மேலறைப்பேச்சு 5


லெந்து காலத்தின் ஐந்தாம் நாள் தியானம்
திருமறைப் பகுதி: தூய யோவான் 13:31-33

இயேசுவின் வியத்தகு அன்பு யூதாஸின் மீட்புக்காக ஊற்றப்பட்டது ஆனால் அவன் மனம் மாறவில்லை. இயேசு தனது தியாக அன்பினாலே நம் மீட்புக்காக தம் வாழ்வை அற்பணித்து பிதாவின் சித்தத்தை நிறைவு செய்கிறார். அவரும் பிதாவும் மகிமைப்படும் வேளையும் இதுதான்.. நிலத்திலே விழுந்து மரிக்கும் கோதுமை மணியின் மகிமைக்குத் தன் மரணத்தை 12:23:24 வசனங்களில் ஒப்பிடுகிறார். தமது சீடர்களிடம் பிரியா விடை பெறும் வேளையும் இதுதான்.. ஒரு தாயின் அன்புடர் இயேசு சீடரை “பிள்ளைகளே” (குழந்தைகளே) என்று அழைக்கிறார். இயேசு இப்பொழுது சொல்வது 7:33-34ல் யூதருக்கு சொன்ன ”நான் போகிறேன்; அங்கே நீங்கள் வர இயலாது” என்ற செய்திதான் ஆனாலும், 7:34ல் “என்னைக் காணமாட்டீர்கள்” என்று யூதருக்கு சொன்ன வார்த்தைகளை சீடருக்கு சொல்லாமல் விடுத்தது “மீண்டும் சந்திப்போம்” என்ற நம்பிக்கையை சீடர்களுக்குக் கொடுக்கிறது.

அன்பு தங்கை, தம்பி, ”நான் போகிறேன்; நீ என்னைப் பின் தொடர முடியாது.” என்று இயேசு சொன்னால் நீ என்ன செய்வாய்?அவரை விடாமல் கட்டிப்பிடித்துக்கொள்வாயா அல்லது அகிலவுலக நன்மைக்காக அவரை விட்டுக்கொடுப்பாயா? “குழந்தாய்” என்று அவர் உன்னை அழைத்த பொழுது முத்தத்துடன் விடைபெறும் ஒரு தாயின் அன்பை உணர்ந்தாயா?

ஜெபம்

என் நேசர் இயேசுவே, உமது அன்பின் மென்மையை நான் உணருகிறேன். மரிப்பதின் வழியாக மகிமை பெறுவதின் தீர்மாணத்தை நான் புரிந்துகொள்கிறேன். உமது மகிமையிலே எனக்கும் பங்குண்டு. உமது மரணத்தினோலேதானே நான் தித்திய வாழ்வு பெற்றேன்!

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், நீதான் என் மகிமையின் கிரீடம், என் இதயத்தின் மகிழ்சி. தன்னலமற்ற வாழ்க்கயின் மேன்மையை கண்டுகொள்ள என்னோடு நடந்து வா பார்ப்போம்..

Devotion for the fifth day in Lent
Read John 13:31-33


The amazing love of Jesus poured out to redeem Judas; but he walked away. Jesus turns his self giving love towards laying down his life for us in obedience to the Father. This is an occasion for mutual glorification of the son and the Father. Jesus had earlier (12:23, 24) compared his death to the glory of the dying seed. It is also the time for Jesus to bid farewell to his disciples. He speaks to the “little children” with the tenderness of a mother. He tells them the same message he told the Jews earlier in 7:33-34 about going away in a little while where they cannot come. But he leaves his disciples a lovely ray of hope of finding him by withholding the phrase “You will not find me” he had told the Jews.

Dear sister / brother! What would be your response to Jesus if he told you, “I am going; you cannot follow me?” Would you hold on to Jesus for yourself or let him go for the benefit of the whole world? Can you feel a mother’s “goodbye kiss” when he calls you, “little child”?

Prayer
My beloved Jesus, I feel your tenderness and love. I understand your commitment to glory by dying. I am happy to be part of your glory; you gave me eternal life by your dying.

Jesus might say…..

My child, You are certainly the crown of my glory and the joy of my heart. Walk with me to comprehend the glory of selfless living.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா