26 தை 2022

எல்லோருக்குமான சமத்துவமும் நீதியும்

மத்தேயு 23:23-28

• நாம் வாழும் உலகில் நீதி, சமத்துவம் போன்றவைகள் எல்லா மனிதர்களும் விரும்பும்
ஒன்றாகும். இதற்காக உலகில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்க்கின்றோம்.
இந்தியாவின் விடுதலைக்கான சமத்துவத்திற்காக நீதிக்காக ஆண்களும் பெண்களும் உழைத்தனர்.

• பழைய ஏற்பாட்டு பகுதியில் ஆமோஸ் வழிப்பாட்டின் நீதியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றார். அன்றைய இஸ்ராயேலர் தங்கள் சமூக வாழ்வில் ஏழைகளை ஒடுக்கினர்
(ஆமோஸ் 2:16). ஆனால், வழிபாட்டில் இருக்க வேண்டிய பலி, பாடல், காணிக்கை, இசைக்கருவிகள் போன்றவற்றிற்கு குறைவு இருக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே
ஆமோஸ் நீதியுள்ள கடவுளை வழிபடுவோர் நீதியுடன் அவரை வழிபடவேண்டும் எனக் கூறுகின்றார். திருப்பாடலிலும் கடவுளின் நீதியைப் பற்றி நாம் பார்க்கின்றோம்.

• திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 10:34-43 வரையுள்ள பகுதியில் தூய ஆவியர் புற இனத்தாராகிய கொர்னேலியுவுக்கு அவரின் வீட்டில் கூடியிருந்த அனைவருக்கும்
அருளப்படுவதை நாம் பார்க்கின்றோம். திருத்தூதர்பணிகள் 2ம் அதிகாரத்தில் தூய ஆவியானவர் யூதர்கள் மீது அருளப்படுகின்றார். திருத்தூதர்பணியில் 10ம் அதிகாரத்தில் புற இனத்தவர்கள் மீது அருளப்படுவது அவர்களுக்கான பெந்கேகோஸ்தே விழா என நாம் அழைக்கலாம். மேலும், இச்
செயற்பாட்டினூடாக கடவுள் பட்சபாதமற்ற நீதியுள்ளவர் என்ற எண்ணக்கரு வலியுறுத்தப்படுகின்றது. இதனாலேயே, அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் சூரியனை உதிக்கப்பண்ணி மழையைப் பெய்யப்பண்ணுகிறார் (மத்தேயு 5:45-46).

• மத்தேயு தனது நற்செய்தியில் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். உதாரணமாக, மத்தேயு 5, 6, 7, 13, 18, 23 ஆகிய அதிகாரங்கள் இதனை எமக்குக் காண்பிக்கின்றன. இங்கு 23ம் அதிகாரத்தில் கடவுளின் திருத்தூதுப்பணியை முன்னெடுத்து செல்பவர்கள் நீதியை மையமாகக் கொண்டு செயற்படவேண்டும் என இயேசு போதிக்கின்றார். அவ்வாறு செயற்படும்போது நீதியுள்ள கடவுளின் பிரதிநிதியாக திருச்சபையும் திருப்பணியாளர்களும் செயற்பட முடியும்.

• திருச்சபை என்ற அமைப்பு பிறரின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற அமைப்பாக பொதுவாக அறியப்பட்டபோதிலும் சில சந்தர்ப்பங்களில் திருச்சபைகளுக்கு உள்ளே பல

ஒடுக்குமுறைகள் காணப்படுகின்றன. அத்துடன், திருச்சபை சமூகத்தில் நீதிப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்வதை தவிர்த்து, பரலோகத்தில் ஆத்துமாக்களை பதிவு செய்யும் திணைக்களமாகவே தன்னைக் காண்பிக்கின்றது. மேலும், திருச்சபை நீதியை விதைக்கவும் நீதியினமேல் பசிதாகம் உள்ளவர்களாய் இருக்கவும் அழைக்கப்படுகின்றன.

எழுத்து: அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

கிறிஸ்தவர்களுக்கு தேசத்தந்தை அம்பேத்கரின் அறிவுரை

“உலகில் உள்ள மதங்களிலும் ஆளுமைகளிலும் இருந்து, புத்தர், கிறிஸ்து ஆகிய இருவரையும் மட்டுமே நான் மதமாற்றத்திற்கு தெரிவுகளாக கருதுகிறேன். எனக்கும் என்னைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரு மதம் தேவை, தந்தை ஒரு குழந்தையை நடத்துவது போல நடந்து கொள்ள மதம் தேவை.

“தீண்டத்தகாதவரை கிறிஸ்தவர்களாக மாற்றும் போது தங்கள் கடமையை செய்ததாக மிஷனரிகள் நினைக்கிறார்கள். அவர்கள் அரசியல் உரிமைகளை கவனிப்பதில்லை. இது கிறிஸ்தவர்களின் பெரிய தவறு என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் இதுவரை அரசியலுக்கு வரவில்லை. அரசியல் ஆதரவின்றி வாழ்வது யாருக்கும் மிகக் கடினம். தீண்டத்தகாதவர்கள், படிக்காதவர்களாக இருந்தாலும், அரசியல் இயக்கத்தில் இருக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு சட்டமன்றத்தில் 15 இடங்கள் உள்ளன.மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுகிறார்கள், அரசு விடுதிகள் உள்ளன, ஆனால் கல்வி உதவித்தொகை பெறும் தீண்டத்தகாத மாணவன் கிறிஸ்தவ மதம் மாறினால், அவனது கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும்.

“உங்கள் சமுதாயம் படித்தது. நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ளனர். படிக்காத தீண்டத்தகாதவர்கள் போல் சமூக அநீதிக்கு எதிராக கிறிஸ்தவர்கள் கிளர்ந்தெழுந்ததில்லை. கிறிஸ்தவ பெண் செவிலியராக பணியாற்றினாலோ, அல்லது எந்த ஒரு பையனும் ஆசிரியராகிவிட்டாலோ, அவர்கள் தங்கள் சொந்த விவகாரங்களில் மட்டும் ஈடுபடுகிறார்கள், அவர்கள் பொது விவகாரங்களில் ஈடுபடுவதில்லை, எழுத்தர்கள், அதிகாரிகள் கூட தங்கள் வேலையில் மும்முரமாக இருப்பதால், அவர் சமூக நீதியைப் புறக்கணிக்கிறார்கள், உங்கள் சமூகம் எவ்வளவு நன்றாக படித்துள்ளது , எத்தனை மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள் உங்களில் உள்ளனர்? நான் உங்களுக்கு சொல்கிறேன், நீங்கள் அரசியலை புறக்கணிப்பதால், உங்கள் உரிமைகளுக்காக போராடுவதைப் பற்றி பேச யாரும் பேசப்போவது இல்லை.”

ஷோலாபூர் இந்திய கிறிஸ்தவர்களுக்கு ஆற்றிய உரை. 5.2.1938 ‘ஜனதா’வில் வெளியானது, ‘ஞானோதயா’வில் இருந்து மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

[கஞ்சாரே தொகுதி. III. ப.142 ff.]

படத்திற்கு நன்றி சிட்டேஷ் கவுதம்

சங்கீதம் 72: 4
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக; பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக! 


வெளிப்படுத்தல் 7: 9
அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைக் பிடித்திருந்தார்கள். 
 

இயேசுவின் 8 முன்னுரிமைகள் –

சமூக நீதியின் நற்செய்தியின் இதயம்

1.) பேராசையின் ஆவியை அல்ல, கடவுளின் ஆவியைக் கொண்டிருப்பது.

2.) ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்.

3.) இதயம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவது.

4.) சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையை செய்தியை அறிவிப்பது.

5.) பார்வையற்றவர்களுக்கு பார்வையை மீட்டு கொடுத்தல்.

6.) காயப்பட்டவர்களை குணமாக்குவது.

7.) கடவுளின் அருள்தரும் ஆண்டினை முழங்குவது (ஜூபிலி ஆண்டு, சிறைபிடிக்கப்பட்டவர் விடுவிக்கப்பட்ட ஆண்டு, அனைத்து கடன்களும் மன்னிக்கப்பட்ட ஆண்டு)

8.) இன்று ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த இந்த திருமறையின் செயல்களை நிறைவேற்றுவது.
ஆக்கம். ஆர்தர் எல். மேக்கி, ஜூனியர்