16 தை 2022

மத்தேயு 16:13-20

•             திருச்சபையின் ஒருமைபாட்டினை வெளிப்படுத்தும் உருவகமாக ஒரே உடல் என்ற எண்ணக்கரு காணப்படுகின்றது. கிறிஸ்து தலையாகவும் நாம் அனைவரும் அவயவங்களாகவும் காணப்படுகின்றோம் என புனித பவுல் வெளிப்படுத்துகின்றார் (1 கொரிந்தியர் 12:12-31). மேலும், ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற திருவருட் சாதனமாக திருமுழுக்கு காணப்படுகின்றது. இவற்றை நாம் விசுவாசபிரமாணத்துடன் அறிக்கையிடுகின்றோம்.

•             பழைய ஏற்பாட்டு ஆமோஸ் 9:5-12ல் கடவுளின் அன்பு இஸ்ராயேலர்களுக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்படாமல் யூதர் அல்லாதவர்களும் அடிமைத்தனங்களில் இருந்தும் கடவுள் அவர்களை விடுதலை செய்து தான் அனைத்துலக கடவுள் என்பதையும் அனைவர்மீதும் அன்பு பாராட்டுகிறவர் என்பதையும் காண்பிக்கின்றார். இப்பேர்ப்பட்ட கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் சூரியனை உதிக்கப்பண்ணி மழையைப் பொழியப் பண்ணுகின்றார் (மத்தேயு 5:45-46).

•             இப்பேர்ப்பட்ட கடவுளின் அன்புக்கு சான்று பகிர நாம் அழைக்கப்படுகின்றோம். வாசிக்கப்பட்ட நற்செய்தி பகுதியில் மத்தேயு 16:13-20ல் பிலிப்பு செசரியா பட்டணத்தில் பேதுருவின் அறிக்கையை நாம் பார்க்கின்றோம். இந்த பேதுரு ஆண்டவராகிய இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என அறிக்கையிடுகின்றார். கிறிஸ்துவை பின்பற்றும் அனைவரும் இவ்வறிக்கையை சேர்ந்து அறிக்கையிட அழைக்கப்படுகின்றோம். ஆதித்திருச்சபையும் உரோம அரசுக்கு விரோதமாக இயேசுவை கிறிஸ்து என்றும் ஆண்டவர் எனவும் அறிக்கையிட்டனர். இதற்கூடாக அவர்கள் ஒரே உடலிலுள்ள அவயவங்கள் என்பதை நிரூபித்துக் காண்பித்தனர். ஆனால், இன்று இவ்வாறான அறிக்கை வெறும் அறிக்கையாக எம்மிடத்தில் காணப்படுகின்றது. இப்பகுதியில் இறைவாக்கினர் பட்டியலில் எரேமியா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் ஓர் துன்புற்ற இறைவாக்கினர் ஆவார். எனவே, துன்புறுதலின் ஊடாக வரும் மீட்பிற்கு இவர் சான்று பகர்கின்றார்.

•             திரு அவையின் ஒற்றுமையை அல்லது நாம் அனைவரும் ஒரே உடலில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள சின்னமாக திருமுழுக்கு காணப்படுகின்றது. திருமுழுக்கின் ஊடாக நாம் கிறிஸ்துவின் உடலில் பங்குதாரர்களாகவும் உறுப்பினர்களாகவும் காணப்படுகின்றோம். நாம் கிறிஸ்துவை மீட்பர் என்று அறிக்கையிடும் ஓர் அடையாளச் சின்னமாகும். பவுல் எபேசிய திருச்சபைக்கு எழுதிய கடிதத்தில் பாவமன்னிப்பின் அடையாளச் சின்னமாகிய திருமுழுக்கைப் பற்றி பேசுகின்றார். இத்திருமுழுக்கு ஒப்புரவாகுதலின் அடையாளமாகும் (1 கொரி 1:10-14). மேலும், ஒரே திருமுழுக்கினை பவுல் வலிறுத்துகின்றார் (எபேசியர் 4:1-6).

•             ஆதித்திருச்சபையில் திருமுழுக்கை பெற்ற ஒரே காரணத்திற்காக பெருபெத்துல்லாவும் அவளது 3 நாள் குழந்தையும் திராஜன் என்ற அரசனால் கொல்லப்பட்டனர். இந்தளவிற்கு அது உணரப்பட்டது. ஆனால், இன்று கிறிஸ்துவின் உடலை பாகுபடுத்தும் அளவிற்கு திருமுழுக்கு காணப்படுவதை நாம் அறிவோம். சிறுவர் திருமுழுக்கு, வளர்ந்தோர் திருமுழுக்கு, தெளிப்பு திருமுழுக்கு, முழுக்கு திருமுழுக்கு, மறு திருமுழுக்கு தூய ஆவியில் திருமுழுக்கு போன்றவைகள் காணப்படுகின்றன. இரட்சண்ய சேனை போன்ற திருச்சபைகள் நாம் பின்பற்றும் திருமுழுக்கினை பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க

ஒன்றாகும்.

Painting: Revd W Jebasingh Samuvel.

<span style="color:#ffea00" class="has-inline-color">அருளம்பலம் ஸ்டீபன்<br>Rev. Arulampalam Stephen</span>
அருளம்பலம் ஸ்டீபன்
Rev. Arulampalam Stephen

இலங்கை, Sri Lanka.

4 thought on “ஒரே உடலும் ஒரே திருமுழுக்கும்”
  1. The church need baptism but not christ! Baptism is a sign of being associated but today it became a ticket for heaven..but the sermon was well constructed and well exegeted

Comments are closed.