இயேசு இயக்கத்தைப் பற்றி

“விடுதலையாளரான எம் தலைவர் கிறிஸ்து இயேசுவையும் அவருடைய விடுதலை கருத்துக்களையும் தமிழ்ச் சமூகத்தில் எம் தாய்மொழியாம் செந்தமிழில் பதிவு செய்வது இயேசு இயக்க இணையதளத்தின் மையநோக்கம்”.

இயேசு இயக்கத்தின் நோக்கம்

கடவுளின் ஆளுகை நிறைந்த இறையில்லத்தில் அனைவரைக்கும் இடம் உண்டு, சாதியம், இனவாதம், பெண்ணடிமைத்தனம் போன்ற ஏகாதிபத்திய சிந்தனைகள் படைப்பின் தொடக்கத்திலிருந்த இறையில்லமாகிய இவ்வுலகின் சமநிலையை சீர்குலைத்தது.

இழந்து போன படைப்பின் மேன்மையை மீட்டெடுக்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு கடவுளால் அனுப்பப்பட்டார். முதல் நூற்றாண்டு பாலஸ்தீனத்தில் காணப்பட்ட அனைத்து அடிமைத்தனங்களையும் கிறிஸ்து கடுமையாக எதிர்த்து போராடினார்,

ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (தூய லூக்கா 4: 18, 19).

எனும் நாசரேத்தூர் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இயேசு இயக்கத்தை உருவாக்கி துடிப்புடன் பணிசெய்தார், அதன் விளைவாக கொடுகோன்மையினால் கைதுசெய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார், அவர் சொன்னபடி மூன்றாம் நாள் மாட்சிமையோடு உயிர்த்தெழுந்து இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து வாழ்கிறார்.

விடுதலையாளரான எம் தலைவர் கிறிஸ்து இயேசுவையும் அவருடைய விடுதலை கருத்துக்களையும் தமிழ்ச் சமூகத்தில் எம் தாய்மொழியாம் செந்தமிழில் பதிவு செய்வது இயேசு இயக்க இணையதளத்தின் மையநோக்கம்.

விடுதலை சார்ந்த இறையியல் சிந்தனைகள், கட்டுரைகள், அருளுரைகள், ஓவியம், புகைப்படங்கள், கவிதைகள், பாடல்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்துகிறோம் . உங்கள் படைப்புகளை அனுப்ப எம்மை தொடர்புகொள்ளுங்கள்

எம் தலைவர் விதைத்த இயேசு இயக்கத்தைத் தொடர்ந்து அவருடன் இணைந்து காட்டுவோம்.

விடுதலை சார்ந்த இறையியல் சிந்தனைகள், கட்டுரைகள், அருளுரைகள், ஓவியம், புகைப்படங்கள், கவிதைகள், பாடல்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்துகிறோம். உங்கள் படைப்புகளை அனுப்ப எம்மை தொடர்புகொள்ளுங்கள்

உங்களின் பங்களிப்பு எமக்கு பெறுமதியானது