virgin-mary, child jesus, statue-3658406.jpg

தொழுவம் நோக்கி 04
(லூக்கா 1:15)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் எலிசபெத் முக்கிய இடத்தை வகிக்கின்றார். இவரிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள் பாராட்டப்பட வேண்டியவைகள் ஆகும்


பரிசுத்தாவியின் பலத்தினால் மரியாள் கர்ப்பவதியானால் இத்தகைய அனுபவத்தினால் அவருடைய கணவன் யோசேப்பும் சமுதாய மக்களும் மரியாளை ஏளனமாக எண்ணியிருந்தனர். எனவே அவர் ஆறுதலை இழந்தவராக எலிசபெத்தின் இல்லத்திற்கு போயிருந்தார் அங்கே எலிசபெத்தும் அத்தகைய அனுபவத்திற்குள் சென்று கொண்டிருந்தாள்.இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலை பகிர்ந்து கொண்டனர் சிறப்பாக முதிர்ந்த தாயாகிய எலிசபெத் இளம் பெண்மணியாகிய மரியாளுக்கு ஆறுதலாக இருந்தார்;. எலிசபெத்தை போன்று நாங்களும் ஒருவருக்கொருவர் ஆறுதலை கொடுப்பவராக மாறும்போது நாம் கடவுளால் கனப்படுத்தப்படுபவர்களாக காணப்படுவோம்.

எலிசபெத் முதிர்ந்த அனுபவம் உள்ள பெண்ணாக இருந்தபோதிலும் மரியாளை கண்டு எரிச்சலோ பொறாமையோ கொள்ளவில்லை மாறாக மரியாளை கண்டவுடன் ஆண்டவரின் தாயார் என புகழ் மொழி கூறி அவளை பாராட்டுகின்றார். தன்னிலும் பார்க்க சிறந்த பண்புகள் உள்ள ஒருவரை பாராட்டுவதை இப்பகுதி எமக்கு காண்பிக்கின்றது.

கடவுளால் அழைக்கப்பட்ட மக்களாகி நாங்கள் ஒருவர் மற்றவர் மீது பொறாமை கொள்ளாமல் பிறருடைய நற்பண்புகளை பாராட்டும் போது கடவுள் எங்களை கனப்படுத்துவார்.
அன்பானவர்களே நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலை வழங்குபவர்களாகவும் பிறரின் நற்பண்புகளை பாராட்டுபவர்களாகவும் செயற்பட அழைக்கப்படுகின்றோம்.

மன்றாட்டு
கடவுளே நான் பிறருக்கு ஆறுதலாகவும் பிறரின் நற்பண்புகளை பாராட்டுபவராகவும் வாழ உதவி செய்யும். ஆமென்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்