Presentation of Jesus at the Temple

2 பெப்ரவரி 2021

லூக்கா 2:22-40

•             கடவுள் தன்னை பல்வேறு வழிகளில் உலகில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை, அடையாளச் சின்னங்கள், மனிதர்கள் போன்றவைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு கிறிஸ்து தன்னை ஆலயத்தில் வெளிப்படுத்துகின்றார். இவ்வெளிப்பாடு இறைவாக்கினர் மல்கியாவின் ஊடாக உரைத்த இறைவாக்கின் நிறைவேறுதலாகும்.

சாமுவேலை கடவுளுக்கு அர்ப்பணித்தல்

•             கடவுள் தனது திருப்பணியை ஆற்றுவதற்கு மனிதர்களைத் தேடுகின்றார். மனிதர்களே கடவுளின் பிரதிநிதிகளாகும். யூத முறைமையின்படி பிறக்கின்ற ஒவ்வொரு ஆண் குழந்தைகளும் கடவுளுக்கே சொந்தமாகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் அன்னாளும் எல்கானாவும் சாமுவேலை கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர் (1 சாமுவேல் 1:19-20). அத்துடன், அன்னாள் கடவுளுக்கு செய்த பொறுத்தனையின் நிறைவேறுதலாகவும் இதனை பார்க்கலாம். இவ்வாறாக, கடவுளுக்கு உரியதை அவருக்கே செலுத்துகின்ற தன்மையையே நாம் திருப்பாடலில் காண்கின்றோம்.

•             பரிசுத்த பவுல் உரோமருக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் சரீரங்களை கடவுளுக்கு படைக்குமாறு வேண்டுகின்றார். இதனை ரோமர் 12:1-3 வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். ஏனெனில், ஞானவாதக் கொள்கையினர் சரீரம் தீயது என போதித்தனர். மறுகரையில், சரீரம் இன்பப்பொருள் என எப்பிக்கூரர் போதித்தனர். இதன் பிண்ணனியிலேயே சரீரம் உயிருள்ள பலியாக கடவுளுக்கு படைக்கப்பட வேண்டும். இதுவே கடவுளுக்கு நாம் புரியும் புத்தியுள்ள ஆராதனை என்கின்றார்.

சிமியோனின் பாடல் இயேசு அனைத்துலகத்திற்கும்  உரியவர் என்பதை காண்பிக்கின்றது

அனைத்துலக ஆளுநரை அறிமுகப்படுத்தும் சிமியோனின் பாடல்

•             ஆண்டவர் இயேசு ஆலயத்தில் அர்ப்பணிக்கப்படுதல் நற்செய்தியாளன் லூக்காவின் நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. இந்நிகழ்வு இறைவாக்குகளின் முழுமையாகவும் யூத பிரமாணங்களின் நிறைவாகவும் நாம் காண்கின்றோம். இப்பகுதியில் காணிக்கையாக புறாக்குஞ்சுகள் படைக்கப்படுகின்றன. இதன் மூலம் இயேசுவின் பெற்றோர்கள் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பது தெளிவாகின்றது. மேலும், சிமியோன் இயேசுவை கையில் ஏந்தி பாடுகின்ற பாடல் லூக்கா நற்செய்தியில் மாத்திரம் நாம் காணலாம். குறிப்பாக, லூக்கா பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். மரியாளின் பாடல் (லூக்கா 1:46-55), சகரியாவின் பாடல் (லூக்கா 1:68-80), தேவதூதர்களின் பாடல் (லூக்கா 2:10-15) ஆகிய பாடல்களை நாம் காணலாம். இங்கு

சிமியோனின் பாடல் இயேசு அனைத்துலகத்திற்கும்  உரியவர் என்பதை காண்பிக்கின்றது. இதனையே, லூக்கா தனது பரம்பரையியல் பட்டியலில் ஆதாமில் இருந்து ஆரம்பிக்கின்றார். அத்துடன், லூக்கா தனது நற்செய்தியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். எனவேதான், இந்நிகழ்வில் ஆசேர் கோத்திரத்தை சேர்ந்த பானுவேலின் குமாரத்தியாகிய அன்னாள் குறிப்பிடப்படுகின்றாள். இதுவும் லூக்காவின் சிறப்பியல்பு ஆகும். மேலும், லூக்கா இயேசுவை ஒரு மீட்பராக காண்பிக்கின்றார் (லூக்கா 19:10). அத்துடன், மரியாளை பார்த்து, உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவிப்போகும் என்ற பகுதியினூடாக இயேசுவின் பாடுகள், மரணம் போன்றவைகள் நிழலிட்டு காட்டப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக இயேசு யார் என்பதை இப்பகுதி வெளிப்படுத்துகின்றது.

•             இத்தினத்தன்றே இலங்கை திருச்சபை, குருணாகலை மறைமாவட்டத்தின் அர்ப்பணிப்புத் திருநாளாக நாம் அனுஷ்டித்து வருகின்றோம். அதன் முதலாவது பேராயராக லக்தாச டிமெல் பணியாற்றி உள்ளார். அதற்கடுத்து லக்ஷ்மன் விக்கிரமசிங்க, அன்ரூ குமாரகே, குமார இலங்கசிங்க, ஷாந்தா பிரான்சிஸ் தற்போது கீர்த்தி ஸ்ரீ பிரானந்து போன்றவர்கள் கடமையாற்றி வருகின்றனர். சிறப்பாக தூதுப்பணி மற்றும் பண்நாட்டு மையமாக்கல் போன்ற இலக்குகளைக் கொண்டு இம்மறைமாவட்டம் செயற்பட்டு வருகின்றது.

Presentation of Jesus at the Temple, This is the day we observe the dedicated day of the Diocese of Kurunegala. Lakdasa Dimel served as its first archbishop. Lakshman Wickremesinghe, Anroo Kumarage, Kumara Ilangasinghe and Shanta Francis have done wonderful contribution and Now Bishop Keerthisri Fernando is currently serving. The Diocese is functioning with special objectives such as mission and cultural focus which is known as indigenization .

Painting Credit: Rev. W. Jebasingh Samuvel

அருளம்பலம் ஸ்டீபன்,
அருளம்பலம் ஸ்டீபன்,

இலங்கை