February 27, 2022, Sunday
7th Sunday before Easter

Lent: A Time of Redemption

Isaiah 58: 1-14
Psalm Ps.6
Romans 2:1-13
John 5:1-9

27 பெப்ரவரி 2022
யோவான் 5:1-9

‘சொட்டோரியா’ முழுமையான மீட்பு

மீட்பு என்னும் பதம் ‘சொட்டோரியா’ σωτηρία என்ற கிரேக்க மொழியினால் அழைக்கப்படுகின்றது. இது வெறுமனே மக்களுக்கான ஆன்மீக விடுதலையை மாத்திரம் குறிக்காமல் அரசியல், பொருளாதார, சமூக வெற்றிகளையும் குறிக்கின்றது. பொதுவாக, இன்று இயற்கையும் மீட்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. லூக்கா நற்செய்தியாளன் இயேசுவை மீட்பர் எனக் காண்பிக்கின்றார் .

தேவையில் உள்ள மனிதனின் குறைவுகளை நிறைவாக்குவது விடுதலை

முதலாம் உடன்படிக்கை வாசகத்தில் ஏசாயா 58: 1- 14 மீட்பு என்பது தேவையில் உள்ள மனிதனின் குறைவுகளை நிறைவாக்குவது என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. எனவே, உண்மையான உபவாசம் என்பதும் அதுவேதான். இப்படியான விடுதலையையே தாவீது திருப்பாடலிலும் எதிர்ப்பார்க்கின்றார்.

ரோமருக்கு எழுதின நிருபத்தில் 2:1-13ல் மீட்பு என்பது நாம் பிறரை நியாயந்தீர்க்கும் மனநிலையை விட்டுவிடுதலாகும். இதன்படி, நியாயந்தீர்ப்பு கடவுளுக்கு உரியது என உணர்ந்து நாம் நன்மை செய்வதில் துரிதப்படவேண்டும்.

உதவியற்றவரை காப்பாற்றுவது மீட்பு

நற்செய்தி பகுதியில் யோவான் 5:1-9ல் மீட்பு நோயிலிருந்து கிடைக்கும் விடுதலையாகும். இங்கு, நோயுற்ற ஒரு மனிதன் உதவியற்றவராக காணப்பட்டார். எனினும், மீட்பராகிய கிறிஸ்து மனுமகனாக அவனைக் குணப்படுத்தி நோயிலிருந்து மீட்டுக்கொண்டார். எமது நாளாந்த வாழ்வில் மீட்பு என்ற பதத்தை ஆன்மீகத்திற்குள் மாத்திரம் கட்டுப்படுத்திவிடாமல் எமது அற வாழ்விலும் மற்றும் மாய்மால ஆன்மீகம் சிறை பிடித்து வைத்திருக்கும் அனைத்து குறைகளிலுமிருந்து எம்மை மீட்டுக் கொள்ள முற்படுவோமாக.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை