20 மார்ச் 2022
Acknowledging Faith beyond Boundaries
மத்தேயு 15:21-28
Isaiah 44:28-45: 8
Psalm 125
Acts 10:24-33
Matthew 15:21-28
பற்றுறுதி மனிதவாழ்வில் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஓர் ஊடகமாகும். இப்பற்றுறுதி நாளுக்குநாள் வளர்ச்சியடைய கூடியதாகவும் மாற்றம் அடைய கூடியதாகவும் காணப்படுகின்றது. இது ஓர் குறிக்கப்பட்ட எல்லைக்குள் செயற்படாமலும் ஆண், பெண் பேதங்களின்றியும் செயல்படுவதை நாம் பார்க்கின்றோம்.
• முதலாம் உடன்படிக்கையிலும் திருப்பாடலிலும் கடவுளின் அனைத்துலக தன்மையையும் அவரது செயற்பாட்டையும் காண்கின்றோம். சிறப்பாக, இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமைகளாக இருந்தவேளையில் அவர்களை மீட்கும்படி கடவுள் சைரஸ் என்ற பாரசீக அரசனை தெரவு செய்தார். இவர் யூதர் அல்ல. எனவே, இறைவனின் எல்லை கடந்த தன்மையை இங்கு பார்க்கின்றோம்.
• இரண்டாம் உடன்படிக்கையின் வாசகத்தின்படி கடவுள் இனம்பார்த்து செயற்படுவதில்லை என்பதற்கு அடையாளமாக தூய ஆவியானவர் கொர்னேலியு இல்லத்தில் வந்து இறங்கியமையும் செயற்பட்டதையும் நாம் காண்கின்றோம். இதுவே, புற இனத்தவர்களுக்கான பெந்தேகோஸ்தே விழாவாகும். இங்கு, யூதர்களின் எல்லைகளைத் தாண்டி புற இனத்தவர்கள் இறைவன்மீது கொண்டுள்ள பற்றுறுதியை நாம் பார்க்கின்றோம்.
• நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கானானியப் பெண்மணியின் மகளை குணப்படுத்தியதை நாம் காண்கின்றோம். பொதுவாக, யூதர்கள் ஏனையவர்களை நாய்கள் என்றே கருதினர். எனவேதான், அப்பெண்மணி நாய்க்குட்டிகள் பிள்ளைகளின் அப்பத்தை சாப்பிடுமே என்கிறாள். அதாவது, யூதர்கள் தாம் உணவு உண்ட பாத்திரத்தை தண்ணீரால் கழுவமாட்டார்கள். மாறாக, ரொட்டித் துண்டினால் துடைத்து வீசுவர். மேலும், அப்பெண்மணி இயேசுவை நோக்கி, முதலில் உம்முடைய பிள்ளைகள் உண்ணட்டும் மிகுதியாக இருப்பின் உம்முடைய ஆசீர்வாதத்தில் என்னையும் நினைந்துக் கொள்ளும் என்கின்றாள்.
நாம் வாழும் பல்சமய சூழலில் இறைவனையும் அவரது செயற்பாட்டையும் பற்றுறுதியையும் திருச்சபைக்குள்ளும் திருமறைக்குள்ளும் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் திருச்சபைக்கு வெளியேயும் காண அழைக்கப்படுகின்றோம். இறைவன் ஆள்பார்த்து செயற்படாததுபோல நாமும் செயற்பட அழைக்கப்படுகின்றோம். நேத்தன் சோல்டபுரோம் என்பவரின் கூற்றுப்படி,
“திருச்சபைக்கு வெளியே கடவுளுடைய செயற்பாடு இல்லையேன நாம் கூறினால் திருச்சபைக்குள் உள்ளேயும் கடவுளுடைய செயற்பாடு இல்லை என்பதே உண்மையாகும்.”