கடவுள் எங்களில் ஒருவரானார்

எங்களில் ஒருவரான கடவுளைப் புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் இன்றைய ‘இயேசு சமூகங்கள்’

நத்தார் (இயேசு பிறப்பு) என்பது ‘எங்களில் ஒருவரான கடவுளை’ புரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் நத்தார் அதன் கருத்தை. இழந்து நீண்ட காலமாகிவிட்டது. நத்தார், ‘மனுவுருவான கடவுளின் – இயேசு கிறிஸ்து’ அடையாளத்தை இழந்து, ‘வேடிக்கைக் கொண்டாட்டத்தின் – நத்தார் தாத்தா’ வடிவமாகிவிட்டது. ‘கடவுள் எங்களில் ஒருவரானார்’ எனும் வரலாற்று உண்மை இருட்டடிக்கப்பட்டு ஒடுக்கும் போக்கு அங்கீகரிக்கப்படுகிறது. வியாபாரமயமாக்கப்பட்டுவிட்ட நத்தாரின் அடையாளங்கள் (நத்தார் மரம், நத்தார் கேக், நத்தார் தாத்தா…) பலரையும் கவர்ந்துள்ளன. கடவுள் ஒரு ஏழையாக பிறந்தமை, கடவுளின் பிறப்பு முதலில் ஓரங்கட்டப்பட்ட இடையருக்கு அறிவிக்கப்பட்டமை போன்றவை காணாமற்போய்விட்டன அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டுவிட்டன.

உண்மையாக கடவுள் எங்களில் பிறந்தால், கடவுள் எங்களில் ஒருவரானால்.. நல்மாற்றம் ஏற்பட நாம் முயற்சிப்போம். வரலாற்று இயேசுவின் இறையாட்சியின் பண்புகளுக்கான முக்கியத்துவம் எங்களில் அதிகமாகட்டும்.

Rev’d SDP Selvan
கிறிஸ்து பிறப்பை சுட்டிக்காட்டும் திருமறைப் பகுதிகள்

எசாயா 62: 6 – 12
பாபிலோனிய அடிமை வாழ்விலிருந்து தாய்நாட்டுக்கு திரும்பிய மக்களுக்கு கடவுள் அவர்களுடன் இருக்கின்றார் எனும் செய்தி வலியுறுத்தப்பட்டது (12).

திருப்பாடல் 97
தீமைகளை வெறுப்போர் மீது அன்புகூரும் கடவுள் (10), அவர்களுடன் வாழ்கின்றார்.

தீத்து 3:4 – 7
நன்மை மற்றும் அன்பு இரக்கம் (மனித நேயம்) மீடபரின் வெளிபாடு (4)

லூக்கா 2:8 – 20
கடவுள் ஒடுக்கப்பட்டோருள் ஒருவரானார். ஆணாதிக்கத்தின் பார்வையில் பெண் தீட்டானவள், ஆனால் கடவுள் மரியா எனும் பெண்ணின் வயிற்றில் கருவாகி பெண் ஒடுக்குமுறையை நிராகரித்தார்(1:26–37). தள்ளிவைக்கப்பட்ட இடையருக்கு முதலாவதாக கடவுளின் பிறப்பு அறிவிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது(2:8–16). ஆதிக்கவாதி (ஒடுக்குமுறை) ஏரோதை நிராகரிக்கும் அளவுக்கு ஞானியர் மனமாற்றமடைந்தனர்(மத்தேயு2:1–12). ஆதிக்கவாதிகளின் அச்சுறுத்தல் மனிதர்களை அகதிகள் ஆக்கியபோது, இயேசுவின் குடும்பம் (இயேசு–மரியா–யோசேப்பு) அகதிகளானது (மத்தேயு2:13–16 )

இயேசு பிறப்பின் செய்தி என்ன?
கடவுள் எங்களில் ஒருவரானார். கடவுள் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம். நாம் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் எடுப்பின் கடவுள் எங்களில் ஒருவரானார் என நம்பிக்கையுடன் எமது இறையாட்சி மைய பற்றுறுதியை (விசுவாசத்தை) பறைசாற்றலாம்.

மன்றாட்டு: பாதிக்கப்பட்டவர்களின் கடவுளே, ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் எடுத்து, ‘கடவுள் எங்களில் ஒருவரானார்’ என எமது பற்றுறுதியை (விசுவாசத்தை) பறைசாற்ற எங்களை வலுவூட்டும். மனுவுருவான இயேசு கிறிஸ்துவின் கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.


கிறிஸ்து பிறப்பின் செய்தியை எடுத்து இயம்பும்

அற்புதமான பாடல்

பல்லவி
எங்களில் ஒருவரானார் எங்களின் கடவுள்
எல்லைகள் தொல்லைகள் அகலட்டும் அகலட்டும்

அனுபல்லவி
அன்பிலே பிறந்திடுவோம்
அச்சம் அகன்றிடவே
உண்மையில் உறைந்திடுவோம்
உலகம் மாறிடவே

சரணங்கள்
1.மரியாவாகுவோம் – எம்மை பகிருவோம்
யோசேப்பாகுவோம் – நம்பி வாழுவோம்
இடையராகுவோம் – அச்சம்துறப்போம்
ஞானியராகுவோம் – இறையை பணிவோம்
ஏசுசமூகம் ஆகுவோம் – மாற்றம்தேடுவோம்

ரிமரி நிநிஸா- ரிமப நிநிஸா
ரிமரி நிநிஸா – நிதப நிநிஸா
ஸ்ஸ்ஸ் நிநிதப – பதம் மகரீ
ரிமப நிநிஸா – ரிமப நிநிஸா
ரிமரி நிநிஸரி – எங்களில்

2 மனிதராவோம் – எம்மை பகிருவோம்
மாற்றமாவோம் – நம்பி வாழுவோம்
இடர்போக்குவோம் – அச்சம் துறப்போம்
ஞானம்வரட்டும் – இறையை பணிவோம்
ஏசுசமூகம் ஆகுவோம் – விடுதலை அடைவோம்

பல்லவி
இயேசு பிறப்பின் கருத்தென்ன?
இறைவனின் வருகையின் வரத்தென்ன?
எங்களின் கடவுள் எங்களில் ஒருவர்
எங்களில் ஒருவர் எங்களின் கடவுள்.

அனுபல்லவி
எங்கே கடவுளை சந்திப்போம்?
இங்கே கடவுளை சந்திப்போம்.
எப்போது கடவுளை சந்திப்போம்?
இப்போது கடவுளை சந்திப்போம்

சரணங்கள்

சந்திப்போமா அடுத்தவரில் கடவுளை.
சிந்திப்போமா கடவுளின் வருகையை.
கொரோணா ஒமிக்ரோன் அச்சுறுத்தல்
இறையாட்சி பண்புகளில் எதிர்கொள்வோம்

தந்தன தந்தன தந்தன னா – 2

அணைப்போமா இழப்புகளில் அலைவோரை.
எதிர்ப்போமா அன்றாடம் ஏரோதை.
பொறுப்பாக எதிர்த்திடுவோம் தீமைகளை
புதுவுலகம் நிச்சயம் பயணிப்போம்.

இணைவோமா பிரிவில் அழுவோரை.
உயிர்ப்போமா சாவை எதிர்த்துநிதம்
களைவோமா தன்னல பேராசை
எழுவோம் இறையாட்சி சமூகமாய்

<span class="has-inline-color has-quaternary-color">அருட்பணி S.D.P.செல்வன்</span>
அருட்பணி S.D.P.செல்வன்

இறையியலாளர், இலங்கை.