கருப்பொருள்

விடுதலை மையமாக இறை ஆசியை,

இறை பெயரை நோக்குவோர்; பேறுபெற்றோர்.

புத்தாண்டு புதுஆண்டு போராடு
பல்லவி
புத்தாண்டு புதுஆண்டு போராடு
இந்தாண்டு சிறப்பா(க்)க கைகூப்பு
நீதாண்டு நிதம்தாண்டு தீமைகளை
புதுஆண்டு சிறப்பாகும் தோள்கொடு

அனுபல்லவி
நம்பு நன்மை நம்பு
நம்பு கடவுளை நம்பு
நம்பு நம்மை நம்பு
நம்பு நடக்கும் நம்பு

சரணங்கள்

கைகழுவு தீமைகளை கைகழுவு
எதிர்ப்புசக்தி அதிகரி தீமைநீக்கு
கொரோணாவின் ஆதிக்கம் தொடர்ந்தாலும்
கொடுமைகளை எதிர்த்திட வா வந்திடு

எழுந்துநில் துன்பங்களை எதிர்த்திடு
எதிர்காலம் வாழ்ந்திட வா திட்டமிடு
கொடுமைகளின் அச்சுறுத்தல் தொர்ந்தாலும்
விழித்தெழு போராட வா வந்திடு

எதுஉண்மை என்பதை தேடிடு
எதுநன்மை கூட்டாக சேர் தீர்மானி
ஆணவ அழிவுகள் தொடர்ந்தாலும்
அன்பாக கையாளு வா வந்திடு

மாசு களை மருந்தாகு நலமா(க்)கு
மண்ணகம் மாண்புற போ புறப்படு
நீடிக்கும் போட்டிகள் தொடர்ந்தாலும்
நீடுவாழ எதிர்காலம் வா பகிர்ந்திடு

தீமைகளை எதிர்த்து ஒற்றுமையாக போராடு புத்தாண்டு சிறப்புறும்

எண்ணிக்கை 6: 23 – 27
நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:
‘ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!’
அமைதியடைய ஆசி – சிறப்பான வாழ்வுக்காக

திருப்பாடல் 8
மனிதர் சிறப்படைய மாட்சிமிகு கடவுள் தரும் அருள்

கலாத்தியர் 4:4 – 7
திருச்சட்டத்துக்கு உட்பட்டவர்களை (அடிமைகள்), பிள்ளைகளாக்க மனிதரான கடவுள். ‘அப்பா தந்தையே’ என கடவுளை அழைக்கும் உரிமை (பிள்ளைகள்) – வாழ்வை உறுதி செய்தல்.

லூக்கா 2:15 – 21
இயேசு எனும் பெயர் – அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத்தேயு 1:21) விடுவிக்க… காப்பாற்ற…

இறை ஆசி, இறை பெயர் – விடுவிக்க, காப்பாற்ற, மீட்க…

மன்றாட்டு

கடவுளே, இறை ஆசியை, இறை பெயரை விடுதலையுடன் நோக்க வலுவூட்டும். மனுவுருவான இயேசு கிறிஸ்துவின் கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

அருட்பணி SDPசெல்வன்
அருட்பணி SDPசெல்வன்

இலங்கை