மதுரை முகவை பேராயம் சி.எஸ்.ஐ பல் மருத்துவ கல்லூரியில் இன்று கல்வியாண்டு தொடங்கியது. தமிழ்நாடு அரசு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவர் உயர்திரு Adv. C.பெர்ணான்டஸ் ரத்தின ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது புதுப்பிக்கப்பட்டத் தேர்வுக்கூடம், சிற்றுண்டி சாலை, Elevator ஆகிய வசதிகள் மாணவர்கள் மற்றும் அனைவரின் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டன.
Adv. C. பெர்ணான்டஸ் ரத்தின ராஜா அவர்கள் சி.எஸ்.ஐ பல் மருத்துவ கல்லூரியின் தாளாளராக திறம்பட செயல்பட்டு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்றிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் இக்கல்வியின் கற்றுக்கொள்கின்ற மாணவர்கள் சிறப்பாக கல்லூரியின் வளங்களை பயன்படுத்திக்கொண்டு இருளாய் இருக்கிற இடங்களுக்கு ஒளியினைக் கொண்டு செல்கின்றவர்களாய் மாறவேண்டும். பயஉணர்வை நீக்கி மகிழ்ச்சியாக படியுங்கள் என்றார்
மேலும் சிறப்பாக இக்கல்வியாண்டில் 84 பெண் மாணவிகள் இப்படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பெண்களின் வாழ்வு முன்னற்றப்பட வேண்டும் என்று இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தோமோ அதை இன்னும் செய்து வருகிறோம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்விற்கு தென்னிந்திய திருச்சபை மதுரை முகவை பேராயத்தின் பேராயர் Rt.Rev.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மதுரை முகவை பேராயத்தின் பேராயர் அம்மா பசுமலை மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. மேரி ஜெயசிங் அவர்களும் கேப்ரன்கால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.பார்ச்சூன் பொன்மலர் ராணி பெர்ணான்டஸ் ரத்தின ராஜா அவர்களும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள். மதுரை முகவை பேராயத்தின் முதன்மை பணியாளர்கள் பல் மருத்துவ கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மருத்துவர்கள், மதுரை முகவை பேராயத்தின் இயக்குநர்கள், வட்டகை மன்ற தலைவர்கள், குருவானவர்கள், தாளாளர்கள், பல் மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பங்கு பெற்றனர்.
செய்தி: இயேசு இயக்கம்