Guido Reni (1575–1642), The Conversion of Saul (c 1615-1620), oil on canvas, 238 x 179 cm, Monasterio de San Lorenzo, El Escorial, Spain. Wikimedia Commons.

25 தை 2022

மத்தேயு 19:27-30

• தை 25ம் திகதி திருச்சபையின் ஒருமைப்பாடு வாரத்தின் நிறைவுநாளாகும். இந்நாள் புனித
பவுலின் மனமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் நாளை குறிக்கின்றது.

• பவுலின் மறுரூபமாகுதலைப் பற்றி நாம் திருமறையில் படிக்கும்போது லூக்கா கூறும் விளக்கத்தையும், பவுல் கூறும் விளக்கத்தையும் எம்மால் கண்டு கொள்ள முடியும். அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 9:1-18, 22ம் அதிகாரம் போன்ற அதிகாரங்களில் லூக்கா, பவுல்
திருச்சபையை துன்புறுத்தியதை சற்று மிகைப்படுத்தி காண்பிக்கின்றார். ஆனால், கலாத்தியர் 1ம் அதிகாரத்தில் பவுல் தமஸ்கு நிகழ்வைப் பற்றி கூறும்போது அதனை ஒரு சாதாரண நிகழ்வாகவே வர்ணிக்கின்றார். மேலும், தமஸ்து நிகழ்வின் பின்னர் தனது ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர்
அராபி தேசத்தில் பவுல் தியானத்தில் இருந்ததை பவுலே குறிப்பிடுகின்றார்.

• பழைய ஏற்பாட்டு பகுதிக்குள் வரும்போது எரேமியா 1:4-8ல் பவுல் தன்னுடைய அழைப்பை எரேமியா இறைவாக்கினரின் அழைப்பிற்கு ஒப்பிடுகின்றார். அதாவது, தாயின்
கர்ப்பத்தில் இருக்கும்போது கடவுள் தன்னை அழைத்ததாக கூறுகின்றார் (கலாத்தியர் 1:15-20). எனவேதான், பவுல் தனது மறுரூபமாகுதலின் பின்னர் சிந்தனையிலே மாற்றம் ஏற்பட்டதே தவிர சமயத்தில் மாற்றம் ஏற்படவில்லை. அதாவது, யூத சமயத்தில் காணப்பட்ட ஓர் இறைக்கொள்கை, பழைய ஏற்பாடு, திருவிழாக்கள் போன்றவற்றை அவர் கடைப்பிடித்தார். ஆனால், மறுகரையில் இயேசுவே மெசியா என அறிக்கையிட்டார்.

• வாசிக்கப்பட்ட நற்செய்தி பகுதியில் மத்தேயு 19:27-30ல் பேதுரு ஊழியத்திற்கான பரிசை எதிர்ப்பார்க்கின்றார். இங்கு இறுதியியல் சார்ந்த நம்பிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், ஊழியத்தின் கிரயமாக சிலுவை மரணமே பரிசாகின்றது. எனவேதான், கி.பி 64ம் ஆண்டளவில் பவுல் நீரோவினால் சிரைச்தேசம் செய்யப்பட்டான். பேதுருவோ வத்திக்காண் மைதானத்தில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டான். எனினும், யூதர்களுக்கு நற்செய்தியை
அறிவிக்கும் கருவியாக கடவுள் பேதுருவையும் புற இனத்தவரின் அப்போஸ்தலராக கடவுள் பவுலையும் தெரிந்தெடுத்ததையும் மறந்துவிட முடியாது. ‘மற்றவர்களுக்கான மளிதள்’ என
அழைக்கப்பட்ட ஜேர்மனியை இறையியலாளரான பொன் கோபர் கடவுள் ஒர் மனிதன் அழைக்கும்போது அவனை மரணத்திற்காகவே அழைக்கினற்hர் என்பது உண்மை என்கின்றார். இக்கூற்று பவுலிலும் பேதுருவிலும் நிறைவேறுகின்றது.

Painting by Guido Reni (1575–1642), The Conversion of Saul (c 1615-1620), oil on canvas, 238 x 179 cm, Monasterio de San Lorenzo, El Escorial, Spain. Wikimedia Commons.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை