டிசம்பர் 3, அகில உலக மாற்றுவலுவுடையோர் தினம்.

நாம் வாழும் உலகில் அனைவருமே உரிமைக்காக போராடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் போர்காலத்திற்கு பின்னரான சூழ்நிலையில் மக்கள் தமது உறவுகளை தேடி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர் மறுகரையில் மலையக மக்கள் நாளாந்த ஊதியமாக ஆயிரம் ரூபாவை பெறவேண்டும் என உரிமைபோராட்டம் நடத்துகின்றனர். இத்தகைய பின்னனியில் அங்கவீனத் தன்மையுடைய மக்களின் உரிமை போராட்டத்தை ஆண்டவர் சிலுவைக்கு முன்னும்
சிலுவையிலும், சிலுவைக்கு பின்னரான உயிர்ப்பு அனுபவத்திலும் அங்கீகரித்துள்ளார் என்ற உண்மையை
இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

அங்கவீனர்கள் யார் ?

நாம் வாழும் உலகில் 3வகையான சொற்பதங்கள் இம்மக்களை குறிப்பிடுவதற்குபயனபடுத்தபடுகின்றன.
முதலாவதாக அங்கவீனர்கள் அதாவது விழிப்புலன்,

செவிப்புலன் குறைபாடு உடையோர்
பேச்சுத்தன்மை குறைபாடுடையோர், நடக்கமுடியாத நிலையில் உள்ளோர் , முளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை இத்தகைய பகுதிக்குள் நாம் அடக்கலாம். அதாவது இவர்களால் ஒன்றும் சொய்யமுடியாது என்பதை பிறர் அறிக்கையிடுவர்.

இரண்டாவதாக மாற்று இயல்பு உள்ளோர் அல்லது பிறர் ஆற்றல் உள்ளோர் இவர்களைபொறுத்தவரையில்
இவர்களிடம் பிறஆற்றல் இருப்பதால் அங்கவீன மக்களுக்கு இத்தகைய பெயரினை வழங்குவர். ஆனால் அங்கவீனர்கள் இத்தகையபதத்தில் திருப்திகொள்வதில்லை.

மூன்றாவதாக அங்கவீன தன்மையுள்ள மக்கள் இதன்படி இவர்களின் அங்கவீனம் முதன்மைபடுத்துவதில்லை மாறாக மக்களே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. இத்தகைய சொற்பதமே இன்று வரலாற்றில் பெறுமளவு பயன்படுத்தப்படுகின்றது. இன்றைய உலகில் 4251 வகையான அங்கவீனத்தன்மைகள் உலகில் காணப்படுகின்றன. இத்தகைய மக்களின் உரிமைக்காக இயேசு செயற்பட்டார் என்பதனையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மற்றவர்களின் மறுவாழ்வுக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமே சிலுவையாகும்.

ஒருவன் என்னை பின்பற்றி வரவிரும்பினால் தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை சுமந்து கொண்டு என்னை பின்பற்றி வரக்கடவன் என இயேசு கூறுகின்றார். இதன் படி
இயேசுவை பின்பற்றுவோர் சுயநலத்தை வெறுத்து பிறர்நலத்திற்காகஅனுதினம் செயற்படவேண்டும்
என்கிற உண்மையே இயேசுவலியுறுத்துகிறார். இச்சிலுவை என்பது ஒருநாள் சார்ந்த அனுபவம் அல்ல மாறாக பல நாள் நிகழ்வுகளில் ஒரு தொகுப்பாகும். இதனையே ஆண்டவர் இயேசுவின் முழு வாழ்வும், பணியும் சித்தரிக்கின்றது. சிறப்பாக அங்கவீனத்தன்மையுள்ள மக்களின் உரிமைக்காக அவரின் செயற்பாட்டை நாம் விபரமாக காணலாம்.

சமூகசிந்தனைகளும் அங்கவீனத்தன்மையுள்ள மக்களும்

இயேசு வாழ்ந்த காலத்தில் அங்கவீனத்தன்மையுள்ள நிலை முற்பிறப்பில் ஏற்பட்ட ஒர் பாவத்தின் விளைவு என மக்கள் கருதினர். இச்சிந்தனைக்கு எதிராக யோவான் 9:1-9 வரையுள்ள பகுதியில் பிறவியிலே பார்வை அற்றநிலை அம்மனிதனின் தனிப்பட்ட பாவத்தினாலா? அல்லது பெற்றோரின் பாவத்தினாலா? ஏறபட்டது என இயேசுவிடம் மக்கள் வினாவினர் அதற்கு பதிலுரையாக இயேசு தனிப்பட்ட பாவமும் அல்ல, பெற்றோர்களின் பாவமும் அல்ல மாறாக சமூகபாவத்தின்
விளைவு என சுட்டிக்காட்டுகின்றார். அதாவது இங்கு இயேசு பார்வையற்ற மனிதனுக்கு சுகத்தை வழங்குவதிலும் பார்க்க அன்றைய காலத்தில் சமூதாயத்தில் நிலவிய பிழையான சிந்தனைகளையே குணப்படுத்துவதையே நாம் பார்க்கலாம். இத்தகைய குணப்படுத்தல் இன்றும் அவசியமாகின்றது. இயேசு அன்று சமூக குணப்படுத்தலை மேற்கொண்டதன் விளைவாக பார்வை இழந்த இம் மனிதன் சமூகத்தில் அங்கிகாரம் பெற்றார். இம்மனிதனின் நன்மைக்காக இயேசு செயற்பட்டதன் விளைவாக அவருக்காக சிலுவைகாத்திருந்தது.

எருசலேமை நோக்கிய பயணத்தில் பார்வை அற்ற பர்திமேயு

சிலுவையை நோக்கிய இயேசுவின் பயணத்தில் எரிகோ என்னும் நகரத்தில் ஆண்டவர் இயேசுபார்வைஅற்ற ஒருமனிதனை சந்திக்கின்றார். மாற்கு 10:46-52 இம்மனிதன் இயேசுவை நோக்கி தாவீதின் குமாரனே என கருதுகின்றார். இயேசுவுக்கு அனேக இயற்கை சார்ந்த மனிதஉருவம் சார்ந்த பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இங்கு இம்மனிதன் இயேசுவை தாவீதின் குமாரனே என கதறுவதற்கு காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ள 2 சாமூவேல் 5ம் அதிகாரத்திற்கு செல்லவேண்டும் எபூசியர் என்ற மக்களோடு யுத்தம் புரிகின்றார் தாவீது அப்போழுது எபூசிய மக்கள் தாவீதைநோக்கி எங்கள்தேசத்தில் உள்ள அங்கவீனர்கள் உன்னை ஒருகை பார்க்கும் அளவிற்கு நீ ஒரு பலவீனமான மகன் என எள்ளி நகையாடினர். எனினும் போரில் வெற்றி பெற்ற தாவீது இவ்வார்தைகளை மனதில் வைத்துக்கொண்டு கோவில் வாசலில் உற்காந்திருந்த அங்கவீனத்தன்மையுள்ள மக்களை விரட்டியடித்தார். இதனால் வேதனையடைந்த மக்கள் தாவீதினால் இவ்வாலயத்தில் இருந்து துரத்தப்பட்டுள்ளோம் எனினும் தாவீதின் பரம்பரையில் இருந்து ஒருவர் வருவார் அவர் நாம் இழந்துபோன உரிமையை மறுடியும் உமக்களித்து ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதியை தருவார் என நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கையின் விளைவை பர்திமேயுவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. இங்கு ஆண்டவர் பர்திமேயுவை குணப்படுத்தியதை விட அவர் இழந்துபோன அங்கீகாரத்தை அவருக்கு அழித்ததே மிகப்பெரிய புதுமையாகும். எனவே இன்று அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் எதிர்பார்ப்பதேல்லாம் குணப்படுத்துதல்
அல்ல மாறாக சமூதாய அங்கிகாரமே ஆகும்.

அங்கவீனமான இயேசு
ஆண்டவர் இயேசுஉயிர்தெழுந்த பின்னர் தமது சீடனாகிய

தோமாவை நோக்கி எனது காயங்களுக்குள்
உனது விரலைவிட்டுப் பார் என விசுவாசஅழைப்பபை மேற்கொண்டார். உயிர்த்தெழுந்த இயேசு உடலில்காயங்களுடனேயே

குணமாக்கப்பட விரும்பாத நிலையில் தனது காயங்களுடன் உலாவினார். அனேகரை குணப்படுத்திய ஆண்டவர் இன்று குணமாக்கப்படாதகாயங்களுடன் அல்லது அங்கவீனதன்மையுடன் இன்றும் எம்மிடையே உலாவிவருகின்றார் இதன் மூலம் அங்கவீனத்தன்மையுள்ள மக்களின் பலமாக அவர் காணப்படுகின்றார்.
பொதுவாக பற்றுறுதி அற்றநிலையிலேயே

அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் வாழுகின்றார்கள்.
அதனாலேயே அவர்கள் தங்கள் நிலைகளில் இருந்து விடுதலை பெறுவதில்லை. என்ற நம்பிக்கை எம்மிடையே உலாவுகின்றது. ஆனால் இதற்கு எதிராக அனேகரை குணப்படுத்திய ஆண்டவர் தன்னுடைய காயங்களை குணப்படுத்தாத நிலை மூலம் அங்கவீனத்தன்மைக்கும் பற்றுறுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற கருத்தியலை முன்வைக்கின்றார். இதன் மூலம் அங்கவீனத்தன்மையுள்ள மக்களின் மனித மாண்பு பாதுகாக்கப்படுகின்றது.

