“இயேசுவும் பெண்களும்” (Jesus and Women)

– – அருட்பணி ரா. ரூபன் பிரதீப்

எம் எல்லோருடைய வாழ்விலும் பெண்கள் பெரும் பங்குவகிக்கின்றனர். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக இன்னும் பல வகையிலே. இவ்வாறு நாம் பூமியில் கால்பதித்த காலம் முதல் நாம் பூமியிலிருந்து விடை பெறும் ; வரை இப்பூமியில் பெண்ணானவள் எம்மோடு பயணிக்கிறாள். வரலாற்றில் இருந்து இன்று வரை பெண்கள்

பல விதமான முறையிலே துன்பப்படுகிறார்கள், துயரப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். நடைமுறை உலகிலும் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, பொருளாதார, அரசியல், சமய, சமூக ரீதியாக துன்பப்படுகிறார்கள். இந்திய தலித் பெண்ணியலாளர்களின் கருத்துப்படி பெண்கள் சாதி, வகுப்புவாத, பால், நிற ரீதியாக ((caste, class, gender and colour)) சமுதாயத்தில் ஒடுக்கப்படுகிறார்கள். 

இயேசுவின் காலத்தில் பெண்களின் நிலை

இயேசு வாழ்ந்த காலத்தில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஏழைகளின் நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இக்காலம் ‘‘Patriarchal Society’’ என அழைக்கப்பட்டது. ஆணாதிக்க சமூகமாகவே யூத சமுதாயம் ஆரம்ப காலந்தொட்டு காணப்பட்டது.

❖ பெண்கள்  மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் புறந்தள்ளப்பட்டவர்களாகவும் கருதப்பட்டனர்.
❖ பெண்ணானவள் சமையலறைக்குள்ளே மட்டுமே இருக்க வேண்டும். அடுப்பங்கரையே அவர்களது
உலகமாகக் கருதப்பட்டது.(Greek Understanding)


ஆண்டவராகிய இயேசுவின் வாழ்வில் பெண்கள் விசேடமான இடத்தை வகிக்கின்றனர். இயேசு ஒரு பெண்ணின் மூலமாகவே இவ் உலகிற்கு வந்தார். இவ் உலகில் அவர் பல பெண்களோடு உரையாடி, அவர்களோடு இணைந்து பணிபுரிந்தார். இயேசுவை ‘மெசியா’ என்று ஒரு  பெண்ணே முதன் முதலாக அவரைப்பற்றி தனது ஊரில் பறைசாற்றினார்.(யோவான் 4: 29, 39). உயிர்த்தெழுதலின் பின் இயேசு முதன் முதலாக ஒரு பெண் முன்பாக தோன்றினார். மற்றவர்களுக்கு    இச்செய்தியை  அறிவிக்கும்படி கூறினார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்டு, தாழ்வாகக் கருதப்பட்ட பெண்களோடு இயேசு பணிபுரிந்தார். இயேசு தனியாக பணியாற்றவில்லை. அவர்களோடு இணைந்து பணிபுரிந்தார்.  ஆண் ஆதிக்க சிந்தனையிலிருந்து சமத்துவமான பாதையில் இயேசு அனைவருடனும் ஒன்றாக பயணித்தார். ((Shift from Male Dominant thinking).). பெண்களோடு உரையாடினார், உணவருந்தினார், அவர்களை தொட்டு சுகப்படுத்தினார், அவர்களை மதித்தார், அவர்களை நேசித்தார்.

இயேசு சமத்துவமான சீடத்துவததை (Disciples of equals) பெண்களோடு உருவாக்கினார் என எலிசபெத் ப்ளோரன்ஸா என்ற பெண்ணியலாளர் கூறுகிறார்.

தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை வெறுத்து, தினமும் அவமானத்தாலும் ; விரக்தியால் வாடிய பெண்களை சமூகம் ஒதுக்கித் தள்ளியது. ஆனால் இயேசு அவர்களை வெறுக்கவில்லை.ஒதுக்கவில்லை. இயேசுவின் இறை அனுபவம் “அப்பா” அனுபவமாக இருந்தபோதும், அந்த இறைமையில் தாய்க்கே உரிய பாசத்தைக் காண்கிறார். பிரிந்து போன மகனை நினைத்து கலங்கித் தவிக்கும் ; தாயன்புத் தந்தையாக (லூக்கா 15: 11- 32), ‘கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் ; சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்.உனக்கு விருப்பம் ; இல்லையே’ என சேர்க்கும் ; குணம் ; கொண்ட தாயன்புத் தந்தையாக (லூக்கா13: 34) இனம், மொழி, சாதி, நிறம் ;, குணம், பால் கடந்து உறவு கொள்ளும் அன்பு தாயாக வாழந்தார். இதனாலேயே இவருக்கு அதிக பெண் சீடர்கள் காணப்பட்டனர். இயேசு பெண்களுக்கு கடவுளின் வார்த்தையையும் அன்பையும் கற்றுக்கொடுத்தார். மத்தேயு 12: 50 இல் “விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் ; என சகோதர சகோதரியும் ஆவார்” என்கிறார். 

லூக்கா 10: 38- 42 வசனங்களில் மார்த்தா மரியா வீட்டிற்கு இயேசு செல்லும் சம்பவம் காணப்படுகிறது. அவ் வீட்டில் மரியா இயேசுவின் காலடி அருகே அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ஓர் ரபியின் பாதத்தண்டையில் அமர்வது அவரின் சீடரே முக்கியமாக ஆணகளே அதிகமாக அவ்வாறு அமர்வர். இச்சந்தர்ப்பத்தில் இயேசுவின் போதனையை கேட்கும் ஆர்வத்திலும் அவரை பின்பற்றும் நோக்கத்துடனும் ; மரியா அவ்வாறு அமர்ந்தார். மரியாவின் இச்செயற்பாட்டை இறையியலாளர்கள் “Breaking the barriers” என்று அழைக்கின்றனர்.

லூக்கா 8: 1- 3 இயேசு நகர் நகராய் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை பறைசாற்றி வந்தார். இப்பயணததின் போதும் பொல்லாத ஆவிகளினினறும ; நோய்களினின்றும ; குணமான பெண்கள் சிலரும ; ஏழு பேய்கள் நீங்கப் பெறற மகதலா மரியாவும் ஏரோதின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். மாற்கு நற்செய்திக்கு அமைவாக இயேசுவை கலிலேயாவில் பின்பற்றிய பெண் சீடர்கள் இயேசு சிலுவையில் அறையப்படும் நேரத்தில் தொலையில் இருந்து உற்று நோக்கிக்கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. (மாற்கு 15: 40- 41). இப்பெண்கள் இயேசு மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தனர். ஒரு குருவாக, தந்தையாக, சகோதரனாக, நண்பராக அவர் பெண்களோடு பழகினார்.

நாம் செய்யவேண்டியது

இவ்வாறு இன்றைய சூழ்நிலையில் நமது திருச்சபையில், பாடசாலைகளில், வேலைத்தளங்களில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப்படுகிறார்கள். இயேசுவைப் பின்பற்றும் ; மக்களாய் வரலாற்றில் இயேசுவின் வாழ்க்கையைப் போல நாமும் ; பெண்களை மதிக்கவும் ;, சமமான இடததினை அவர்களுக்குக் கொடுக்கவும ;, அவர்களின் மாண்பைப் பாதுகாக்கவும் ; நாம் உழைக்க வேண்டும். Disciples of equals என்ற கருத்திற்கு அமைவாக சமத்துவமான சீடத்துவததிறகு இயேசு எம்மை அழைக்கிறார்.பெணணில் தோன்றி பெண்ணோடு பிறந்து பெண்ணால் வளர்ச்சியடைந்து பெண்ணிலே மகிழ்ந்து பெண்ணோடு வாழ்க்கை நடத்தும் ஆண்கள் பெண்களை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும் ;.கடவுளின் பணிக்காக கடவுள் ஆண்களையும் பெண்களையும் அழைக்கிறார். முரண்பாட்டு சிந்தனையை நீக்குவோம் ;. அனைவரையும் சமமாக கருதுவோம்.  

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம், பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான Unite to end Violence against Women campaign பிரச்சாரம் (நவம்பர் 25- டிசம்பர் 10) நடைபெறுகிறது – இது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவுகூரும் நாளில் முடிவடையும்,16 நாட்கள் செயல்பாட்டின் முன்முயற்சியாகும். 10 டிசம்பர்).

<strong>அருட்பணி</strong><br><strong>ரா. ரூபன் பிரதீப்</strong>
அருட்பணி
ரா. ரூபன் பிரதீப்

இலங்கை.