தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர்

தென்னிந்திய திருச்சபையின் (JDCSI) யாழ்ப்பாண ஆதீனத்தின் புதிய பேராயராக பேரருட்பணி. அறிவர். வே.பத்மதயாளன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் தலைமை மையத்தில் பேராயரின் திருநிலப்படுத்தல் வழிபாடு நடைபெற்றது.

பேராயராக தெரிவுசெய்யப்படட பேரருட்பணி. அறிவர். வே.பத்மதயாளன் 1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பிறந்தார், 1997 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி உதவிக்குருவாகவும் 14 மே 2000 இல் முழுகுருவானவராகவும் நியமிக்கப்பட்டார். கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் டிப்ளமோ படிப்பும், மதுரை வேலம்மாள் நிறுவனத்தில் உளவியல் டிப்ளமோ படிப்பும், செராம்பூர் பல்கலைக்கழகத்தில் தேவியியல் இளங்கலை (B.D) பட்டம் பெற்றார். மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் மதம் மற்றும் தத்துவத்துறையில் முதுகலைப்பட்டமும், ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் இறையியல் முதுகலைப்பட்டமும், தொடர்ச்சியாக இறையியல் துறையில் அறிவர் பட்டமும் பெற்றுள்ளார். 27ஆண்டு பலதரப்பட்ட மக்களுக்கு இறைஊழியம் செய்த அனுபவம் கொண்ட இவர், தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்தின் கல்மடுக்குளம், ஜெயபுரம், ஆனைவேலுந்தன், வன்னேரிக்குளம், நுவரெலியா, பண்டதெருப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிற்றாலயம் போன்ற பல திருச்சபையில் குருத்துவப்பணி செய்துள்ளார். அனைத்து மக்களுடன் அன்புடன் பழகும் பேராயர் பத்மதயாளன் திருச்சபைகளைப் பலப்படுத்துவதிலும், புதிய தேவாலயங்கள் மற்றும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதில் அவர் தனது ஊழிய கவனத்தை செலுத்திவந்துள்ளார்.

பேராயரின் ஊழிப் பாதை
அத்துடன் பேராயர் வே.பத்மதயாளன் யாழ்ப்பாணம் ஆதீனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கொழும்பு பிராந்திய குருவாகவும், கிளிநொச்சி மேற்கு திருச்சபைத் தலைவராகவும் பண்டதரிப்பு YMCAவின் தலைவராகவும், கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் செயலாளராகவும் பணியாற்றினார். வன்னியில் உள்ள இளம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் தனது கற்பித்தல் திறமைகளை வழங்கியுள்ளார்; கிறிஸ்தவ இறையியல் கருத்தரங்குகள், தேசிய கல்வி நிறுவனம், மஹரகம. யாழ் மறைமாவட்டத்தில் திருப்பணியாளர் குழு உறுப்பினர், இளைஞர் பணி, திருச்சபை விடுதியில் உயர் பொறுப்புகள், மறைமாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், நிதி மற்றும் சொத்துக் குழு, கிறிஸ்தவக் கல்வி, இறையியல் கரிசணைக்குழு , நீதி மற்றும் அமைதிக்கான குழு, யாழ் ஆதீன செயற்குழு உறுப்பினராகவும், போன்ற துறைகளிலும் தனது தாலந்துக்களை திருச்சபை வளர்ச்சிக்காக பயன்படுத்தியவர்


பேராயர் குடும்பம்

பேராயர் வே.பத்மதயாளனின் மனைவி திருமதி மேரி விஜயநந்தினி பத்மதயாளன் தனது இளங்கலை,, கல்வியில் டிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர், ஆசிரியையாகப் பணியாற்றுகிறார், ஊழியத்தில் பெண்கள் கூட்டுறவு குழு நடத்துவதிலும், குழந்தைகள் மீது கரிசனையும் கொண்டவர், தமிழ் மீதும் தமிழிசை மீதும் தீராத பற்றுகொண்டவர். பேராயர் தம்பதிக்கு செல்வி பெரித் சௌமியா பத்மதயாளன் எனும் மகள் உள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க திருநிலைப்படுத்தல் வழிபாடு

பேராயர் திருநிலைப்படுத்தல் வழிபாடு தலைமை பேராயர் ஏ.தர்மராஜ் ரசாலம் தலைமையில், இணை தலைமை பேராயர் ரூபன் மார்க் முன்னிலையில் தென்னிந்திய திருச்சபையின் பொது செயலர் சி.பெர்னாண்டாஸ் இரத்தின ராஜா வழிநடத்தலில், மாண்புமிகு பொருளாளர், பேராசிரியர் வி. விமல் சுகுமார்; முன்னிலையில் நடைபெற்றது.

இவ்வழிபாட்டை யாழ் அதீனத்தின் தலைமை பேராயரின் ஆணையாளர், பேராயர். சந்திரசேகரன் முன்னின்று நடத்தினர், இவ்வழிபாடில் பேராயர்கள் உம்மன் ஜார்ஜ், கொல்லம்-கொட்டாரக்கரா ஆதீனம், பேராயர். ஜார்ஜ் கார்னிலியஸ், கிருஷ்ணா கோதாவரி ஆதீனம், பேராயர். பத்மா ராவ், டோர்னக்கல் ஆதீனம், பேராயர். டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், மதுரை முகவை ஆதீனம், பேராயர். மார்ட்டின் சி.போர்காய், கர்நாடக வடக்கு ஆதீனம், பேராயர். ஹேமச்சந்திரன், பிஷப் கர்நாடகா தெற்கு ஆதீனம் என தமிழகம். கேரளா, தெலுங்கானா, ஆந்திரா , கர்நாடகம் ஆகிய இந்திய மாநிலத்தை சார்ந்த ஒன்பது பேராயர்கள் பங்குபெற்று யாழ் அதீனத்தின் 5ஆம் பேராயரை திருநிலைப்படுத்தி தென்னிந்திய திருச்சபையின் குறிக்கோளான சகோதரத்துவத்தை வலியுறுத்தி முன்மாதிரியாக காட்டினார்.

இந்நேரத்தில் வரலாற்றில் தடம் பதித்த எமது பேராயர் அறிவர் வே.பத்மதயாளன் அவர்களை இயேசு இயக்கம் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.

One thought on “யாழ் ஆதீனத்திற்க்கு புதிய பேராயர்”
  1. யாழ் திருச்சபையின் தூணே.
    இலங்கை வாழ் தமிழரின் தேனே
    தமிழரின் உறவில் வந்த மானே
    அமிழ்தினும் இனிய குருவே
    ஆண்டவரின் ஆசியிலே பேராயரானீரே
    நித்தம் நிமலன் பாதம் பணிந்தே
    சித்தம் செய்வீர் இறைபணியை
    நித்தமும் வேண்டி நிற்போம்
    தங்களின் திருத்தொண்டுக்கே.

    வாழ்த்துக்கள்

    அன்பு சகோதரன் &சகோதரி
    முனைவர் ஞா செல்வக்குமார்.
    ரா வசந்தி
    ஆண்ட்ரூ& சௌமி
    பிராங்கிளின்
    94430 18282
    திருச்சி மறை மாவட்டம்
    தமிழ்நாடு
    இந்தியா

Comments are closed.