மேலறைப்பேச்சு 12

லெந்து காலத்தின் பன்னிரென்டாம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 14:15-17

தங்களது அன்பின் வெளிப்பாடாக சீடர்கள் இயேசுவின் கட்டளைகளைக் கைகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அவர்களோடும் அவர்களுக்குள்ளும் நெருக்கமாக உறையும் சத்திய ஆவியாகிய வேறோரு தேற்றரவாளரை இயேசு வாக்குப்பண்ணுகிறார். ”வேறோரு தேற்றரவாளரை” என்று சொல்வதால் முந்தின தேற்றாரவாளர் இயேசுவே என்று பொருள் கொள்ளலாமா?
(கவனிக்கவும்: தூய ஆவியானவர் பற்றிய முதல் கூற்று: “அவர் சத்திய ஆவி”.
ஏனைய கூற்றுக்களை பிறகு காண்போம்.)

அன்புத் தங்கை, தம்பி, ஆவியானவர் உன்னோடு எப்படி பேசுகிறார்? அவருக்கு கீழ்ப்படிக்கிறாயா? கீழ்ப்படியாவிட்டால் அவரை நீ துக்கப்படுத்துகிறாய் (Eph. 4:30).. அவரை மகிழ்வி. இயேசுவின் கற்பனைகள் கைக்கொள்ளக் கடினமானவைகளா? உனக்கு யார் உதவக்கூடும்? இயேசுவையே கேட்டுப்பாரேன்!

ஜெபம்
இயேசுவே என் முதன்மை ஆலோசகரே, எனக்குள் உறையும் சத்திய ஆவியாகிய தேற்றரவாளருக்காக உம்மைத் துதிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிற அளவுக்கு உமக்கு கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யும்.

இயேசுவின் பதில்……

என் குழந்தாய், நீ என்னை நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை மறந்துவிடாதே. என் கற்பணைகளை பின்பற்றுவது கடினம் என்பதும் எனக்குத் தெரியும். திடன் கோள்; நான் எப்பொழுதும் உன்னோடும் உனக்குள்ளும் இருக்கிறேன். நாம் இருவருமாக இணைந்து வெற்றி கொள்வோம் என் மேல் சார்ந்து முயற்சி செய்.

Devotion for the twelfth day in Lent

Read John 14:15-17

The disciples are exhorted to obey Jesus’ commandments as an expression of their love for him. Jesus also promises “another counselor” who is a resident spirit of Truth for a more intimate relationship (“with you and in you”). What does “another counselor” mean? Was Jesus the prime counselor? Jesus elaborates on the Spirit of truth later in 16:13.
(Note: This is the first Paraclete saying: Holy Spirit-“ the spirit of truth”. We will see four more later)

Dear sister/ brother! How does the counselor speak to you? Well, do you listen to him? If you don’t you grieve him (Eph. 4:30). Please keep him happy. Are the commandments of Jesus too difficult for you to follow? Who can help you? Ask Jesus for help.

Prayer.
Jesus my prime counselor, thank you for the other counselor, the indwelling spirit of Truth.
Help me to obey you as much as I love you.

Jesus might say…..
My child, I know you love me. Remember I love you too! I also know it is not easy to follow my commands. Take courage I am present with you and in you. Together we can master. Just lean on me and try.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா