கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்துகிறேன்.

அருட்பணி. ஜெபசிங் சாமுவேல் எழுதிய “ புதிய சியோன் “ எனும் நூல் சீயோன் என்ற சொல்லைப் பற்றியும் அதன் உட்பொருள் பற்றியும் திருமறை ஆதாரத்தோடு எடுத்து விவரிக்கிறது.

கிறிஸ்துவின் இறுதி வருகை குறித்த விளக்கங்களும், இஸ்ரேல் பாலஸ்தீன சிக்கலை கிறிஸ்தவர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்கிற செய்திகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

11 டிசம்பர் 2009 அன்று இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பல்வேறு திருச்சபைகளையும்; திருச்சபை அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாலஸ்தீனிய கிறிஸ்தவர்களின் குழு ‘கைரோஸ் பாலஸ்தீன ஆவணத்தை’ (முPனு) அங்கீகரிக்குமாறு உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

அந்த ஆவணத்தின் இறுதிப் பகுதியில் கூறப்பட்டுள்ள செய்தியாவது:
நம்பிக்கையற்ற நிலையில், நாங்கள் எங்கள் நம்பிக்கையின் அழுகையை அழுகிறோம். நாங்கள் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டும் கடவுளை நம்புகிறோம், கடவுளின் நற்குணம் வெறுப்பிற்கும், மரணத்தின் தீமைக்கு எதிராகவும் இறுதியில் வெற்றிபெறும் என்று நாங்கள் நம்புகிறோம். அவருடைய சகோதர சகோதரிகளாகிய ஒவ்வொருவரையும் மாண்புடன் மதித்து அன்புசெலுத்தும் ‘ஒரு புதிய நிலத்தையும்’ ‘ஒரு புதிய மனுகுலத்தையும்’ நாம் இங்கு காண்போம் என்று எதிர்நோக்கியுள்ளோம்.

கைரோஸ் பாலஸ்தீன ஆவணத்தின் அழைப்பை ஏற்று பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பது எமது கடமை.
இந்த ஆவணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் ‘புதிய சீயோன்’ எனும் இந்நூலை நான்கு அத்தியாயங்களாக எழுதியுள்ளார் அருட்பணி. ஜெபசிங் சாமுவேல்.

உள்ளடக்கம்

1. சீயோன் குறித்த திருமறை அகசான்றுகள்

2. சீயோனியத்தின் வரலாற்றையும், உலக வல்லரசுகளின் நிலைப்பாடுகள்


3. சமய அடிப்படைவாதங்கள் எங்கனம் எமது சமூகத்தில் எதிர்மறைப் பாதிப்பு


4. இப்பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட எடுக்கவேண்டிய இறையியல் முன்மொழிவுகள்.

திருச்சபை மக்கள் அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய சிறந்த இறையியல் நூல்.

இந்நூலின் விலை இந்தியாவில் 150/- இலங்கையில் 300/- இந்நூலை பெற எமது முகநூலை தொடர்புகொள்ளவும்

Cover Page: Rev. P. Christhu Adiyan
One thought on “புதிய சியோன்”

Comments are closed.