மேலறைப் பேச்சு 15

லெந்து காலத்தின் பதினைந்தாம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 14:25-27

25ம் வசனத்தோடு இயேசுவின் போதனை முடிந்துவிட்டதா? இயேசு தொடர்ந்து;பேசுகிறார் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டே தான் இருக்கிறார். இயேசுவின் போதனை எழுதிமுடித்து, மூடி, முத்திரையிட்டு, கட்டின மூட்டையல்ல. அது தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக பரிணாம வளர்ச்சிப் பெற்று பலருடைய வாழ்விற்கு திறனூட்டமும் உயிரோட்டமும் தந்துகொண்டுதான் இருக்கிறது. நினைப்பூட்டுகிறவராக அனுப்பப்பட்ட தூய ஆவியானவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கேற்ப மாறிவருகிற கிறிஸ்தவ பொறுப்பு பற்றிய சிந்தனைகளை இயேசுவின் போதனைகளுடன் இசைவுபடுத்தி, ஒப்பிட்டு, சீர்தூக்கி கருத்து குறையாவண்ணம் பாதுகாப்பவர் அவரே. கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத பழக்கங்களையும் கொள்கைகளையும் ”தீயது” என்று புறக்கணிக்கிறவரும் அவரே. (கவனிக்கவும்: தூய ஆவியானவர் பற்றிய இரண்டாவது கூற்று: “போதிக்கிற ஆவி”.

எனக்குப் பிரியமான தங்கை, தம்பி, இயேசுவின் போதனை காலாவதி ஆகிவிட்டதாக நினைக்கிறாயா? காலத்திற்கேற்ப அவற்றை புதுமைப்படுத்துகிறவர் யார்? இயேசு தரும் சமாதானம் “உலகம் தர முடியாத்து” என்பதின் பொருள் என்ன? இதயத்தில் கலக்கம், பயம் என்பவை என்ன? உன் இதயத்தில் இவை இருந்தால் நீ என்ன பண்ணுவாய்?

நினைப்பூட்டும் தூய ஆவியானவருக்காக நன்றி. உம்முடைய போதனைகளை என்னுடைய இன்றைய சூழலுக்கேற்ப அவர் பொருள்பட செய்கிறார். உம்முடைய எதிபார்ப்புக்கு ஏற்ப நான் வாழவில்லையோ என்று சிலவேளைகளில் சோர்ந்து போகிறேன், ”எனக்கு உதவும் இயேசுவே!”

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், ”எனக்கு உதவும் இயேசுவே!” என்று நீ செய்த சிரு ஜெபம் மிகவும் இனிமையாது. இரண்டு விதங்களில் நான் உனக்கு உதவுகிறேன்: ஒன்று, திடன்கொள் – என்னிடத்தில் எந்த நோக்கமும் இல்லை தண்டனையும் இல்லை; இருப்பதெல்லாம் அன்புதான். கலங்காதே!. இரண்டு, தூய ஆவியானவரின் ஆலோசனையின்படி நடக்க, உனக்கு தேவையான உதவி என்னிடத்தில் உண்டு. உன் பயணம் கடினமாகும் வேளையில் தோள் கொடுத்து உதவ நானிருக்கிறேன். பயப்படாதே!

Devotion for the fifteenth day in Lent

Read John 14:25-27

Does verse 25 seem to be a concluding statement of the teaching of Jesus? We know Jesus continues to speak. He speaks to us even today. Teaching of Jesus is not a conclusively written, closed and sealed document. It has been a dynamic, lively, and empowering and ever growing word touching people’s lives down the centuries. It is the Holy Spirit, the Counselor who continues the teaching of Christ in a new way. As a “REMEMBRENCER” he relates all new understanding of Christian responsibility to the teaching of Jesus and validates them as part of his teaching. He is the dynamic interpreter of our life situations to the standards of Christ’s teaching. Holy Spirit is also the one who reveals to us antichristian practices and heretic interpretations in our churches today. (Note: Second Paraclete saying: Holy Spirit- “the spirit of teaching”)
Dear sister, brother, Do you think the teaching of Jesus is out dated? Who transforms the teaching of Jesus to be relevant to our times? Why does Jesus say his peace is “out of the world peace?” What does ‘a heart that is troubled and afraid’ mean? What will you do if yours is?

Prayer:
Lord Jesus, I thank you for the remembrancer’s work of making your teaching dynamically meaningful to me every day. Sometimes I am afraid I do not measure up to your expectation. Help me Jesus!

Jesus might say…..
My child, You just said the sweetest short prayer: “Help me, Jesus!” I shall help you in two ways: One, take heart! with me, there is neither expectation nor condemnation – just love. And two, Receive from me all the help you need to follow the guidance of the Spirit. Lean on me heavily when the journey gets tough.

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா