மேலறைப்பேச்சு 7

லெந்து காலத்தின் ஏழாம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 36-38

அன்பினால் ஆற்றும் பணி பற்றி இயேசு போதித்துக்கொண்டிருக்க, அதைக்கவனியாமல் பேதுரு முன்னதாக இயேசு சொன்னதையே (13:33) நினைத்து குழம்புகிறான். தன்னுடைய ஆன்மீகத் துணிச்சலைக் காட்டும் வண்ணம் இயேசுவை அப்பொழுதே பின்பற்ற தான் தகுதியுள்ளவன் எனக் கூறுகிறான். இயேசுவின் பதில் பேதுருவுக்கு சொன்ன செய்தி என்ன?

தங்கை, தம்பி, உன்னுடைய கிறிஸ்தவ வாழ்விலே நீ காத்திருப்பதற்கு பொறுமை இழக்கும் வேளைகள் எவை? சொல்லப்போனால் இயேசுவைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல;.உன்னுடைய சுய பெலனாலே அதை செய்ய முடியாது. கிறிஸ்துவுக்கு நீ தரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆவியானவரின் துணை உனக்குத் தேவை என்பதை நீ உணருவாயா?

ஜெபம்:
இரக்கமுள்ள இயேசுவே, என் பொறுமையின்மையையும் கவனக்குறைவையும் மன்னியும். என் பெலவீனங்களைக் காண என் கண்களைத் திறந்தருளும்.. என்னை பெலப்படுத்த உம் தூய ஆவியால் துணைபுரியும்.

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், அருகில் வா. அமர்ந்து பொறுமையாய் நான் சொல்வதைக் கவனி. உன்னுடைய ஆர்வத்தையும், இயலாமையையும் நான் அறிவேன். நான் உன்னைக் கரம்பிடித்து நிதானமாக வழி நடத்துவேன்.

Devotion for the seventh day in Lent

Read John 13:36-38

While Jesus was busy teaching about serving in love, Peter was distracted with the question of Jesus going away. He could not wait for the time when he could follow Jesus(13:33). His impatience made him lose focus on his master’s teaching. He declared his loyalty to Jesus as a qualification to follow his master right then. What did Jesus want Peter to understand by his response?

Dear Sister / brother! In what area are you likely to become impatient in your Christian life? In fact following Jesus is not all that easy. You cannot do it on your own strength. Do you know you need help from the Spirit to fulfil the promises you make to Jesus?

Prayer:
Gracious Jesus, please forgive my impatience and distractions. Open my eyes to know my limitations in following you. Please strengthen me with your Spirit.

Jesus might say…..
My child, come to me and be patient in listening to me. I understand your eagerness and your weakness. I shall hold your hand and lead you on one step at a time.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா