Healing Ministry Sunday
  • 13 பெப்ரவரி 2022

நோய்களை குணமாக்குதல்
Healing in Sickness

  1. முதலாம் உடன்படிக்கையில் காணப்படுவதைப் போன்று இரண்டாம் உடன்படிக்கையிலும் சுகமளித்தலை நாம் காணலாம். உளர் (Fullar) என்ற அமெரிக்கா இறையியலாளன் இயேசுவின் புதுமைகளை மூன்றாக பிரிக்கின்றார்.
    முதலாவதாக நோய்களை குணப்படுத்தல்,
    இரண்டாவதாக பிசாசுகளை துரத்துதல்,
    மூன்றாவதாக இயற்கைக்கு எதிராக ஆற்றப்பட்ட புதுமைகள் என வகைப்படுத்துகிறார். இங்கு சுகமளித்தல் முதலாவது நிலைக்குள் வருகின்றது. இயேசு வாழ்ந்த காலத்தில் அப்போலினியஸ் என்பவரும் புதுமைகளை ஆற்றியுள்ளார். அவர் தனது சொந்த பெயர் புகழுக்காகவும் பணத்திற்காகவுமே இவைகளை புரிந்துள்ளார். ஆனால், ஒத்தமை நற்செய்திகளின்படி இயேசு மக்கள்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே இவைகளை செய்துள்ளார். மாறாக, யோவான் நற்செய்தியின்படி இறையரசின் அடையாளங்களாக இவைகள் ஆற்றப்பட்டுள்ளன.

2. முதலாம் உடன்படிக்கையின்படி விடுதலைப்பயணம் / யாத்திராகமம் 4:10-17 நோய்கள் இறையவரால் உண்டாக்கப்படுகின்றன என்ற கருத்தியல் முன்வைக்கப்படுகின்றது. அவரே அதற்கு காரணர் எனக் கூறப்படுகின்றது. இது இஸ்ராயேலர் மக்கள் கடவுளைக் குறித்து கொண்டிருந்த தவறான கொள்கையாகும். இப்பேர்ப்பட்ட அநேக தவறான கொள்கைகள் திருமறையில் காணப்படுகின்றன. இவைகள் குணப்படுத்தப்படவேண்டும். இப்பேர்ப்பட்ட தவறான கொள்கையையே நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கின்றோம். யோவான் 9:1-7ன் படி ஒரு பார்வை இல்லாமல் பிறந்தது ஒன்றில் அவருடைய தவறாகவோ இல்லையேல் அவரது பெற்றோரது தவறாகவோ இருக்கலாம் என யூதர்கள் எண்ணினர். ஆனால், இப்பேர்ப்பட்ட தவறான கொள்கையை இயேசு சவாலிட்டு சுகமளித்தார். இங்கு, தனி நபர் பெற்றுக் கொண்ட சுகத்தைவிட கொள்கையை சவாலிட்டு அம்மனிதரை கொள்கையிலிருந்து விடுதலை செய்ததே மிகப் பெரிய சுகமளித்தல் ஆகும். இன்றும் விதிக் கோட்பாடு, கர்மக்கோட்பாடு போன்றவற்றால் பலர் கட்டுப்பட்டுள்ளனர். இவர்களை இச் சமுதாய ஒடுக்குமுறை கட்டுகளிலிருந்து விடுதலை செய்வதே மிகப் பெரிய சுகமளித்தல் ஆகும்.

3. இரண்டாவது உடன்படிக்கையின்படி 2 கொரிந்தியர் 12:6-9ல் இங்கு பவுல் தன்னிடத்தில் இருந்த முள்ளைப் பற்றி பேசுகின்றார். இம்முள்ளு காய்ச்சலாகவோ அல்லது கண்பார்வை பிரச்சினையாகவோ இருந்திருக்கலாம் என வல்லுனர்கள் கூறுகின்றனர். எனினும், இவைகளைக் குறித்து 3 முறை கடவுளிடம் மன்றாடின வேளையிலும் கடவுள் இவருக்கு சுகமளிக்கவில்லை. மாறாக, என் கிருபை உனக்கு போதும் என்கின்றார். இதன்படி, புதுமைகளைவிட சுகமளித்தல் பலமானதாகும். ஆனால், இன்றைய நாட்களிலே அங்கவீனத் தன்மையுள்ள மக்கள் விசுவாசக் குறைவினாலேயே சுகப்படுத்தப்படுவதில்லை என்ற கொள்கை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் அற்புதங்களைவிட கடவுளின் கிருபை மேலானது என்ற கொள்கை மேலோங்க வேண்டும்.

  1. விடுதலைப்பயணம் 4:10-17
  2. சங்கீதம் 103:1-10
  3. 2 கொரிந்தியர் 12:1-10
  4. யோவான் 9:1-7

மாற்கு 1:40-45ல் இயேசு தொழுநோயுள்ள ஓர் மனிதனை சுகப்படுத்தியதைவிட அவனை தொட்டதன் மூலம் சமூகத்தில் வாழ அழைத்த அங்கீகாரமே மிகப் பெரிய புதுமையாகும். மேலும், மாற்கு 10:46-52 வரையுள்ள பகுதியில் பர்த்திமேயு என்ற பார்வையற்ற மனிதனுக்கு பார்வையளித்ததைவிட அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் ஆலயத்திற்குள் செல்ல அளித்த அனுமதியே மிகப்பெரியதொன்றாகும். மாற்கு 1:25-35ல் அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்ட மனிதனை இயேசு குணப்படுத்தியதனூடாக கடவுளுடைய அரசில் தீய ஆவியை விட தூய ஆவிக்கு அதிக பலம் உண்டு என்ற செய்தி வலுப்படுத்தப்படுகின்றது. இவ்வாறாக, புதுமைகளை சமூகப் பார்வையுடன் பார்த்தல் அவசியம்.

சுகமளித்தல் நற்செய்திகளில் வெறுமனே தனிமனித விடுதலையை சுட்டிக்காட்டாமல் சமூக விடுதலையை எடுத்துக் காண்பிக்கின்றது.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை

One thought on “குணமளிக்கும் ஞாயிறு”
  1. Wonderful thought provoking dear Iyah. Regarding Paul he said to be physically challenged. One of his leg is ubnormal to travelling.

Comments are closed.