தீமைகளில் நாட்டம், பொருட்கள் பற்றிய கவலை மற்றும் அன்பற்ற தன்னல வாழ்வு என்பவற்றை நிராகரிப்போர் பேறுபெற்றோர். அவர்கள் நிச்சயம் கடவுளை சந்திப்பர்.

அருட்பணி செல்வன், இலங்கை.

திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்பு வலியுறுத்தப்படுகிறது. கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாகும் இந்தக்காலத்தில் ‘ஆயத்தமாதல்’ என்பதும் முக்கியம். முற்பிதாக்கள், இறைவாக்கினர் வரலாற்றை மீள எண்ணி, நம்பிக்கையுடன் ஆயத்தமாவது முக்கியம்

எரேமியா 33: 14 – 16
அந்நாள்களில் அக்காலத்தில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். (33:15). இஸ்ரயேல் மற்றும் யூதா மக்களுக்கு கொடுக்கப்பட்ட கடவுளின் வாக்குறுதி இறைவாக்கினர் எரேமியாவால் உறுதி செய்யப்பட்டது.

திருப்பாடல்கள் 25:1 – 10
துன்பம் மற்றும் நம்பிக்கையின்மையை விட கடவுளுடைய உடன்படிக்கை மற்றும் ஒழுங்குமுறைகளில் ஆழமான நம்பிக்கை இப்பாடலில் வலியுறுத்தப்படுகிறது.

1 தெசலோனிக்கர் 3:9 – 13
இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும் பொழுது, நம் தந்தையாம் கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள்
உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக! தூய்மையாக வாழ்ந்து இயேசுவின் வருகையை எதிர்கொள்ள அன்பிய வாழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!

லூக்கா 21:25 – 36
மானிடமகனை எதிர்கொள்ள விழிப்பாயிருத்தல் முக்கியம்(36). அவர்கள் தீமைகளில் நாட்டமும் (குடிவெறி, களியாட்டம்), உலகப்பொருட்கள் பற்றிய கவலைகளினால் மந்தமும ; அடையாதபடி வாழ எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
எச்சரிக்கையாயிருங்கள் விழிப்பாயிருங்கள்
தீமைகளில் நாட்டம், பொருட்கள் பற்றிய கவலை மற்றும் அன்பற்ற தன்னல வாழ்வு என்பவற்றை நிராகரிப்போம்.
இறையாட்சிக்கான வாழ்வை வாழ்ந்து கடவுளை சந்திப்போம்.

மன்றாட்டு:
கடவுளே, முற்பிதாக்கள் மற்றும் இறைவாக்கினர்களால் வாக்களிக்கப்பட்ட இறையாட்சி, மீது எங்கள் ஏக்கத்தை அதிகமாக்கும். கிறிஸ்துவின் வருகையின் விடியலானது
கிறிஸ்துவின் பிரசன்னத்தில் மகிழ்ச்சியடைவதையும், உண்மையின் ஒளியை வரவேற்பதையும், நம்பிக்கையிலும், விசுவாசத்திலும், அன்பிலும் வளர எங்களுக்கு வலுவைத் தந்தருளும். எங்களில் ஒருவரான (மானிடமகன்) இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி வழி மன்றாடுகின்றோம்.
ஆமென்.

அருட்பணி செல்வன்,
அருட்பணி செல்வன்,

இறையியலாளர், இலங்கை.