அன்பான இறைமக்களே!
உலக மீட்பர் இயேசுவின் திருப்பெயராலே உங்கள் அனைவரையும்
இயேசு இயக்கத்தின் ஊடாக வாழ்த்துகிறேன்.

சுயவெறுப்பு என்பது கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாததாகும். ஏனெனில், அதுதான் ஒருவரின் பண்புநலனை உருவாக்குகின்றதாய் உள்ளது.

சுயவெறுப்பு ஒரு பற்றுறுதியாளருக்குள் கடவுளை எல்லாவுக்கும் எல்லாவுமானவராகவும், தம்முடைய நிறைவுநிலைக்கான முழுமையான மூலாதாரமாகவும் உள்ளார் என்பதை கண்டுணர ஊக்குவிக்கின்றதாய் உள்ளது.

ஒரு கிறிஸ்தவர் தம்மை தாமே வெறுத்தல் என்பது அவரது சுய கண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தெரியாமல் இருந்தாலும், அல்லது முக்கியத்துவமற்றதாக தோன்றினாலும், கடவுளின் மாட்சிமைமிகு இறையாண்மையைக் குறித்த விழிப்புணர்வைப் பெற்றிட செய்கிறது.

சுயம் குறைந்து கொண்டே போக போக இயேசு கிறிஸ்து நம்முடைய மீட்பர் அரசர் என்கின்ற எண்ணம் அதிகமதிகமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இயேசு தம்முடைய அடியவர்களுக்கு இறகு படுக்கை கொண்ட வாழ்வை வழங்குவதில்லை. அவர் தனிமனித ஒழுக்கம் நிறைந்த ஒரு முழுமையும் தெளிவுமான வாழ்வை அருளுகின்றார். நாம் சுயஅழிப்பு செய்துகொள்ளாத, சுயநலமற்ற ஒரு சீரான வாழ்வு வாழ்ந்திட அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

நாம் நிலைவாழ்வினை பெற்றிருக்கலாம் அதனை கடவுளே கொடையாய் தந்திருக்கிறார். நாம் கடவுளின் அருளால் பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கலாம். அதற்கான தெளிவான வழி நமக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நாம் பெற்றிருக்கும் மீட்பு தொடர்ந்து மேம்பட வேண்டும், தொடர்ந்து அருளில் வளர்ந்திட வேண்டும், அது சுயவெறுப்பின் வழியாக மட்டுமே முடியும்.

ஆண்டவரோடு இணைந்து பயணித்தல் என்பது கீழ்ப்படிதல் நிறைந்த வாழ்வு வாழ்தல் ஆகும். ஒருவரது ஆன்மீக வாழ்வு வளர்ந்துபெருகிக் கொண்டே இருக்க வேண்டுமெனில் நாம் நம்முடைய சுயத்தை சாகடிக்க செய்வதில் விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

தனிமனித ஒழுக்கத்தைத் தவிர்க்கும் எவரும் வெற்றிபெற்ற மனிதராகவோ பயனுள்ள மனிதராகவோ வாழ இயலாது.

டால்ட்டன் மனாசே

எல்லா கிறிஸ்தவரின் வெற்றிக்கும் திறவுகோல் கடவுளின் அருள் தான் எனினும், பற்றுறுதியின் வழியாக அருளால் வெற்றி பெறுகிறோம் என்பதையும், ஒழுக்கம் நிறைந்த தனிமனித வாழ்வைப் புறந்தள்ளுதல் அல்லது தவிர்த்தல் என்பது நம்முடைய தனிமனித ஆன்மாவை அழிவில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்பதை மறந்துபோகக்கூடாது.

தன்னலமிலா பொதுநல வாழ்வை நாமும் கடைபிடிப்போம்.

மறைத்திரு. டால்ட்டன் மனாசே
மறைத்திரு. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை


மறைத்திரு. டால்ட்டன் மனாசேயின் மற்ற கட்டுரைகளை படித்துப் பயன்பெறுங்கள்

2 thought on “உபவாசம் என்பது சுயவெறுப்பு”
  1. தேவையான சொற்கள்
    காலத்திற்கேற்ற கருத்துரைகள்
    வாழ்வின் வேலிகள்
    ஆன்மிக அருளுரைகள்
    நல் வாழ்வின் அடையாளங்கள்
    நான் மறைந்து நாம் எனும்
    உலக கண் நோக்கிய சிந்தனைகள்
    சொல் செயல் ஒன்றிணையும்
    இறை சிந்தனை மணம் வீச்சுக்கள்

    உம் எழுத்துக்கள் உயிர் பெறட்டும்
    இறையரசின் புதல்வன் துணை
    உமது வாழ்வின் வசந்தமாகட்டும்

    எழுத்துப் பணிச் சிறக்க வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    சகோதரன் அன்பு, நெய்வேலி.

    1. ஊக்கமளிக்கும் உயரிய உம் வாழ்த்துதலுக்கு நன்றி ஐயா.

Comments are closed.