மேலறைப்பேச்சு 14

லெந்து காலத்தின் பதினான்காம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 14:22-24

இதுவரை பேசாத யூதா “எங்களுக்கு ஏன் இந்த சிறப்பு வெளிப்பாடு” என்று கேட்க இயேசு தாம் சொன்ன போதனையை பொருமையாக ஒரு வியத்தகு மாற்றத்தோடும் ஓர் அற்புத இணைப்போடும் மீண்டும் சொல்கிறார்.

21 மற்றும் 23 ம் வசனங்களை ஒப்பிடுங்கள்: எது எதற்கு முன்னோடி?

21ல் கைக்கொள்பவன் அன்பாயிருக்கிறான். 23ல் அன்பாயிருக்கிறவன் கைக்கொள்கிறான். 21ன் “என் கற்பனை” 23ல் “என் வசனம்” என்று மாறி விட்டது!. 24ல் அதுவே பிதாவினுடைய வார்த்தை” என்று விளக்குகிறார். இயேசு சொல்லும் அற்புத இணைப்புச் செய்தி என்னவென்றால் பிதாவாகிய கடவுளும் குமாரனாகிய கடவுளும் நம்மோடிருக்க வருகிறார்கள் என்பதுதான்.

அன்புத் தங்கை / தம்பி. உன்னில் இளைப்பாறுவதற்காக அவர்கள் வருகிறார்கள்! சொந்த வீடு போல ஆர அமர அவர்கள் தங்கி தரித்திருக்கப் போகிறார்கள். இயேசு மாட்டுத் தொழுவத்தின் எளிமைக்கு பழக்கப்பட்டவர்தானே! கதவு தட்டும் சத்தம் கேட்டால் ஓடிப்போய் அன்புடன் கதவைத் திறந்துவிடு இயேசுவின் குடியிருப்புவருவது அவர்கள்தான்; உன்னுடன் இளைப்பாறி மகிழ உரிமையுடன் வருகிறார்கள்.

ஜெபம்:
அன்பின் இயேசுவே, உமது வார்த்தையே நித்திய வாழ்வு; உம்மை நான் நேசிப்பதால் அவற்றைக் காத்துக்கொள்வேன்.. உம் குடியிருப்பாக என்னைத் தெரிந்துகொண்டதற்கு நன்றி. உமக்கு உகந்த உறைவிடமாக என்னைச் சுத்தம் செய்து விடுகிறேன். குடியிருக்க வாரும்.!

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய் உன் அன்பு பொன் போன்றது, நானும் என் பிதாவும் உன்னிடம் குடியிருக்க வருகிறோம். நான் கதவைத் தட்டும்போது தயவு செய்து கதவைத் திறந்து எங்களை உள்ளே விடு. இதுவரை எனக்கு மூடி வைத்திருக்கும் உன் வாழ்வின் பகுதிகளை நீ கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து என்னை அங்கும் வரவேற்க நான் உனக்குத் துணைபுரிவேன்.

Devotion for the fourteenth day in Lent

Read John 14:22-24 (Please use your bible)

Judas, a quiet person seeks to know why this special revelation is to the disciples only. Jesus patiently repeats his teaching but with an interesting twist and an amazing addition. Compare verses 21 and 23: what leads to the other: in verse 21 obedience precedes love and in verse 23 love goes before obedience. Jesus is no more talking about keeping “my commandment” but “my word”. In verse 24, it gains a new dimension: it is the “word of the Father”. The amazing special news is that God the Father and God the Son will make their home with us.

Dear sister, brother! They are coming to rest and relax – to be at home with you! Jesus is not a stranger to simplicity even that of a manger in a stable. When you hear the knock, run up and open the door in love. It is them coming home to rest and relax in the comfort of your love.

Prayer:
Loving Jesus, Your word is life eternal. I shall keep it because I love you. Thank you for choosing to be at home with me. In love I prepare myself as your home. Come home!

Jesus might say…..
My child, your love is precious. I and my Father are coming home to stay. When I knock, please open up and let us in. I shall help you to open up by and by those areas closed to us so far.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா