நியாயப்படுத்துகின்றனர். இவ்வாறெனில் கடவுளின் அன்பு என்னும் பண்புக்கு என்ன நடந்தது? கடவுளால் படைக்கப்பட்ட மனுக்குலத்தை பாதுகாக்கும் கடவுள் அவர்களை அழிப்பாரோ? ஏன்ற வினாவை
இந்நேரத்தில் நாம் எழுப்ப வேண்டும்.

எம்மோடு வாழுமாறு இவ்வுலகத்திலே படைக்கப்பட்ட சகோதரன் அல்லது சகோதரியின் தவறின் காரணமாக நாம் தண்டிக்கப்படுகிறோம். இது ஓர் சமூகப்பாவத்தின் விளைவாகும். இங்கே இறையவர் மக்களை தண்டிக்கிறார் எனக்கூறி நாம் சமூக பாவத்தை நியாயப்படுத்த முற்படுகிறோமா? மேலும் கொரியாவில் தேவாலய வழிபாட்டில் கலந்து கொண்ட 1200 பேர் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டனர். எனவே வழிபாட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட இவர்கள் பாவிகளா? இல்லையேல்
வழிபாட்டிற்க செல்லாமல் தப்பித்துக் கொண்டவர்கள் கடவுளின் வெளிப்பாட்டை உணர்ந்து கொண்டவர்களா என்ற வினா எம்மிடையே எழுகின்றது.

இவைகள் ஒரு புறம் இருக்க அரசாங்கம் ஒன்று கூடுதல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டது. இதற்கமைய கிறிஸ்தவ திருச்சபைகள் வழிபாடுகளை நடாத்துவதா இல்லாயா எனத் திண்டாடினார்கள் ஆதித்திருச்சபை எப்போதும் ரோம அரசாங்கத்தின் செயல்களை விமர்சிக்க ஆயத்தமாயிருந்தது அதனாலே தான் ரோம அரசாங்கம் சீசரை (ரோம தலைவரை) ஆண்டவர் எனக்கூறிய போது கிறிஸ்தவர்கள் இல்லை இயேசுவே ஆண்டவர் என அதற்கு மறுமொழி கொடுத்தனர். மேலும் ரோம அரசாங்கம் கிறிஸ்தவர்களை
வழிபாடுகளை நடாத்தக் கூடாது என கட்டளை பிறப்பித்த போது ஆதிக் கிறிஸ்தவர்கள் அதற்கு எதிராக செயற்பட்டனர். எனவே இன்றைய கிறிஸ்தவர்கள் ஏன் இன்று அரசாங்க கட்டளைகளுக்கு கீழ்படிகின்றன? இயேசு இன்றைய கிறிஸ்தவர்களை நோக்கி உங்களுக்கு விசுவாசம் இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

வைரசின் பாதிப்புக்கு அஞ்சி வழிபாடுகளிலிருந்து மக்கள் தங்களை விலக்கிக் கொண்டனர். இதன் மூலம் கடவுளை விட வைரசுக்கு அதிக பலம் உண்டு என எண்ணினர். எனினும்

நாம் எமது சரீரத்தை அழிக்க வல்லவர்களுக்கு பயப்படாமல் மாறாக எமது ஆன்மாவை பாதுகாக்க வல்லவருக்கே நாம் பயப்பட வேண்டும்

(தூய லூக்கா 12: 4, 5)

என்பதை இயேசு எமக்கு எடுத்துரைக்கின்றார்.

ஆதித்திருச்பை திருமுழுக்கு, திருவிருந்து ஆகியவற்றை அனுஸ்டித்த பின்னர் அவர்களுக்கு மரணம் சம்பவித்தது. ஆண்டவர் இயேசுவும் திருவிருந்தை நிறைவு செய்த பின்னர் நேரடியாக சிலுவைக்கு நடந்து சென்றார். எனவே திருவிருந்து எம்மைக் கிறிஸ்துவுக்காக துன்பப்பட அழைக்கும் அருட்சாதனமாகும். ஆனால் வைரசின் தாக்கத்திற்கு பயந்து திருவிருந்து பெற்றுக் கொள்ளாமல் தங்களை தாங்களே ஒதுக்கிக்கொண்டவர்கள் ஏராளம். எனவே கிறிஸ்தவ அழைப்பின் திருவிருந்தின் முக்கியத்துவம் என்ன? கிறிஸ்துவுக்காக நாம் துன்பப்பட ஆயத்தமில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.
ஆதித்திருச்சபையின் விசுவாச மாதிரிக்கு இன்றைய திருச்பை கொடுக்கும் பதிலுரை என்ன?

நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தனிமைபடுத்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். எனினும் நோயை விட
தனிமைபடுத்தப்படும் அனுபவம் மிகவும் பாரதூரமான ஒன்றாகும். புனித யோசப் வாஸ் அடிகளால் கண்டியில் வைசூரி நோய் ஏற்பட்ட போது மக்களை விட்டு ஓடிச்செல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுடனே இருந்து அந்த நோய்க்கு அவரும் உள்ளானார் மேலும் தந்தை டேமியன் அவர்கள் தொழு நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பணியாற்றி அந்த நோய்க்கு அவரும் உள்ளானார் அப்படி வரலாறு படைத்த கிறிஸ்தவம் இன்று நோயை கண்டு அச்சமுருவதேன்? மானிட மகன் உலகில் வரும் போது விசுவாசத்தை காண்பாரா?

<sub>அருள்பணி. அருளம்பலம் ஸ்டீபன்<br>இலங்கை</sub>
அருள்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
இலங்கை