உடைக்கப்பட்ட கிறிஸ்து உயிர்த்தெழுதலின் பின்னர் எம்மாவூருக்கு சென்ற சீடர்கள் மத்தியில் இயேசு திருவிருந்தினை அனுஸ்டித்தார்

அதேவகையில் இன்றும் நாம் கிறிஸ்துவின் பிரசன்னத்தை, மரணத்தை, உயிர்த்தெழுதலைர, மீண்டும் வருவதை நினைவு
கூறும் வகையில் ஐக்கிய மேசையன்டை வருகின்றோம். எனினும் உடைக்கப்பட்ட அல்லது அங்கவீனமாக்கப்பட்ட இயேசுவையே நாம் அங்கு நினைந்து கொள்கின்றோம். ஆனால் கவலைக்குரிய காரியம் என்னவெனில்

அங்கவீனமாக்கப்பட்ட இயேசுவின் சரீரத்தையும் இரத்தத்தையும் வழங்குவதற்கு அங்கவீனத்தன்மையுள்ள மக்களுக்கு திருச்சபையில் இடமற்றிருப்பது கவலைக்குரிய காரியமே எனினும் இம்மக்களே உரிமையை இன்னும் வலுப்படுத்தும் வகையிலேயே இயேசுவில் திருவிருந்தும் காணப்படுகின்றது. எனவே அங்கவீன மக்கள் அற்ற திருச்சபை அங்கவீனத் திருச்சபையே என்பது எனது முடிவாகும்.

அங்கவீன கடவுள்

வரலாற்றில் கடவுள் தன்னை பலவழிகளில் வெளிப்படுத்தியுள்ளார். அங்கவீனத்தன்மையுள்ள கடவுள் தன்னை ஓர செயலற்ற, செயற்படமுடியாத கடவுளாக பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அனேக வேளைகளில் திருமறையில் இறைவா நீர் எமது துன்பங்பகளை ஏன் காணாது இருக்கிறீர். ஏன் அவற்றை கோளதிருக்கிறீர் போன்ற நிலைகளில் இறையவரை பார்க்கும் தன்மைகள் திருமறையில் உள்ளன. மேலும் அன்னை திரேசாவின் கூற்றுப்படி நாமே இறைவனின் கரங்களும் கால்களுமாம் நாம் செயற்படாதபோது இறைவனின் செயற்பாட்டை இவ்வுலகம் உணரமாட்டாது என்கிறார். இதன் மூலம் கடவுளின் அங்கவீனத்தன்மை புலப்படுகின்ற தல்லவா எனவே கடவுளை எப்பெழுதும் சர்வவல்லமையுள்ள தன்மை நிலையில் இருந்து அவரின் அங்கவீனதன்மையும் புரிந்துகொள்ள அங்கவின மக்கள் இவ்வுலகை சவாலிடுகின்றனர்.

நிறைவாக, அங்கவீனதன்மையான மக்கள் கடவுளின் சாயலில் படைக்ப்பட்டவர்கள் இவர்கள் வேற்றுமையில்
ஒற்றுமையை உருவாக்க உலகை அழகுபடுத்த கடவுளின் சிறப்புப் படைப்புக்கள் ஆகும். இந்த மக்களின் உரிமைக்காக ஆண்டவர் இயேசு தமது வாழ்வையும் பணியையும் முழுமையாக அர்ப்பணித்தார். அவர் கடவுளால் அப்பணியை எடுத்துச் செல்ல உலகத்துள் அனுப்பட்டார்
என்பதனை தனது போதனைகள், புதுமைகள், சிலுவை, மரணம், உயிர்ப்பு ஆகியவைகளின் ஊடாக உலகத்திற்கு வெளிப்படுத்தினார். இப்பணியை அவர் திருச்சபையிடம் கையளித்துள்ளார்.

 எனவே திருஅவை தனது வழிபாடுபாடல்கள் சமூக செயற்பாடு திருமறையை அஙகவீன மக்களின் பக்கத்தில் இருந்து படித்தல் இறையவரை அஙகவீனத் தன்மையுள்ளவராக அங்கீகரித்தல் அவர்களுக்கான புதிய இறையியலை உருவாக்குதல் ஆகிய செயற்பாடுகளின் ஊடாக இம்மக்களின் உரிமைககாகநாமும் செய்ற்படமுடியும்.

<sub>அருட்பணி.அருளம்பலம் ஸ்ரிபன்</sub>
அருட்பணி.அருளம்பலம் ஸ்ரிபன்

இலங்கை.