25 மார்ச் 2022


லூக்கா 1:26-38

கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாள் முக்கிய இடம்பெறுகின்றாளர். இவர் கலிலேய நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி ஆவார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் பெறும் உதவி புரிந்திருந்தார் (ஏசாயா 7:14)ன் படி இங்கு பயன்படுத்தப்படும் எபிரேய மொழி அல்மெத்துல்லா என அழைக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு இளம்பெண் கருவுற்று இருப்பார் என்பதாகும். இவ் அழைப்பு முதலாம் ஏசாயா இறைவாக்கினரால் கூறப்படுகின்றது.

• கலாத்தியர் 4:4-7 வரையுள்ள பகுதியிலும் பவுல் கன்னிப் பிறப்பினை இங்கு வலியுறுத்துகின்றார். காலம் நிறைவேறியது என்பது யூத சமயம், கிரேக்க கலாசாரம், உரோம அரசியல் போன்றவற்றின் நிறைவேறுதலே ஆகும்.

• நற்செய்தி வாசகத்தில் லூக்கா வழமை போன்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். அத்துடன், இயேசுவின் பிறப்பில் மரியளையே மையமாக கொண்டுள்ளார். காபிரியேல் தூதரின் அழைப்பு ஆச்சரியமுடையதாகவும் அச்சமுடையதாகவும் ஆசீர்வாதமுள்ளதாகவும் காணப்படுகின்றது. இங்கு கடவுள் மரியாளை குழப்புவதை நாம் பார்க்கின்றோம். பாரம்பரிய ரீதியில் கடவுளை புரிந்துக் கொள்வதற்கு எதிரான புதியதோர் புரிந்து கொள்ளுதல் ஆகும்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
இலங்கை