மேலறைப்பேச்சு 8

லெந்து காலத்தின் எட்டாம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 14:1-3

காட்டிக்கொடுக்கப்போகும் யூதாஸினாலும் (13:21), மறுதலிக்கப்போகும் பேதுருவினாலும்(13:38) இயேசு ஆவியிலே கலங்கினார். ஆயினும் தம் துயரத்தை மறந்து தமது சீடரை ஆறுதல் படுத்துகிறார். இரண்டு விசுவாச பாதைகளைக் காட்டுகிறார் ” கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.” அவருடைய நம்பிக்கையை பகிர்ந்து, அவருடன் இணைந்து கடவுளை விசுவாசிக்க அழைக்கிறார். மேலும் சீடருக்கு தம்மை உருவுடையவராகவும், உறவாடுகிறவராகவும் காட்டி தன்னிடத்திலும் விசுவாசமாயிருந்து துன்புரும் வேளையில் ஆறுதல் பெற அழைக்கிறார். உன்னதமான ஓர் எதிர்நோக்கு பற்றிய நம்பிக்கை அளிக்கிறார். சிறப்பாக ஏற்க வேண்டியது என்னவென்றால் இயேசு வந்து நம்மைத் தம்மோடு இருக்கும்படி அழைத்துச் செல்வார் என்ற வாக்குறுதிதான்.

அன்பு தங்கை / தம்பி, இந்த வசனங்கள் இயேசுவை பற்றி உனக்கு என்ன சொல்லுகிறது?

நம்பத்தக்கவர்,

ஆயத்தம் செய்யப் போகிறவர்,

அழைத்துக் கொள்ள வருபவர்

உனக்கு ஏதேனும் பயங்கள் உண்டா? கவலைப்படாதே அவைகளைப்பற்றி அவருக்கு முன்னமேயே தெரியும். குழப்பத்திலும் பயத்திலும் இருக்கும் உனக்கு அவர் ஆறுதல் அளிக்க வல்லவர்.

ஜெபம்:
ஆறுதலளிக்கும் என் இயேசுவே, உம்மை மறந்து எனக்காக கரிசனை கொள்கிறீரே. தன்னலமற்ற உமது அன்புக்காக தோத்திரம்.என்னுடைய ஐயங்களையும் அச்சங்களையும் அகற்றும். உமது உறவில் நித்திய காலமாய் நிலைத்திருப்பேன் என்ற நம்பிக்கையை நான் விடாமல் பற்றிக்கொள்வேன்.

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய். நீ என் செல்ல ஆட்டுக்குட்டி. என் உயிரைக் கொடுத்தாவது உன் நலம் பேணுவது எனக்கு பெரு மகிழ்ச்சி. என் மந்தையின் பாதுகாப்பில் நீ என்றும் மகிழ்ந்திரு.

Devotion for the eighth day in Lent

Read John 14: 1-3

Jesus is troubled in spirit on account of the impending Judas’ betrayal (13:21) and Peter’s denial (13:38). But brushing aside his personal distress, Jesus offers comfort to his disciples. He demands a twofold belief when their hearts are troubled: “believe in God; believe also in me”. Jesus invites the disciples to share his faith and join him to believe in God. In addition he presents himself as a tangible and intimate person to hold on to and says “believe also in me”. He offers the disciples hope for something to look forward to. What matters most is the promise that Jesus will come for us and we will be with Jesus wherever that is.

Dear sister/ brother! How do you see Jesus in these three verses? (1, He is trustworthy, 2, goes to prepare for us, and 3, returns to receive us) Do you have fears? Then Jesus knows about it already. He comforts you when you are confused or afraid.

Prayer:
Jesus, my comforter, you forget yourself caring for me. You love me selflessly, thank you. Wipe away my fears and doubts so that I can hold on to the hope of eternal fellowship with you.

Jesus might say…..
My child, you are my precious lamb. I delight in your wellbeing even at the cost of my life. Be comforted in the safety of my fold.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா