திருவருகைக்காலம் – 03

கருப்பொருள்: தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர்.

திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. திருமுழுக்குநர் யோவான் பரப்புரை செய்த மகிழ்ச்சி மிகு மனமாற்றத்தின் அடிப்படையில்; கடவுளை சந்திக்க ஆயத்தமாவது முக்கியம்.

செப்பனியா 3: 14 – 20
மகிழ்ச்சியின் பாடல். தண்டணையின் பின் உருவாகும் புதிய உலகத்தில் வாழ்வு. அச்சம் வேண்டாம், சோர்வு வேண்டாம், இறையன்பு கிடைக்கும், புத்துயிர் கிடைக்கும், கால் ஊனமுற்றோர் காப்பாற்றப்படுவர், ஒதுக்கப்பட்டோர் ஒன்றுசேர்க்கப்படுவர், அவமானமுற்றோருக்கு மீளவாழ்வு, சிதறிக்கப்பட்டோர் நாடு திரும்புவர்.

எசாயா 12:1 – 6
மீள்வாழ்வில் மகிழ்ச்சி. ஆண்டவரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்; நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்; இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர் (1).

பிலிப்பியர்; 4:4 – 7
ஆண்டவரோடு இணைந்திருப்பதால் என்றும் மகிழ்ச்சி. ஆண்டவர் அண்மையில் உள்ளார(5);. கவலை வேண்டாம், நன்றியுடன் மன்றாடுங்கள்(6). அறிவெல்லாம் கடந்த இறை அமைதியை அனுபவிக்கும் சாத்தியம்(7).

லூக்கா 3:7 – 18 மாற்றத்தில் மனமாற்றத்தில் மகிழ்ச்சி.
போலி மாற்றங்களுக்கு கண்டனம் (விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? (7).
மாற்றம் செயற்பாடாக வேண்டும் (8): மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்;
நல்மாற்றம் நடைபெறாவிட்டால் அழிவு (9): ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும.
மனமாற்றத்தின் வாழ்க்கை முறை? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கூட்டம் (10) – இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்(11). வரி தண்டுவோர் (12) – குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் (13).
படைவீரர் (14) – எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்(14) மெசிய எதிர்பார்ப்பு (15):

பணி மைய பதில்
நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்’ என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் (16 – 18). மகிழ்ச்சி தரும் ஒரு மனமாற்றத்தின் ஊடாக கடவுளை சந்தித்தல்

மன்றாட்டு: வருகையின் கடவுளே, மகிழ்ச்சி தரும் ஒரு மனம்மாற்றத்தின் ஊடாக கடவுளை சந்திக்க எங்களை வலுவூட்டும். இயேசு கிறிஸ்துவின் கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

அருட்பணி செல்வன்
அருட்பணி செல்வன்

இறையியலாளர், ஆயர்
இலங்கை.