தீமைகளை நிராகரித்து, திருமுழுக்குப் பெற்று, இறையாட்சிக்காக உழைக்க முன்வருவோர் பேறுபெற்றோர். அவர்கள் வாழ்வு இயேசுவின் வழியில் இருக்கும்.

சூழ்நிலை
திருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா அல்லது இறையாட்சி வாழ்க்கையை வாழ முன்வருவோரின் வாழ்க்கை அடையாளமா? இயேசுவின் திருமுழுக்கு அவரை எப்படி அடையாளப்படுத்தியது?


எசாயா 43: 1 – 7
அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன் (43:1) நம்பிக்கை தரும் ஒரு புதிய விடுதலைப்பயணத்துக்கு அழைப்பு.

திருப்பாடல் 29
புயல் நடுவே ஆண்டவர் குரல். வுலிமை மிக்க ஆண்டவர்.

திருத்தூதர்பணிகள் 8:14 – 17
நற்செய்திப்பணி நடைபெற்ற சமாரியாவில் திருமுழுக்கு ஊடாக தூயாவியை பெற பேதுருவும் யோவானும் பணி செய்தனர்.

லூக்கா 3:15 – 17, 21 – 22
மெசிய எதிர்பார்ப்பு நிலவிய அன்றைய காலத்தில் திருமுழுக்கு யோவான் அவரை மெசியா அல்ல என குறிப்பிட்டார். (16). மெசியாவின் பணி தீPமைகளை நிராகரிக்கும் பணி (17). இயேசு திருமுழுக்குப் பெற்ற போது தூயாவி அவர் மீது (புறா வடிவில்) இறங்கினார். வானிலிருந்து வந்த சத்தம், ‘என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்(22). இயேசுவின் திருமுழுக்கு அவரது இறையாட்சிப் பணியை வெளிப்படுத்தியது.

இயேசுவின் திருமுழுக்கு – இயேசுவை வெளிப்படுத்தியது. தீமைகளை நிராகரிக்கும் இயேசு. எமது திருமுழுக்கு வெளிப்படுத்தும் கருத்தென்ன?

மன்றாட்டு

கடவுளே, தீமைகளை நிராகரித்தமைக்கு நன்றி. இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு ஊடான வெளிப்பாட்டை புரிய உதவும்;. கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

அருட்பணி SDPசெல்வன்
அருட்பணி SDPசெல்வன்

இலங்கை