மேலறைப்பேச்சு 10

லெந்து காலத்தின் பத்தாம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 14:8-11

தன்னை அறிவதே பிதாவை அறிவதற்கும், காண்பதற்கும் இணையானது (14:7) என்று இயேசு அப்பொழுதுதான் சொல்லி முடித்தார்..

பிலிப்பு கேட்பது என்ன?, ஓர் அற்புதமான “தேவ தரிசனமா?” இயேசு அவனுக்கு பொருமையோடு சொன்ன பதிலில் ஒரு சோகம் தொனிப்பது தெரிகிறதா? படித்துதான் பார்ப்போமே. 9-11 வசனங்களை இயேசு எப்படி சொல்லியிருப்பார் என்று உணர்ச்சி பொங்க வாசித்துப் பாருங்கள்.

இயேசுவின் ஏமாற்றம் புலப்பட்டதா? சீடர்கள் விசுவாசிக்க ஆணித்தரமான் ஆதாரங்கள் அவர்களுக்குத் தேவை என்று இயேசு உணருகிறார். அவர் அற்புதங்களை விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறவர் அல்ல. முன்பு ஒரு தடவை (மத்தேயு 11:2-6ல்) யோவான் ஸ்நானகனின் விசுவாசம் குலைந்தபொழுது அற்புதங்களை சுட்டிக்காட்டி அவனை பலப்படுத்தினார். இப்பொழுதும் சீடர்களின் விசுவாசம் குன்றினதால் தன்னுடைய கிரியைகள் (அற்புதங்கள்) நிமித்தமாவது விசுவாசிக்கும்படி அவர்களைத் தூண்டுகிறார்.

இனிய தங்கை/ தம்பி! இயேசுவை விசுவாசிப்பதில் ஐயப்பாடுகள் உனக்கு ஏதேனுமுண்டா? பிலிப்புவைப்போல இயேசுவிடம் அவற்றை சொல்லிவிடு. தெளிவு பிறக்க ஜெபி. வேத ஆய்வுக் கூட்டங்களுக்குப் போ. அதில் உன் ஐயப்பாடுகளுக்கு விடை கிடைக்கும் அப்படி கூட்டங்கள் இல்லை என்றால் நடத்தும்படி உன் ஆயரிடம் கேட்டுக்கொள்.

ஜெபம்
இயேசுவே, கருணை மிக்க குருவே, சில வேளைகளில் என் அவநம்பிகையால் உம்மைத் துக்கப்படுத்தி விடுகிறேன். உம்முடைய பொருமைக்கு நன்றி. உம்மை விசுவாசிக்க ஆசிக்கிறேன். என் உள்ளத்தில் நம்பிக்கையை ஊற்றும்; உம் வழியாய் பிதாவைக் காண என் கண்களைத் திறந்தருளும்.

இயேசுவின் பதில்…….
குழந்தாய், ஐயப்பாடுகள் இயல்புதான். உன் சந்தேகங்களை எல்லாம் என்னிடம் சொல்.என் உடலாகியத் திருச்சபையில் அங்கமாகு. அதின் உறவிலே நீ வளர்ச்சியடைவாய். நான் ஆவியாக அவர்கள் மத்தியில்தான் குடியிருக்கிறேன். மக்கள் முழுமையடைய அவர்களுக்கு போதிப்பதும் நான் தான்.

Devotion for the tenth day in Lent

Read John 14: 8-11

Jesus has just told that knowing him is knowing and seeing the Father. Was Philip asking for a more concrete “vision” of the Father? Jesus very patiently interacts with Philip. Is there a little sadness in his tone? Try enacting his response. Please read verses 9-11 as Jesus might have said it. Did you capture his disappointment? Jesus recognizes a need for convincing evidences for the disciples to believe. Jesus did not use miracles for publicity. He did present miracles once before to restore the crumbling faith of John the Baptist. (Matthew 11:2-6) Now, once again he appeals for the disciples belief in him at least based on his miracles.
Dear sister, brother! Do you have any unanswered questions about your faith in Jesus? Like Philip, present it to Jesus and pray about it. Please attend bible studies. If there is none, ask your pastor to conduct bible studies where you can present your doubts.

Prayer
Jesus, my gracious teacher, Sometimes I make you sad with my disbelief. Thank you for your patience with me. I want to believe in you. Help me to believe. Open my eyes to behold the Father through you.

Jesus might say…..
My child, It is okay to have doubts. Come to me with all your uncertainties. Be part of my body, the church where you can seek to grow in their fellowship. I reside there in spirit teaching and making people whole.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா