முழக்கம் 05

கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !
அன்பின் அச்சில் சுழலுவதை கிறித்தவம்.
“யாவே எம்முடன் வாழும் இறையவர்:
மனிதர் அனைவரும் உடன் பிறப்புகள்”
இதுவே கிறித்தவத்தின் உயிர்மூச்சு.
மனுக்குலம் முழுவதையும் கிறித்தவம்
ஒரே குடும்பமாய் பார்க்கிறது.
கிறித்தவ ஆன்மிக நெறியும் தனிமனித நெறியன்று
அது ஒரு சுமூக சமூக நெறியாகும்.
அன்புக் குழுமமே சகோதர உறவே அதன் அடிப்படை.
ஒரே கடவுளின் பிள்ளைகள்;
ஒரே திருமுழுக்கின் வாரிசுகள்;

ஒரே ஆவியின் உறவுகள்;
ஒரே திரு அவையின் அங்கங்கள்;
ஒரே திருப்பந்தியில் அமர்ந்திடுவோர்-
என்ற கிறித்தவத்தின் வாழ்வு நெறி
புத்துலகின் முன் வடிவம்
மாந்த ஓர்மையின் முழுவடிவம்.

இதிலிருந்து முற்றிலும் முரண்பட்டது சாதி.
அது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மானுட மறுப்பு.
சாதி குலம் கோத்திரம்- என
மாந்தரை பிளவுபடுத்தும் வெறுப்பு.

மாந்த நேயத்தைக் கருவறுக்கும் பகைக் கறுக்கு.
சாதியின் கொடுக்கு தீண்டாமை.
அது சக மனிதர்களின் மனிதத்தை மறுக்கும்
மன்னிக்க முடியாத வெங்கொடுமை !

சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்பது திருச்சபையின் கோட்பாடு.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை 1986

#திருச்சபையில்சாதியைஒழிப்போம்

நன்றி: சாதி மறுப்பு நூல்

சாதிய மறுப்பு கிறிஸ்தவத்தின் நிபந்தனை
என்பதை உலகறிய செய்வோம் !!

சாதியம் கிறிஸ்துவுக்கு எதிரான கோட்பாடு
என்பதை உரக்க சொல்லுவோம் !!