மேலறைப்பேச்சு 4

லெந்து காலத்தின் நான்காம் நாள் தியானம்
திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 18-30

யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசு அறிந்து ஆவியிலே கலங்கினார். எனினும் இரட்சகரின் அன்பு குன்றவில்லை. இந்த அன்பின் அடயாளமாகத்தான் ஒரு கவளம் உணவை அவர் யூதாஸுக்குத் தந்தாரோ? இந்த பாசத்தின் வெளிப்பாடுகூட யூதாஸின் இருளை அகற்றவில்லையே! அவன் தனது விகாரமான திட்டத்தை செயல்படுத்த எழுந்து இரவின் காரிருளுக்குள் நடந்துவிட்டானே!


எனக்கு அன்பான தங்கை / தம்பி, இயேசுவுக்கு யூதஸ் காட்டின பாராமுகம் உனக்கு ஒர் எச்சரிக்கை என்பதை அறிவாயா? இயேசுவுக்கு இவைகள் உகந்தவை அல்ல என்று தெரிந்தும் விடாப்பிடியாக உன் திட்டங்களை செயல்படுத்த முற்படுகிறாயா? உனக்கு இழப்பு ஏற்படினும் சுயவெறுப்புடன் இயேசுவுக்கு இசைய உன் திட்டங்களை மாற்றத் துணிவாயா? சோதனை வேளைகளில் சாத்தானுக்கு எதிர்த்து நிற்க தேவையானது என்ன என்று உனக்குத் தெரியுமா?

ஜெபம்

இயேசுவே, என் இனிய மீட்பரே, உம்முடைய திருமுகப் பிரகாசத்தைத் துறந்து நான் தெரிந்துகொண்ட என் வாழ்வின் இருளான பகுதிகளில் ஒளியேற்றும். தயவாக என்னை மன்னியும். உமது அன்பினாலும் இறக்கத்தினாலும் என்னை உம் மந்தையில் சேர்த்துக்கொள்ளும்.

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், உன் பெலவீனத்தை நான் அறிவேன். ஆகவேதான் நீ தவறு செய்யும்போதுகூட நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னைத் தேடி வரும்போது நான் மகிழுகிறேன்; உன் வாழ்வை நீ அற்பணிக்கும்போது அதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். வழி தடுமாறும் வேளைகளில் என்னைப் பற்றிக்கொள்; நான் உன்னை வழி நடத்துவேன்.

Devotion for the fourth day in Lent
Read John 13:18-30

Jesus knew Judas Iscariot was to betray him and he was troubled. However, the saviour’s love remained unchanged. Was the morsel of food he gave Judas an expression of his love? This expression of love did not dispel the darkness in him. Judas continued with his dark plan and went out into the dark night.

My dear sister / brother! Is Judas’ response to Jesus a warning to you? Have you held on to your plans knowing Jesus did not approve them? Do you have the courage to align your plans to those of your savior even if it means self denial and personal loss? What does it take to stand against Satan when you are tempted?

Prayer
Jesus, my beloved savior, Shine on me to reveal areas of my life where I had chosen darkness instead of the light of your countenance. Please forgive me. Give me your love and mercy and restore me to your fold.
Jesus might say…..
My child, I love you even when you go wrong because I know your weakness. I rejoice when you seek to return. I take over when you surrender. Hold on to me when you do not clearly see the way ahead. I shall lead you on.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா