Christ the Pattern for Life

6 பெப்ரவரி 2022

February 6, 2022, Sunday
5th Sunday after Epiphany
லூக்கா 10:25-37

Luke 10: 25-37

•             நாம் வாழும் இவ்வுலகில் வாழ்வுக்காக மக்கள் ஏங்குகின்றனர். இன்று வாழ்வு பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் போன்ற காரணங்களால் சவாலிடப்படுகின்றன. மேலும், தொற்று நோய்களின் பரவலும் வாழ்வை இன்று அச்சுறுத்துகின்றன. இதன்மட்டில் கடவுளே வாழ்வின் ஊற்று என்பதை திருப்பாடல் காண்பிக்கின்றது.

•             முதலாம் உடன்படிக்கையின்படி யாத்திராகமம் அல்லது விடுதலைப்பயணம் 20:1-17ன் படி இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பத்து கட்டளையை நாம் இன்று பார்க்கின்றோம். இதனை உபாகமம் அல்லது இணைச்சட்டம் 5ம் அதிகாரத்திலும் பார்க்கின்றோம். ஆண்டவர் இயேசு இதனை சுருக்கமாக மாற்கு 12:28-32ல் கூறி நிற்கின்றார். இக்கட்டளைகள் அனைத்தும் அன்பை மையமாகக் கொண்டு செயற்படுமாறு எம்மை அழைக்கின்றது. அன்பே வாழ்வுக்கான ஆதாரமாகும். இதுவே, ஆண்டவர் இயேசு கொடுத்த புதிய கட்டளையமாகும். உண்மையில் நாம் இறைவனில் அன்புக் கூறும்போது அவ்வன்பு மனிதரிலும் பகிர்ந்துக் கொள்ளப்படும். அவ்வாறு பகிர்ந்துக் கொள்ளப்படும் போது, நாம் பிறரை கொலை செய்யவோ, பிறருக்கு விரோதமாக பொய்களைக் கூறவோ, விபசாரத்தில் ஈடுபடவோ பழிவாங்கவோ முயற்சிக்கமாட்டோம்.

•             இரண்டாம் உடன்படிக்கையின்படி எபிரேயர் 3:1-14ல் ஆசிரியர் மோசே மற்றும் இயேசு எவ்வாறு கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதைக் காட்டுகின்றார். வாழ்வின் ஆதாரமாக ஒருவருக்கொருவர் உண்மையாக இருத்தல் அவசியமாகின்றது. உண்மைத் தன்மை வாழ்வினை வளமூட்டும்.

•             நற்செய்தி பகுதியில் ஆண்டவர் இயேசு சமாரியரிடத்தில் காணப்படும் நற்பண்பை எடுத்துக் காண்பிக்கின்றார். இது லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படும் மாதிரிக் கதையாகும். உதாரணமாக, சமாரியர்கள் எனப்படுவோர் இஸ்ராயேலர்களுக்கும் அசீரியர்களுக்கும் பிறந்தவர்கள் ஆவார். இதனால், இவர்களை யூதர்கள் வெறுத்தனர். இதன் காரணமாக சமாரியர்கள் தமக்கென ஓர் ஆலயத்தை சீகேம் என்ற இடத்தில் அமைத்திருந்தனர். இதனை யோவான் 4ம் அதிகாரத்தில் நாம் காணலாம். இவ்வாறு, ஒதுக்கப்பட்ட சமாரியனே வீதியில் குட்டுயிராக விழுந்து கிடந்த யூதனுக்கு உதவி புரிகின்றான். இங்கே சமாரியன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனுக்கு உதவி செய்கின்றான். அதாவது, சமாரியன் கடவுளின் சாயலை பாதுகாக்க முற்படுகின்றார் (தொடக்கநூல் / ஆதியாகமம் 1:25 -27). மேலும், அவன் செய்யும்பணி முதல் உடன்படிக்கையில் எல்லோரையும் அன்பு செய்யுங்கள் என்ற பகுதியாகும் (லேவியராகமம் 19:18). மேலும், இவனின் திருப்பணி தொடர்ந்து செல்லும் திருப்பணி ஆகும். அத்துடன் இப்பகுதியில் மீட்பு நீதிச்சட்டத்தை நிறைவேற்றுதலின் ஊடாக உருவாகின்றது. மறுகரையில், லூக்கா 10:38-42ல் வார்த்தைகளை நிறைவேற்றுதலினூடாக ஏற்படுகின்றது. இவ் இரண்டுமே வாழ்வுக்கான ஆதாரங்களாகும்.

•             அன்னைத் தெரேசா கூறுவது போல நாம் எளிமையாக வாழும்போது, அநேகரை வாழவைக்கலாம். மேலும், எங்கெல்லாம் பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமூக நிறுவனங்கள் காணப்படுகின்றதோ அக்கட்டடங்களில் அத்திவாரங்களின் அடியில் ஒரு தியாகி உறங்கிக் கொண்டிருக்கின்றான். அதாவது, ஒரு தியாகி தனது வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்ததினால் பிறர் வாழுகின்றனர். எனவேதான்,

எமது பாடலில் பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும். நான் சாக வேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனப் பாடுகின்றோம். இவைகள் எல்லாமே கிறிஸ்துவின் வாழ்வுக்கான அடித்தளங்கள் ஆகும்.

Painting by Revd Jebasingh Samuvel

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை

One thought on “கிறிஸ்துவே வாழ்வில் ஆதாரம்”

Comments are closed.