yoga, meditation, vipassana-4849681.jpg

தொழுவம் நோக்கி 03

(லூக்கா 2:25)
இன்றைய உலகில் ஒவ்வொறு தனிமனிதனும் குடும்பமும் ஆறுதலை நோக்கி ஓடுகின்றனர். இதற்காக அவர்கள் பல்வேறு மார்க்கங்களை கையாறுகின்றனர். மேற்கூறப்பட்ட வசனத்தில் சிமியோனும் ஆறுதலை பெறுவதற்காக காத்திருந்தார். அவர் இரவும் பகலும் ஆலயத்தில் ஆறுதலை பெறுவதற்காக அமர்ந்திருந்தார்.


பரிசுத்த பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றுக்கும் ஜெபத்துடன் கூடிய ஸ்த்தோத்திரத்தோடு கடவுளுக்கு தெரியப்படுத்துங்கள் அப்பொழுது எல்லாவற்றுக்கும் மேலான இறை சமாதானம் உங்களை நிறைக்கும் என கூறுகின்றார்.(பிலி 4:6)

இப்பகுதிலியிலே மன ஆறுதலை பெறுவதற்கு ஜெபம் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது சீடர்களை விட்டு பிரிவதற்கு முன்னர் அவர்களை நோக்கி உங்கள் இருதயம் கலங்காது இருப்பதாக கடவுளிடத்திலும் என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள் என கூறினார் (யோவான் 14:1). வாழ்வின் எத்தகை சூழ்நிலைகள் ஏற்பட்ட போதிலும் இயேசுவின் மீது நாம் வைக்கும் விசுவாசம் எல்லா கலக்கங்களையும் அகற்றி எமக்கு ஆறுதலை தருகின்றது.


பரிசுத்த பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் நிருபத்தில் கிறிஸ்து இயேசுவிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலை ஆறுதல் தேவைப்படும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என புத்திமதி கூறுகின்றார் (2 கொரி 1:1-10). இதன் ஒளியில் நாம் பிறருக்கு ஆறுதலாக இருப்பதோடு மற்றவர் பாரத்தை நாம் சுமக்கும் போது ஆறுதலை பிறருக்கு வழங்க முடியும்.


அன்பானவர்களே ஜெப வாழ்வு கடவுள்; மீதான விசுவாசம் ஒருவர் பாரத்தை மற்றவர் சுமத்தல் போன்றவற்றின் ஊடாக எமக்கு தேவையான ஆறுதலை நாம் பெற்றுக்கொள்வோமாக.


மன்றாட்டு

ஆறுதலின் கடவுளே எமக்கு வேண்டிய ஆறுதலை தந்தருளும் ஆமென்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்