church, window, stained glass-535155.jpg

தொழுவம் நோக்கி 02
(லூக்கா 2:27)

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என எமது மூதாதையர்கள் கூறுவர். எனினும் இன்றைய நாட்களில் மக்கள் ஆலயம் செல்வதை பெரிதும் முக்கியத்துவப்படுத்துவதில்லை. ஆனால் சங்கீதகாரனாகிய தாவீது ‘கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என சொன்ன போது நான் மகிழ்ச்சியடைந்தேன்’ என கூறுகின்றார்.(சங்கீ 122:1)

மனித வாழ்வில் மகிழ்ச்சியை பெறுவதற்கு நாம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்.
1 சாமுவேல் 1ம் அதிகாரத்தில் அன்னாள் என்ற பெண்மணி தன் கவலைகள் எல்லாவற்றையும் ஆலயத்திற்கு சென்று ஆண்டவரின் பாதத்தில் ஊற்றி விட்டால் அதன்பின் அவர் துக்க முகத்துடன் இருக்கவில்லை. கடவுளின் ஆலயம் மக்களுக்கு அறுதலை கொடுக்கும் இடமாகும்.

ஏசாயா கடவுளின் ஆலயத்திற்கு சென்ற போது தனது உண்மையான நிலையை உணர்ந்துக்கொண்டான். அப்பொழுது தன்னை பரிசுத்தம் பண்ணுமாறு கடவுளை நோக்கி வேண்டினான். ஆலயம் ஓர் மனிதனின் உண்மையான நிலையை உணர்த்தும் இடமாகும் அங்கே கடவுளும் மனிதனும் ஒன்றாக சந்திக்கின்றனர். இதன்மூலம் விடுதலை கிடைக்கின்றது.(லூக்கா 13:10-17)

இறைமக்களே சபை கூடி வருதலை சிலர் விட்டுவிடுவதை போல நீங்களும் விட்டு விடாதிருங்கள் ஏனெனில் ஆலயத்தில் வாசம் செய்யும் கடவுள் சந்தோஷத்தையும் ஆறுதலையையும் விடுதலையையும் எமக்கு தருகிறார்.

மன்றாட்டு
கடவுளே உமது ஆலய பிரகாரங்களில் வாசம் செய்வது மேலானது என்பதை எனக்கு உணர்த்தியருளும். ஆமென்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்