மேலறைப் பேச்சு 17

லெந்து காலத்தின் பதினேழாம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 14:29-31

சிலுவையின் கோரமான நிழல் சீடர்களின் மேல் படறுகிற வேளையில் அவர்களுடைய பற்றுறுதி குலைந்துவிடாதபடி இயேசு தமது இதமான முடிவுரையை கனிவுடன் பேசுகிறார். அவர் வேளை வந்தது. பேசுவதற்கு அதிக நேரமில்லை. அந்தகார உலக அதிபதி வரும் வேளை. இருளுக்கு இயேசுவின் மேல் அதிகாரம் ஏதுமில்லை. ஆயினும் பிதாவின் மேல் அவர் கொண்ட அன்பின் நிமித்தம் உலகத்தின் ஒளியான இயேசு தமது வாழ்வை தானாக மனமுவந்து அர்ப்பணிக்கிறார். ஒருவரும் அதை அவரிடமிருந்து பறிக்க முடியாது. சிலுவை தோற்றுப் போகவில்லை. அன்பும் கீழ்ப்படிதலும் வெற்றிகரமாக சிலுவையில் வெளிப்பட்டது. இயேசு பல முறை பிதாவின் அன்பில் தான் திளைத்தது பற்றி சொல்லியிருக்கிறார். இங்கு மட்டும் தன்னுடைய அன்பை குறிப்பிடும் வண்ணம் (14:31) “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்கிறார். அவர் வாழ்வு பிதாவுக்கு அவர் அளித்த அன்பின் காணிக்கை.

அன்பு தங்கை / தம்பி! இயேசுவின் வலி, வேதனை, அவமானம், துன்பம் அனைத்தும் நலமானது தான் என்பாயா? கடவுளுக்கு உன்னுடைய அன்பின் காணிக்கையாக என்ன கொடுப்பாய்?

இயேசுவே, என் ஜீவ ஒளியே, எனக்காக நீர் செய்த தியாகமும் சகித்த துன்பமும் எவ்வளவு பெரியது! அன்பினாலே விட்டுக்கொடுப்பதினால் பெறும் வெற்றியை நான் புரிந்துகொள்ள எனக்கு துணைபுரியும்

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், என் பிதாவை நான் நேசிக்கும் அளவுக்கு நான் உன்னையும் நேசிக்கிறேன். நான் சிலுவையை ஏற்றது பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படியவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; உன்மேல் கொண்ட அன்பினாலும் கூடத்தான். என் சிலுவையின் வெற்றியே உன்னுடய மீட்புதானே.

Devotion for the seventeenth day in Lent

Read John 14: 29-31

The concluding words of comfort are carefully spoken to help the disciples believe in Him when the horror of the cross unfolds before them. The hour had come; there is little time to talk. The power of darkness – ‘the ruler of this world’ was coming. The irony of the conflict is that the power of darkness has no power over Jesus. Yet out of his love for Father, Jesus the light of the world in obedience to the Father’s commandment lays down his life voluntarily and willingly. Nobody can snatch it from him. The cross was not a failure. It is a victorious expression of love and obedience. There are passages which talk about how Jesus delights in Father’s love. This is the only place in the Gospel where Jesus speaks of his love for the Father and says, (14:31) “I love the Father.” His life is an offering of his love for the Father.
Dear sister / brother, how do you justify the pain, shame, suffering and death of Jesus? What do you have to offer if you love God?

Prayer:
Jesus, the light of my life, I am touched by the sacrifice and suffering you submitted to on my account. Help me understand the victory of willing submission in love.

Jesus might say…..
My child, I love you as much as much as I love the Father. I submitted to the cross not only in obedience to the Father, but also because I love you. My victory on the cross is your salvation.

James Srinivasan & Grace.

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா