18 செப்டெம்பர் 2022

Caring and Accepting the Elderly

லூக்கா 2:25-35

•            நாம் வாழும் சூழலில் முதியவர்கள் செல்லாக் காசுகளாக கருதப்படுகின்றனர். எனவேதான், எமது தேசத்தில் முதியோர் இல்லங்களும், அநாதை இல்லங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. இவற்றிற்கு எதிராக முதியவர்களை பராமரித்து அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு திருமறை எம்மை அழைக்கின்றது.

•            முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 46:28-34, 47:1-10 இப்பகுதியில் யாக்கோபும் அவனது பிள்ளைகளும் யோசேப்பினிடத்திற்கு செல்கின்றனர். அங்கே யோசேப்பு யாக்கோபுவையும் அவரது சகோதரர்களையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக யாக்கோபுவுக்கு அவரது முதிர் வயதில் பராமரிப்பை வழங்குகின்றனர்.

•            திருப்பாடல் அல்லது சங்கீதம் 21ல் அரசனின் அரியணை ஏறும் நிகழ்வைப் பற்றி நாம் பார்க்கின்றோம். இங்கு, இறைவன் எல்லா மக்கள் மீதும் தமது பராமரிப்பை வழங்குபவராக ஆசிரியர் காண்பிக்கின்றார்.

•            இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 1 தீமோத்தேயு 5:1-10 இப்பகுதியில் பவுல் தீமோத்தேயு என்ற தனது சீடனுக்கு முதியவர்களை பராமரிக்குமாறு புத்தி கூறுகின்றார். மேலும், அவருடைய பாட்டியிடமிருந்தே விசுவாசம் அவனுக்குள் ஊடுகடத்தப்பட்டது எனவும் கூறுகின்றார்.

•            நற்செய்தி பகுதியில் (லூக்கா 2:25-33) இப்பகுதியில் ஆசிரியர் முதியவராகிய சிமியோன், அன்னாள் போன்றவர்கள் ஆலயத்திலேயே தங்கியிருந்து உபவாசத்திலும் செபத்திலும் தம்மை ஈடுபடுத்தினர். இம்மாதிரி ஓர் சிறந்த மாதிரியாகும். இளைஞர்களாகிய நாங்கள் முதியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பாடமாகும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து முதியவர்களை தள்ளிவிடாது அவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்தும் பண்பு பாராட்டத்தக்கதொன்றாகும். குறிப்பாக, சாலமோனின் மகன் முதியோர்களின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு இளைஞர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டதன் விளைவாகவே அரசு இரண்டாக பிளவடைந்தமையும் நாம் மறக்கக்கூடாது.